
வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு அளிக்கப்படுவதாக,
கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள
அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்
மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி
தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது கொரோனா
ஊரடங்கால் தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே 2020ம்
ஆண்டு வங்கி பணியாளர் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக இலவச இணையதள பயிற்சி
வகுப்புகள் (24ம் தேதி) நேற்று முதல் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க
கடைசி 26ம் தேதி (நாளை). தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது.
மேலும்
விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.