Skip to content

தீபாவளி நாளில் தமிழகத்தில் பலத்த மழை.. நவம்பர் 15ல் சென்னையில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்


சென்னை : தீபாவளி நாளான நவம்பர் 14ம் தேதி நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு. அதேபோல் தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். நவம்பர் 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் காரியகோவில் அணை பகுதியில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, பாளையங்கோட்டை, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் டிஜிபி அலுவலகம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.இதனிடையே சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 15,16ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.