Skip to content

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை!

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை!

இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை பொறியியல் உதவியாளர்-IV (Production)

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற துறையில் பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

31.01.2021ம் தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரையில்

அதிகாரப்புர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iocl.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dy. General Manager (HR), Barauni Refinery, P.O. Barauni Oil Refinery, Begusarai, Bihar - 851114

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 19.02.2021

அஞ்சல் வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 27.02.2021

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://plis.indianoilpipelines.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.