Skip to content

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவில் ஒன்று என்னன்னு தெரியுமா? முளைகட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா..

 எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்தி செய்யாத ஆரோக்கிய உணவுகளில் ஒன்று தோக்லா. பொதுவாகவே ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. சத்துகள் நிறைந்தவை. குஜராத் மாநிலத்தின் உணவான தோக்லாவின் சுவையும் நன்மையும் மற்ற மாநிலத்தவரையும் கவர்ந்திழுக்க, இப்போது பரவலாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது.

உங்களுக்கு பிடித்த உணவின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், முதலில் ஆரோக்கியமான தோக்லா செய்முறையை பற்றி காண்போம், இது உங்கள் நீரிழிவு உணவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக சேர்க்கலாம். தோக்லா என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு மிகச்சிறந்த சிற்றுண்டியாகும், சுஜி தோக்லா முதல் அரிசி தோக்லா வரை, எதிலும் நாம் தோக்லாவை உருவாக்க முடியும். முளை கட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா : முளை கட்டிய பாசிப்பயறு, ஃபைபர் மற்றும் புரதத்தை அதிகம் கொண்டிருப்பதால் இவை இரண்டும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் பல சிறப்புகளை இந்த தோக்லா கொண்டுள்ளதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. கீரை மற்றும் பச்சை காய்கறிகள் மிகவும் சத்தானவை மற்றும் அதில் கலோரிகளும் குறைவாக உள்ளன. கீரைகளில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்ப்ஸ் மிகக் குறைவு, எனவே அவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. கீரைகளில் வைட்டமின் C உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் அவை பல ஆற்றலின் மூலமாக உள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.



தேவையான பொருட்கள்:1.5 கப் - கடலை மாவு
3 டேபிள் ஸ்பூன் - ரவை
1/2 டிஸ்பூன் - இஞ்சி விழுது
2 - பிச்சைமிளகாய்
1/4 டிஸ்பூன் - மஞ்சள் தூள்
சிறிதளவு - பெருங்காய தூள்
1/2 டிஸ்பூன் - உப்பு
1 டிஸ்பூன் - சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன் - எலுமிச்சை சாறு
1 டேபிள் ஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - பேக்கிங் சோடா
1.25 கப் - தண்ணீர் [மாவு பதத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்]

தாளிக்க தேவையானவை

2 டிஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - கடுகு
1/ டிஸ்பூன் - சீரகம்
1 டிஸ்பூன் - வெள்ளை எள்ளு
1 - பச்சை மிளகாய் இரண்டாக கீறியது
சிறிதளவு - பெருங்காய தூள்
1 கப் - துருவிய தேங்காய்
சிறிதளவு - கொத்தமல்லி இலை

செய்முறை:

முதலில் எடுத்து வைத்துள்ள கடலை மாவு ரவையை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு இஞ்சி விழுது பச்சைமிளகாய் துண்டு பொடியாக நறுக்கிய பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்,எலுமிச்சைசாறு, உப்பு, பேக்கிங் சோடா, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். எந்த மாவை நிமிடம் ஊற விடவும்

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சம அளவில் ஊற்றி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். பின்பு அதை சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.தாளித்தவற்றை வெட்டி வைத்துள்ள டோக்லா துண்டுகள் மீது சேர்க்கவும். இறுதியாக துருவிய தேங்காயை அணைத்து துண்டுகளின் மீதும் சேர்த்து பரிமாறவும். சுவையான டோக்லா தயார்.


பாசிப்பருப்பு தோக்லா:-

தேவையானவை

தயிர் - கால் கப்,
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு கப்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரூட் சால்ட் - 2 டீஸ்பூன்,
கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பு தோக்லா செய்முறை:-

முதலில் நறுக்கிய காய்கறிகளுடன் உப்பை சேர்த்து பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும்.

பிறகு அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்துகொள்ள வேண்டும் .

பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில், ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பின் மாவை நன்கு கலக்கவேண்டும்.

இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கி பரிமாறுங்கள்

ஒவ்வொரு வீட்டிலும் 100 பறவைகள்; அந்த ஊரே ஒரு சரணாலயம்:


சிதம்பரம் அடுத்த சீர்காழிக்கு அருகே இருக்கிறது பெரம்பூர் கிராமம். இந்த கிராமமே ஒரு பறவைகள் சரணாலயமாகிவிட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் 100க்கும் மேற்பட்ட பறவைகள் வசிக்கின்றன.

இக்கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அதனாலேயே அக்கிராமத்தினர் இதுவரையிலும் தீபாவளி பண்டிகையினை கொண்டாடுவதில்லை.

வவ்வால்களை தங்கள் கிராமத்தின் கடவுகளாகவே பாவித்து வருகிறார்கள் அம்மக்கள். பட்டாசு வெடித்தால் பறவைகள் பறந்துவிடும் என்பதால், பட்டாசு வெடிக்கக்கூடாது என்று அக்கிராமத்தினர் ஊர்க்கட்டுப்பாடு போட்டிருக்கிறார்கள். கிராமத்தினரும் பல வருடங்களாக அந்தகடுப்பாட்டினை மீறாமல் இருந்து வருகிறார்கள்.

தீபாவளி திருநாளில் மட்டுமல்லாது சுப, அசுப நிகழ்ச்சிகளுக்கும் கூட அவர்கள் வெடி வெடிப்பதில்லை.

வவ்வால்கள் மட்டும் இருந்த இந்த ஊரில் சில ஆண்டுகளாகவே வெளிநாட்டுப்பறவைகளும் வருவதால் அரசு அங்கே சரணாலயம் அமைக்க வேண்டும் எதிர்பார்க்கிறார்கள் பெரம்பூர் கிராமத்தினர்.

வங்கக் கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி; சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIGy29o7dHRMqVP1WsiSwd5YtezrfaHB4MZIbvxbGbwSe-974VLQlZRaOHffSksgmDJnZtCpmCwW8CgB9QYMp_wFrCHOE-3THy87GdNUtZ0egWIetG7kd-bc0EyfW-ETiGccekNzvw61yk/s1600/601717.jpg

 வங்கக் கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி தமிழகக் கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக, தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
 “குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். 
 திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 நாளை (15.11.2020) வங்கக்கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி தமிழகக் கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
 கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 நாளை மறுநாள் (16.11.2020) தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
 அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 
 மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.
 இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு!

 பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் பணி : ஆய்வக உதவியாளர் கல்வித் தகுதி : பி.எஸ்சி ஊதியம் : ரூ.10,000 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 
தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.tnjfu.ac.in/ என்ற இணையதளம் மூலம் 05.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnjfu.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை  கிளிக் செய்யவும்.

ஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

 ஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள Junior Draughting Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். ஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! ஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- ஈரோடு மேலாண்மை : தமிழக அரசு பணி : Junior Draughting Officer மொத்த காலிப் பணியிடங்கள் : 17 கல்வித் தகுதி : டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

 ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Erode.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Erode.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். Download File Download 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஃப்ரீடயபாட்டீஸ் வந்தாலே சர்க்கரை நோய் வருமா, அதை தடுக்க முடியுமா?

சர்க்கரை நோய் வந்தால் அதை முழுவதும் குணப்படுத்தவே முடியாது. வாழ்நாள் முழுக்க மாத்திரையும் உணவு கட்டுப்பாடும் மட்டுமே இதற்கு தீர்வு.


சர்க்கரை நோய் வந்த பிறகு தான் தொல்லை அதை வராமலே செய்துவிட்டால் என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு பரிசோதனையின் போது சர்க்கரை நோய் வருவதற்கான முந்தைய நிலையை காண்பிக்கும். இது ஃப்ரீ டையபட்டீஸ் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வழக்கத்துக்கு அதிகமாக உள்ளது என்பதால் விரைவில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு என்று சொல்லலாம்.
இன்சுலின் சுரப்பு குறைந்து வரும் இந்நிலையை சற்று கவனமாக கடந்தால் டைப் 2 நீரிழிவை வராமல் தடுத்துவிட முடியும்.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு இருந்தாலோ , ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை கொண்டிருந்தாலோ ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலோ அவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் 35 வயதுக்கு பிறகு ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அறிகுறிகளே இல்லையென்றாலும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது நல்லது. பரிசோதனையில் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் உணவு முறைகளில் சிலவற்றை தவிர்த்தாலே நீரிழிவு அபாயத்தை குறைக்க முடியும்.

​ஃப்ரீடயாபட்டீஸ்

ஃப்ரீடயாபட்டீஸ் என்றால் நீரீழிவு நோய் என்று பயப்பட வேண்டாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வழக்கத்தை விட சற்று அதிகமாக கொண்டிருக்கும். ஆனால் டைப் 2 நீரிழிவு கிடையாது. ஆனால் இந்த நிலையை பலரும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இந்த நிலை வந்தவர்களுக்கு நீரிழிவு நொயால் பாதிக்கப்படும் உறுப்புகளில் இதயம், ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உண்டு. ஃப்ரீடயபாட்டிஸ் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக நீரிழிவு 2 எதிர்கொள்ள கூடும் என்பது நிச்சயமில்லை.

இந்த நிலை வந்தவர்கள் ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது ரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அப்படியான ஆரோக்கிய உணவுகள் போன்று தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

​அறிகுறிகள்

ஃப்ரீடயபட்டீஸ் பரிசோதனையின் போது மட்டுமே கண்டறிய கூடியதல்ல. இந்த நிலையிலும் அறிகுறிகள் உண்டு. பொதுவான அறிகுறிகள் இல்லை என்றாலும் சிலருக்கு சருமத்தில் கருமை நிறம் உண்டாக கூடும். கழுத்து, அக்குள், முழங்கைகள், முழங்கால்கள் போன்றவற்றிலும் கருமை படரும். இது ஃப்ரீடயாபட்டீஸை கண்டறியாமல் அலட்சியப்படுத்தும் போது அறிகுறிகள் அதிகரிக்கும்.

படிப்படியாக அவை அதிகரிக்கும் போது தாகம் அதிகரித்து அடிக்கடி சிறுநீர் வரும், பசி உணர்வு அதிகரிக்கும், உடல் சோர்வு உண்டாகும். பார்வையில் மங்கல் வரக்கூடும். சிலருக்கு எடை அதிகரிக்கும். சரும பிரச்சனை உண்டாகும். இவையெல்லாம் நீங்கள் ஃப்ரீடயபாட்டீஸிலும் முதிர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.

​காரணங்கள்

ஃப்ரீடயபாட்டீஸ் காரணம் இதுதான் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் குடும்ப பிண்ணனி, மரபியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.உடல் எடை கட்டுக்குள் இல்லாமல் அதிக எடையுடன் அடிவயிற்றில் அதிக கொழுப்புடன் இணைக்கப்பட்டு இருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

உடல் செயல்பாடுகள் வழக்கத்தை காட்டிலும் குறைவாக இருந்தாலும் இந்த நிலை உருவாகலாம்.இந்த ஃப்ரீடயாபட்டீஸ் வந்தால் உடலில் தசைகள் மற்றூம் பிற திசுக்களை உருவாக்கும் உயிரணுக்களுக்கு ஆற்றலை கொடுக்கும் வேலையை செய்வதற்கு பதிலாக குளுக்கோஸ் ரத்தத்தில் சேர்கிறது. இந்த குளுக்கோஸ் உடலில் உண்ணும் உணவிலிருந்து வருகிறது. உணவு செரிமானம் ஆகும் போது உணவில் இருக்கும் குளுக்கோஸ் ஆனது ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை சேர்க்கிறது. உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்ல இன்சுலின் தேவை.

உடலில் கணையத்தின் பின் அமைந்துள்ள சுரப்பியிலிருந்து இன்சுலின் சுரப்பு சுரக்கிறது. இது உணவு சாப்பிடும் போது ரத்தத்துக்கு இன்சுலின் சுரப்பை அனுப்புகிறது. இது குளுக்கோஸை உயிரணுக்களுக்கும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் பயன்படுகிறது. இந்த சுரப்பு குறையும் போது ரத்த்ததில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.

ஃப்ரீடயபாட்டீஸ் நிலை வரும்போது கணையம் போதுமான இன்சுலின் சுரக்காது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தவும் செய்யாது, இதனால் உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்லாமல் அவை ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

​சேர்க்க வேண்டிய உணவுகள்

ஃப்ரிடயாபட்டீஸ் வந்தாலே நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும். பரிசோதனையில் ஃப்ரீடயபட்டீஸ் கண்டறிந்தால் உரிய இடைவேளையில் மீண்டும் பரிசோதனை செய்வது அவசியம். அதே நேரம் இது மீளக்கூடியதும் என்பதால் உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும்.

குறைந்த க்ளைசெமிக் உணவுகள்பட்டியலிட்டு எடுத்துகொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துகொள்ளும் போது குறைவான அளவு கொண்ட உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். பழுப்பு அரிசி முழு தானியங்கள் சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.

கீரைகள், காய்கறிகள், மெலிந்த இறைச்சி, சோயாபீன், குறைந்த கொழுப்பு , பால், கொட்டைகள், விதைகள், தயிர், பருப்பு வகைகள், பச்சை பீன்ஸ், பாலாடைக்கட்டி, டோஃபு புரதச்சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கலாம்.

​தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிக கிளைசெமிக் உணவுகள் வேகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவு, உருளைக்கிழங்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும். இனிப்பு நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ளும் போது அவை ரத்த ஓட்டத்தில் வேகமாக கலப்பதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக குளுக்கோஸ் கட்டுப்படுத்தமுடியாமல் அதிகரிக்க கூடும்.

செயற்கை பானங்கள் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவு பொருள்களும் தவிர்க்க வேண்டியதே. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பை குறைவாக எடுத்துகொள்ள வேண்டும். இவை நீரிழிவு அபாயத்தோடு இதய பிரச்சனையையும் உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.

கவனம்
ஃப்ரீடயாபட்டீஸ் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை உண்டாக்கவில்லை என்றாலும் சிறுநீரகங்களை சேதப்படுத்த வாய்ப்புண்டு.
மேலும் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, இதய நோய், பக்கவாதம் சிறுநீரக நோய், நரம்பு சேதம், பார்வை குறைபாடு போன்ற குறைபாட்டையும் உண்டாக்கிவிடும்,.
ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு, உடல் எடை கட்டுப்பாடு என எல்லாமே ஃப்ரீடயாபட்டீஸை டைப் 2 நீரிழிவை தடுக்க கூடும்.
குறிப்பு
ஃப்ரீடயபாட்டீஸை கொண்டிருப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் நீரிழிவு டைப் 2 வராமல் தடுக்கலாம்.

குரு பெயர்ச்சி 2020: பொன்னவன் குருபகவான் பயோடேட்டா:

 

நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். குரு பகவானுக்கு என்ன பிடிக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று குரு பயோடேட்டாவை பார்க்கலாம்.

பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக் கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை பொன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். தயாள குணம் கொண்டவர்.

குரு பகவானின் 5, 7,9ஆம் பார்வை சகல நன்மைகளையும் தரும். திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர்.

யானையை வாகனமாக கொண்ட குருபகவானுக்கு, கொண்டைக் கடலை பிடித்த உணவு. நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பவர். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். அது தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் அதிபதி இவர் என்பதை குறிப்பிடுகிறது.

குரு பகவான் நீதிமானாகவும் திகழ்கிறார். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் 'மகா மகம்' நடக்கிறது.

குரு பகவான் பயோடேட்டா

சொந்த வீடு: தனுசு - மீனம்

உச்ச வீடு : கடகம்

நீச்ச வீடு : மகரம்

கிழமை : வியாழன்

தேதி : 3, 12, 21, 30

நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

நிறம் : தூய மஞ்சள்

ரத்தினம் : கனக புஷ்பராகம்

உலோகம் : தங்கம்

தானியம் : கொண்டைக்கடலை

ஆடை : மஞ்சள்

தசாபுத்தி காலம்: 16 ஆண்டு

அதிதேவதை : தட்சிணாமூர்த்தி

குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து குருபகவானை வணங்கி சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் தானமாக வழங்கலாம்.

source: oneindia.com