Skip to content

வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பங்கள் வரவேற்பு :

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள லீகல் ஆபிசர், நிர்வேற்றுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 51 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-

  • Legal Officer - 10
  • Collection & Recovery - 04
  • Officers/ Executives - NRI Business -15
  • Officers/ Executives - POs - 22

மொத்த காலிப் பணியிடங்கள் : 51

கல்வித் தகுதி : எல்எல்பி, பட்டப் படிப்பு முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.southindianbank.com/RDC/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800, இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.southindianbank.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

பாஸ்போர்ட் அலுவலகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்.


பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவியின் பெயர்கள்: Passport Officer (03), Deputy Passport Officer (13)

மொத்த காலியிடங்கள்: 16

மேலாண்மை: மத்திய அரசு

அமைப்பின் பெயர்: பாஸ்போர்ட் அலுவலகம் (Central Passport Organization)

வயது வரம்பு: 56 ஆண்டுகள்

கல்வி தகுதி: Bachelor's degree froma recognized University or Institute

பணி இடம்: Benga;uru, Chennai, Ghaziabad, Cochin, Delhi, Guwahati, Jaipur, Kozhikode, Lucknow, Kolkata, Mumbai, Madurai, Nagpur, Pune, Ranchi, Visakhpatnam

ஊதியம்:

Passport Officer - Rs.78,800 to 2,09,200/-

Deputy Passport Officer - Rs.67,700 to 2,08,700/-

விண்ணப்பிக்கு முறை: Offline

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதிவிறக்கம் லிங்க் கிளிக் செய்து பதிவிறக்க செய்ய வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 31.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: அறிவிப்பு வெளியாகி 60 நாட்கள் விண்ணப்பிக்கலாம்.

Official PDF Notification – https://mea.gov.in/Images/amb1/Vacancy-of-PO-DPO-31-12-2020.pdf

Official Site – https://mea.gov.in/

பிப்ரவரி 18.. "தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு". தவறாமல் கலந்து கொள்ளுங்கள்..!!

திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கிறது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கிறது.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகம், மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது.

இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுகலை பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ, தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம், தனியார் துறை வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யத் தேவையில்லை. முகாமில் பதிவு செய்ய கட்டணம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் தங்களது கல்வி சான்றுகள் மற்றும் சுய விவரங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய ரயில்வே துறையில் 2500+ பயிற்சி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு! நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மத்திய ரயில்வே துறையில் 2500க்கும் மேற்பட்ட பயிற்சி பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 5ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrccr.comல் மார்ச் 5ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

நாளை முதல் மேற்கண்ட இணையதளத்தில் மத்திய ரயில்வே, ரயில்வே ஆட்சேர்ப்பு அப்ரண்டிஸ் பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்றப்படும். தகுதியும் ஆர்வமுள்ளவர்களும் மத்திய ரயில்வே பயிற்சி ஆட்சேர்ப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வண்டி மற்றும் வேகன், மும்பை கல்யாண் டீசல் ஷெட், பரேல் பட்டறை, மன்மத் பட்டறை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை, புனே, நாக்பூர் மற்றும் சோலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சேர்த்து மொத்தம் 2532 காலி பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 5, 2021


நகரம் மும்பை

ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி - 06 பிப்ரவரி 2021 காலை 11 மணி முதல்

ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி தேதி - 05 மார்ச் 2021 மாலை 5 மணி வரை

வண்டி & வேகன் பயிற்சி - 258 பணியிடங்கள்

மும்பை கல்யாண் டீசல் கொட்டகை - 53 பணியிடங்கள்

குர்லா டீசல் கொட்டகை - 60 பணியிடங்கள்

Sr.DEE (TRS) கல்யாண் - 179 பணியிடங்கள்

Sr.DEE (TRS) குர்லா - 192 பணியிடங்கள்

பரேல் பட்டறை - 418 பணியிடங்கள்

மாதுங்கா பட்டறை - 547 பணியிடங்கள்

எஸ் அண்ட் டி பட்டறை, பைக்குல்லா - 60 பணியிடங்கள்

பூசாவல்

வண்டி & வேகன் டிப்போ - 122 பணியிடங்கள்
எலக்ட்ரிக் லோகோ ஷெட், பூசாவல் - 80 பணியிடங்கள்
மின்சார லோகோமோட்டிவ் பட்டறை - 118 பணியிடங்கள்
மன்மத் பட்டறை - 51 பணியிடங்கள்
டி.எம்.டபிள்யூ நாசிக் சாலை - 49 பணியிடங்கள்

புனே
வண்டி & வேகன் டிப்போ - 31 பணியிடங்கள்
டீசல் லோகோ ஷெட் - 121 பணியிடங்கள்

நாக்பூர்

மின்சார லோகோ கொட்டகை - 48 பணியிடங்கள்
அஜ்னி வண்டி & வேகன் டிப்போ - 66 பணியிடங்கள்

சோலாப்பூர்

வண்டி & வேகன் டிப்போ - 58 பணியிடங்கள்
குர்துவாடி பட்டறை - 21 பணியிடங்கள்
மத்திய ரயில்வே பயிற்சி பதவிகளுக்கான தகுதி

கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான (10 + 2 தேர்வு முறைக்கு கீழ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

15 முதல் 24 ஆண்டுகள்
மத்திய ரயில்வே அப்ரண்டிஸ் பதவிகளுக்கான தேர்வு செயல்முறை
மெட்ரிகுலேஷனில் மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) + பயிற்சி பெற வேண்டிய வர்த்தகத்தில் ஐ.டி.ஐ மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2021 க்கு ஆன்லைன் முறை மூலம் நாளை முதல் முதல் மார்ச் 05 வரை 2021 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, ​​ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு பதிவு எண் வழங்கப்படும். ஆர்.ஆர்.சி உடனான கடிதப் பரிமாற்றத்தின் போதும், பிற தகவல்களிலும் விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைப் பாதுகாத்து, குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
ரூ. 100 / -

ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை! அழைக்கும் ஜிப்மர் நிர்வாகம்!!

ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை! அழைக்கும் ஜிப்மர் நிர்வாகம்!!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Research Fellow மற்றும் Senior Trial Coordinator பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.45 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Research Fellow & Senior Trial Coordinator

மொத்த காலிப்பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : Research Fellow பணிக்கு எம்பிபிஎஸ் தேர்ச்சிபெற்றவர்களும், Senior Trial Coordinator பணிக்கு Life Science பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.36,000 முதல் 45,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 09.02.2021 அன்றுக்குள் https://jipmer.edu.in/announcement/jobs எனும் இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

"ரிசர்வ் வங்கியில் வேலை". எவ்வளவு சம்பளம் தெரியுமா.? உடனே அப்ளை பண்ணுங்க..!!

 


இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI)

பணியின் பெயர்: Security Guard

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

பணியிடங்கள்: 241

சம்பளம்: ரூ.10,940 முதல் ரூ.23,700 வரை

கடைசி தேதி: 12.02.2021

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு - ரூ.25

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

https://www.rbi.org.in/

அப்ளே செய்ய (இந்த லிங்க் கணிணியில் மட்டும் செயல்படும்) : https://ibpsonline.ibps.in/rbirpsgdec20/

Recruitment 2021: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் 185 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு :

 Recruitment 2021: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் 185 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு :

TNCSC Recruitment 2021: உதவியாளர், பதிவு எழுத்தாளர், பாதுகாப்பு / காவலாளி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தமிழக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC) வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள், இந்த மாதம் பிப்ரவரி 15 அல்லது அதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்களின் அதிக வயது வரம்பு 30 ஆண்டுகள் ஆகும். பட்டியல் சமூகத்தினருக்கு மற்றும் பட்டியல் பழங்குடியினரை பொறுத்தவரை வயது தளர்வு என்பது, தற்போதுள்ள மாநில சட்டங்களின்படி பொருந்தும்.

TNCSC ஆட்சேர்ப்பு 2021 காலியிட விவரங்கள்

பதிவு எழுத்தாளர் - 62
உதவியாளர் - 72
பாதுகாப்பு / காவலாளி - 51
கல்வி தகுதி: VIII மற்றும் XII வகுப்பு, அதற்கு நிகரான பிற தகுதிகள், பட்டதாரிகள்
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 15 பிப்ரவரி 2021

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர் TNCSC வலைத்தளத்திலிருந்து (www.tncsc.tn.gov.in) விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேவையான ஆவணங்களுடன் (அடையாளச் சான்று, பிறப்புச் சான்று, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமூகச் சான்றிதழ்கள் போன்றவை) பிப்ரவரி 15 அல்லது அதற்கு முன்னர் உள்ளூர் டி.என்.சி.எஸ்.சி அலுவலகத்தில் (TNCSC Office) சமர்ப்பிக்கலாம்.

படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மூத்த மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகம், எண் 1 சச்சிதானந்த மூப்பனார் சாலை, தஞ்சாவூர் - 613001.

இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் ஒரு நேர்காணல் (Job Interview) நடைபெறும். அதேபோல தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தஞ்சாவூரில் பணி நியமனம் வழங்கப்படும். அவர்களின் ஊதிய அளவு மாதத்திற்கு ரூ .6,500 ஆக இருக்கும்.

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் வேலை வேண்டுமா?

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் வேலை வேண்டுமா?
 

இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய நாடாளுமன்றம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Head Consultant, Social Media Marketing (Senior Consultant) , Social Media Marketing (Junior Consultant) , Graphic Designer, Senior Content Writer (Hindi) Junior Content Writer (Hindi) & Social Media Marketing (Junior Associate)

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

கல்வித் தகுதி : 10 மற்றும் 12ம் தேர்ச்சி பெற்றவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 22 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://loksabhadocs.nic.in/ என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பின்னர் ஸ்கேன் செய்து consultants2021-1ss@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.02.2021 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://loksabhadocs.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்தைக் காணவும்.

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:

 

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள் Click Here

கோவை வன மரபியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள Forester மற்றும் Deputy Ranger பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)

பணியிடம் : கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள் : 02

பணி :

  • Forester - 01
  • Deputy Ranger - 01

கல்வித் தகுதி : அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : Level 2 of 7 th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://ifgtb.icfre.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31.03.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The Director, IFGTB, Forest Campus, R.S.Puram, Coimbatore (TN), PIN: 641002.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.03.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு: "ரூ.2,80,000/- வரை சம்பளம்"... டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை..!!

வேலைவாய்ப்பு: "ரூ.2,80,000/- வரை சம்பளம்"... டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை..!!

இந்திய ரயில்வே நிதிக்கழக லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Railway Finance Corporation Limited

பணி: Private Secretary
Hindi Translator
Assistant
Group General Manager
Joint General Manager
Deputy General Manager
Deputy Manager

கல்வித்தகுதி: Degree/B.Com/ LLB/CA/CMA/CS முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணபிக்கலாம்.

வயது வரம்பு: 27 வயது முதல் 40 வயதிர்க்கு உட்பட்டு இருக்கவேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.24,000/- முதல் ரூ.2,80,000/- வரை

கடைசி தேதி: 16.02.2021

மேலும் விபரங்களுக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பானையை கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.

http://irfc.nic.in/uploads/NE_Final.pdf

கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் மெயில் அல்லது உதவி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.

உதவி எண் : 9319275557 ( திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இமெயில் ஐடி: [email protected]

தமிழக அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு:

 

தமிழக அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு Psychology துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, தஞ்சாவூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Counsellor

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Psychology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://thanjavur.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://thanjavur.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் வேலை வேண்டுமா?

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் வேலை வேண்டுமா?

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.டெக், எம்.இ, எம்.எஸ்சி போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காம் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Senior Research Fellow (SRF)

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு M.Tech, ME, M.Sc போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.35,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.drdo.gov.in/home என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://drdo.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் காலியாகவுள்ள Passport Officer, Deputy Passport Officer பணியிடங்களுக்கு அறிவிப்பு:

 

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் காலியாகவுள்ள Passport Officer, Deputy Passport Officer பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைக்கான விபரங்கள்

நிறுவனம்Ministry of External Affairs வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா)

பணி
Passport Officer , Deputy Passport Officer

வேலை
மத்திய அரசு வேலை

காலிப்பணியிடங்கள்

Passport Officer - 03

Deputy Passport Officer - 13

விளம்பர அறிவிப்பு எண்
No.V/IV/575/2/2020

வயது
56

விண்ணப்பிக்க கடைசி தேதி
28/02/2021 (Within 60 days)

கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பள விவரம்


  • Passport Officer- Rs.78800- Rs.209200/-

  • Deputy Passport Officer- Rs.67700- Rs.208700/-

பணியிடம்
Bengaluru [Karnataka], Chennai [Tamilnadu], Ghaziabad [UP], Cochin [Kerala], Guwahati [Assam], Jaipur [Rajasthan], Kozhikode [Kerala], Lucknow [UP], Kolkata [WB], Mumbai [Maharashtra], Madurai [TN], Nagpur [Maharashtra], Pune [Maharashtra], Ranchi [Jharkhand] & Visakhapatnam [AP]

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
31.12.2020

தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு

பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு.. SSC-இல் 6,500 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!!

STAFF SELECTION COMMISION -இல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள் ஆகும்.

பணி : ASSISTANT AUDIT OFFICER, ASSISTANT ACCOUNTS OFFICER, ASSISTANT SUPERINTENDENT, INSPECTER OF INCOMETAX OFFICER

காலி பணியிடங்கள்:6,500

சம்பளம்:ரூ.47,600 - ரூ.1,51,100

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, சிஏ, எம்பிஏ,எம்காம்

வயது: 18-30

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 100.

மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு". ராணுவத்தில் அருமையான வேலை.!!

 

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)

மொத்த காலியிடங்கள்: 55

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும், ஹமீர்பூர், இமாச்சல பிரதேசம்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஹெச்பி ஆர்மி ஆட்சேர்ப்பு பேரணி -
HP Army Recruitment Rally

கல்வித்தகுதி: 10th,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 23 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கடைசித் தேதி: 13.02.2021

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.
https://drive.google.com/file/d/1E8_TGK-eaopkrWeqfAw3peVeYdYg_KRu/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

மத்திய அரசில் அருமையான வேலை". இன்றே கடைசி நாள். உடனே போங்க..!!

Bhabha Atomic Research Centre (BARC)-காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Stipendiary Trainees, Technician.

காலிப்பணியிடங்கள்: 160

வயது: 18-25

சம்பளம்: ரூ.16,000 - ரூ.25,000

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி

தேர்வு முறை: Preliminary Test,Skill test

மேலும் விவரங்களுக்கு recruit.barc.gov.in/ barcrecruit/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம் :நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.