Skip to content

ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் மத்திய கணித அறிவியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் ரிசர்ச் அசோசியேட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.47 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய கணித அறிவியல் நிறுவனம் (IMSc)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Project Assistant - 01
  • Research Associate - 01

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

Project Assistant - அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ, பி.டெக், எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Research Associate - Theoretical Physics பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.47,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.imsc.res.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.imsc.res.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.