Skip to content

பட்டாசு தீக்காயம் ஏற்பட்டால் ஐஸ்கட்டி வேண்டாம் நண்பர்களே!Don't ice cream in case of firecracker burns friends!


கொரோனா காலத்தில் வந்திருக்கும் தீபாவளி என்பதால் பல்வேறு விசயங்களை நாம் மிக கவனமாக அணுக வேண்டும். உணவு முதல் பட்டாசு வரையில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் மற்றவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பனதே.

பட்டாசு வெடிக்கும் போது ஒரு வேளை தீக்காயம் ஏற்பட்டால் நம்மில் பலரும் செய்யும் ஒரு காரியம் ஐஸ்கட்டிகளை அங்கு வைப்பதும், டூத்பேஸ்ட்டினை தடவுவதும் தான். இதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. டூத்பேஸ்ட்டினை வைப்பதால் காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அது அந்த காயத்தினை மேலும் தீவிரப்படுத்தும். இதனால் நாம் முற்றிலும் இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டால் உடனே ஓடும் நீரில் காயத்தை வைக்க வேண்டும். பின்பு முதலுதவி தந்து மருத்துவ சேவையை நாட வேண்டும். ஒரு போதும் வீட்டில் கை வைத்தியம் பார்க்க வேண்டாம். குறிப்பாக கொப்பளங்கள் ஏதேனும் ஏற்படும் எனில் இதனை நீங்கள் முற்றிலுமாக கைவிட்டுவிட்டு அவசர உதவி மையத்தை அணுகுங்கள்.

தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். துப்பட்டா மற்றும் புடவை போன்றவை அணிந்து பட்டாசு வெடிக்கும் போதும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போதும் குறிப்பிட்ட அளவு இடைவெளியை கடைபிடித்து பட்டாசுகள் வெடிக்கவும்.