இந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Contract Medical Practitioners பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
காலியிடங்கள் :
Contract Medical Practitioners பணிகளுக்கு என 05 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 53 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு/ இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official PDF Notification – https://cr.indianrailways.gov.in/cris//uploads/files/1612777288852-CMP2021.pdf