Skip to content

இதை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் தான் அதிகமாம்:

இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலானோர் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அதிகளவு புற்று நோய் தாக்கு கிறது.

பெண்களை மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்தான் அதிகளவில் தாக்குகின்றன.
மரபை விட சுற்றுச்சூழல் தான் புற்றுநோயை அதிகளவில் தீர்மானிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் புற்றுநோயக்கும் தொடர்பு உண்டு.

காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிபொருட்கள் இருந்தால் அதை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. துரித உணவு, சமச்சீரற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மையாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.

பல முன்னணி பிரபலங்களும் கேன்சருடன் போராடி வென்றவர்கள் தான். கேன்சர் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும். கேன்சர் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். உடலில் எந்த இடத்தில் வலி இல்லாத கட்டிகள் வந்தாலும் அதை உடனே மருத்துவரிடம் அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.

நெல்லிக்காய், துளசி, அருகம்புல், வில்வம் புற்றுநோயை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதியும் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது.