1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - அதிகாரி தகவல்
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும்
மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.www.tnsc-ert.org என்ற இணையதளத்தில்
பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை
பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது.30-ந் தேதி வரை விண்ணப்பிக்க
வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.