Skip to content

SUPER GOVERNMENT SCHOOL |MUDAIYUR AIDED SCHOOL:

மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்

திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த, மாம்பாக்கம் ஊராட்சி, முடையூர் கிராமத்தில், அரசு உதவி பெறும், ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1950ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஏற்படுத்தப்பட்டு, 1954ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
எண்ணிக்கை குறைவு 
இப்பள்ளியில் வழுவதுார், காட்டூர், கிளாப்பாக்கம், தத்தளூர், நரப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தற்போது அந்த கிராமங்களில், புதிய தொடக்கப்பள்ளிகள் வந்துள்ளதால், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

10TH 12TH PAPER VALUATION ERROR | SOME TEACHERS AFFECTED:

விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

CRC - Absent Teacher Training Held on 1.7.2017

24.06.2017 அன்று PRIMARY CRC - இல் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 01.07.2017 மீண்டும் பயிற்சி நடைபெறும்! பயிற்சியின் போது C.L,M.L. அனுமதி இல்லை!

CRC - Absent Teacher Training Held on 1.7.2017



ELEMENTARY EDUCATION | EDUCATION MINISTER SOME REPLY:

ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தி.மு.க., - ரகுபதி: தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது. இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.
தி.மு.க., - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

WHTSAPP SEND MAIL NEW UPDATE:

இனி வாட்ஸ்அப் மூலமே மெயில் அனுப்பலாம்: இது லேட்டஸ்ட் அப்டேட்!

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக
உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
இதன் காரணமாக பயனாளர்களை மேலும் கவர வாட்ஸ்அப் பல்வேறு எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதியையும் இதனுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

1997 APPOINTMENT TEACHERS REQUESTING TO EDUCATIONAL MINISTER::

20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்*

1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் 
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கனிவுடன் கோரிக்கையை கேட்ட செயலர் அவர்கள் இது குறித்து நல்லதொரு அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வில் பிற ஆசிரியர்களுடன் உள்ள ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவம் நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்...இவண் *ஆசிரியர்களில் கடைக் கோடியில் தனித்து விடப்பட்ட 1997 முதல் 2002 வரை பணியேற்ற ஆசிரியன்*..


MASTER ATTENDANCE NAME ORDER | SALEM ELEMENTARY DEO PROCEEDING:

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்:
Image may contain: text

Basic Tips to Keep Children in Child Care Safe Outdoors

சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.

The Risks of Eating Too Much Pepper:

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

How to link your Aadhaar with PAN by sending an sms in Tamil?

How to link your Aadhaar with PAN by sending an sms in Tamil?

ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
 அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.
ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது
 எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.

1 TO 12TH BOOKS CHANGED RELATED NEWS:

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - அதிகாரி தகவல்

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது.30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

TODAY RASI PALAN 29.06.2017:

தின பலன்-29.06.2017
மேஷம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

Elementary Department Teachers Deputation Order only DEO:

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

"இராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்"

NCENTIVE TO MIDDLE SCHOOL H.M B.ED DEGREE - FULL DETAILS:

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதியம் வழங்குவது குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பு