Skip to content

உடல் நலம் : *ஒருவருக்கு "ஹைப்போ தைராய்டு" பிரச்சனை எதனால் ஏற்படுகிறது தெரியுமா.??

ஹைப்போ தைராய்டிசம் ஒரு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் ஆகும். நம்முடைய நோயெதிப்பு அமைப்பு நம்முடைய ஆரோக்கியமான செல்களையே தாக்கும் போது ஆன்டி பாடிகளை உருவாக்குகிறது. இதனால் நம் நோயெதிப்பு மண்டலமே நமக்கு எதிராக செயல்படத் துவங்கி விடுகிறது. அதே மாதிரி தைராய்டு சுரப்பி தேவையான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாத போதும் இந்த பிரச்சினை உண்டாகிறது. இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெளிவாக தெரியாது.

ஆனால் கூடிய விரைவிலேயே ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்துவிடும். இந்த ஹைப்போ தைராய்டிசத்தால் இதய பிரச்சினைகள், நரம்பு காயங்கள், கருவுறாமை, மெதுவான வளர்சிதை மாற்றம், குமட்டல், மலச்சிக்கல், நாட்பட்ட சோர்வு, முடி உதிர்தல், குறைந்த பாலுணர்ச்சி, வறண்ட சருமம் மற்றும் விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் தெரிய வருகின்றன.

ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு குறைந்த அளவு மட்டுமே வைட்டமின் டி இருக்கும். இந்த சத்து தான் உடம்பில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் வைட்டமின் டி இவர்களுக்கு குறைவாக இருப்பதால் குடல் கால்சியத்தை உறிஞ்சுவதில்லை. இதனால் இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கிறது. இதைச் சமன் செய்ய தைராய்டு சுரப்பி எலும்புகளில் சேகரிக்கப்பட்ட கால்சியத்தை உறிஞ்ச தூண்டுகிறது. இதனால் எலும்புகள் காலப்போக்கில் பலவீனம் அடைய ஆரம்பிக்கும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் மாற்றம் உண்டாகிறது. எனவே வைட்டமின் டி பற்றாக்குறையை போக்கினாலே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சரி செய்யலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எலும்புகளில் கால்சியம் குறைய குறைய எலும்புகள் மெல்லியதாகி உடைய ஆரம்பித்து விடும். எலும்புகளில் கால்சியம் இழப்புக்கும் வழிவகுத்துவிடும். எனவே ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து இரண்டையும் சரியாக கவனித்து வர வேண்டும்.

ஆயுர்வேத முறையில் இந்த ஹைப்போ தைராய்டிசத்திற்கு என்று சில மருத்துவ முறைகள் உள்ளன. யோகா போன்றவை இதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி ஆயுர்வேத முறைப்படி ஹைப்போ தைராய்டிச நோயாளிகள் எந்த மாதிரியான முறைகளை பின்பற்றி பலன் அடையலாம் என்பதை வாங்க பார்க்கலாம்.

ஆசனங்கள்..

* உஜ்ஜய் பிராணயாமா (மனதை அமைதிப்படுத்தி உடலை வெப்பமாக்கும் யோக சுவாச நுட்ப நிலை )

* சர்வாங்காசனம் (தோள்பட்டை நிற்கும் பயிற்சி) இதுவும் ஹைப்போ தைராய்டிசத்திற்கான சிறந்த யோகா பயிற்சி என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

* நாடி சோதனா பிராணயாமம் (மாற்று நாசி மூச்சுப் பயிற்சி) இது உங்க மெட்டபாலிசத்தை சமன்செய்ய உதவுகிறது.

மேற்கண்ட யோகா பயிற்சிகள் ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று ஆயுர்வேத முறைகள் கூறுகின்றன.

தைராய்டு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

* தைராய்டு நோயாளிகள் அடிக்கடி அவர்களுடைய தைராய்டு அளவை பரிசோதிக்க வேண்டும்.

* தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் தைராய்டு ஹார்மோன் ஒழுங்காக வேலை செய்யும். மேலும் உங்க கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் தேங்கியுள்ள நச்சுக்களை இதன் மூலம் நீக்கி விடலாம்.

* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கிய உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மை உள்ளவர்கள் வைட்டமின் பி அடங்கிய உணவுகளை எடுத்து வர வேண்டும். தினமும் வைட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுப்பது உங்க ஹைப்போ தைராய்டிச பிரச்சனைகளை குறைக்க உதவும்.

* ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தைராய்டு நோயாளிகள் செய்யக் கூடாதவை:

* தைராய்டு நோயாளிகள் புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்ற பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். சிகரெட் புகைப்பதால் தைராய்டு சுரப்பியில் உள்ள அயோடைடு சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் மல்டினோடூலர் கோயிட்ரே சுருங்குவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

* மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளான கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் உணவுகள் வேண்டாம்.

* காபி மற்றும் சர்க்கரைக்கு நோ சொல்லுங்கள்.

* தைராய்டு பிரச்சினைக்கு நீங்களாகவே மருந்து எடுப்பதை தவிருங்கள். மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை மேற்கொண்ட பிறகே மருந்து எடுக்க வேண்டும்.

மேற்கண்ட டிப்ஸ்கள் தைராய்டு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.