Skip to content

தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

 

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு :

டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

டிரைவர் - 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, பாதுகாப்பு அதிகாரி, குழுகோவில் காவல் - நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் - நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,600/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் - ரூ.100/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் 15.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.