Skip to content

ISRO Recruitment 2021: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோ நிறுவனத்தில் வேலை:

ISRO Recruitment 2021: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோ நிறுவனத்தில் வேலை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள Director IIST, Director at Semi - Conductor Laboratory பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)

பணி : Director IIST, Director at Semi - Conductor Laboratory

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

Director IIST - விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Director at Semi - Conductor Laboratory - விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

Director IIST பணிக்கு 62 வயதிற்கு உட்பட்டவர்களும், Director at Semi - Conductor Laboratory பணிக்கு 58 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.isro.gov.in/career?field_isro_centrevalue=dos என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் உள் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.isro.gov.in/career அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

source: tamil.careerindia.com