கலப்பு திருமணங்கள் செய்பவர்கள் தங்களை பற்றிய அறிவிப்பை அளிக்க தேவையில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறப்புத் திருமணங்கள் சட்டப்படி, பதிவு அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்களைப் பற்றிய அறிவிப்பை மாவட்ட திருமண அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர் அதனைப் பதிவு அலுவலக நோட்டீஸ் போர்டில் 30 நாட்கள் ஒட்டி வைப்பார். இந்த விதி அடிப்படை உரிமைகளான சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றில் போர் தொடுப்பதாகும் என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் இது தேவையற்றது என்று தீர்ப்பளித்துள்ளது.
இதனால் தம்பதிகள்மீது தேவையற்ற சமூக அழுத்தங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே தங்கள் விவரங்களை வெளியிடலாமா கூடாதா என்பதை தம்பதிகள் முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
.jpeg)




