Skip to content

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் :

மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. மத்திய அரசின் இந்த சட்டங்களை வாட்ஸ்அப் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய தொழில்நுட்ப விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பேஸ்புக் , இந்தியாவில் மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, மேலெழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தனது புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனாளர்களை வலியுறுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.