
கொரோனா பாதிப்பின் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியாவதற்கு தாமதம் ஆனது. அதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும்
கிடப்பில் போடப்பட்டது. கடந்த மாதம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியானதால், அனைத்து தனியார் கல்லூரிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர்
சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே போல, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்
வரும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டது.
இந்த
நிலையில், திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் 2020-21 ஆம்
ஆண்டுக்கான கலந்தாய்வு செல்போன் வாயிலாக நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை
பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும் www.thiruvikacollege.co.in
என்ற இணையதள முகவரியில் துறை வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் பதிவேற்றம்
செய்யப்படும் என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.