Skip to content

ரயில்வே போட்டி தேர்வுகளில் பங்கேற்க தமிழக இளைஞர்களுக்கு ஆர்வமில்லை: தேர்வு வாரிய தலைவர் தகவல்:

ரயில்வே போட்டித்தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பெங்களூரூ ஆர்ஆர்பி தலைவர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்தியாவில் ரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட மத்திய துறைகளில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது தகுதித்தேர்வை (சிஇடி) நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை மண்டல பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) சார்பில் என்ஆர்ஏ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், இணையவழியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் (ஆர்ஆர்பி) தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி பேசும்போது, ‘‘சிஇடி தேர்வால் கிராமப்புற தேர்வர்கள்,பெண்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், ஒரே தேர்வர் பலமுறை முதல்நிலைத் தேர்வு எழுதுவது தவிர்க்கப்படும். இதற்கான பாடத்திட்டம் தேசிய அளவில் உருவாக்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து, பெங்களூரூ ஆர்ஆர்பி தலைவர் காசி விஸ்வநாதன் பேசியதாவது: தமிழக ரயில்வேயில் பிற மாநிலத்தினர் அதிகமாக சேருகின்றனர் என்றுகுற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதில் சிறிதளவும் உண்மையில்லை. ரயில்வே பணிகளுக்குதேசிய அளவில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அதேபோல், தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் உட்பட 15மொழிகளில் வழங்கப்படுகின்றன. தேர்வுமுறை அனைத்தும்கணினிமயமாக்கப்பட்டுள்ள தால் இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.
மேலும், பிற மாநிலத்தவர்களைவிட தமிழக இளைஞர்கள்ரயில்வே தேர்வுகளில் குறைந்தஅளவே பங்கேற்கின்றனர். அதனால்தான் பிற மாநில இளைஞர்கள் மத்திய அரசுப் பணிகளில் அதிகம் இடம் பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.