Skip to content

பீஸ்' கட்டலையா? ஆன்லைன்' வகுப்பு ரத்து! அரசு பள்ளிஆசிரியர்கள் சொல்வது என்ன ?

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின், 'ஆன்லைன்' வகுப்புகளை, தனியார் பள்ளிகள் ரத்து செய்வதாக புகார் எழுந்துள்ளது.






ஊரடங்கில் உலகம் முடங்கிக்கிடந்த போதும், சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்குக் கல்விப் பணிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு சேவைகளிலும் ஈடுபட்டுவரும் சில ஆசிரியர்களின் அனுபவங்கள்

திலீப், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்,

சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராவதற்காக, ஒவ்வொரு வினாவிற்கான பயிற்சியை வீடியோக்களாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துவருகிறேன். அந்த லிங்க்கை மாணவர்களுக்கு அனுப்பிவிடுவேன். இது மாணவர்கள் தடையின்றி கற்பதற்கு உதவியாக அமைந்துள்ளது.

வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கணினியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை NCERT நடத்திவருகிறது. அதில் கருத்தாளராகப் பங்கேற்று இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளேன். தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இணையவழியில் கற்பிக்கும் பயிற்சிகளை அளித்துள்ளேன். வகுப்பறைக்குத் தேவையான காணொலிகளைத் தயாரித்தல், கைப்பேசியைப் பயன்படுத்தி திறம்பட கற்பித்தல், தனித்திறனை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஆசிரியர்கள் பயிற்சிகள் பெற்றார்கள்.

அடுத்த ஆண்டு வகுப்பிற்குத் தேவையான வரைபடங்களை கணினியில் தயாரித்துள்ளேன். படங்களின் வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது எளிதாகப் புரியும். இருபது ஆங்கில ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் என 1150க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி அளித்துவருகிறோம்.

ஆங்கில மொழிப்பயிற்சி தொடர்பான பாடங்களையும் தேர்வுகளையும் தயாரித்து https://spokenenglishtn.blogspot.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறோம். அதில் ஆசிரியர்கள் படிப்பதற்கான பாடங்களைப் புரிந்துகொள்வதற்கான வீடியோ மற்றும் அவர்கள் பேசுவதற்கான செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்திருக்கிறோம். ஆன்லைனில் தொடர்ந்து பயிற்சி வழங்குவது மற்றும் பேசவும் வாய்ப்புகள் தருவதன் மூலம் ஆசிரியர்களின் பேச்சுத்திறன் மேம்பட்டுவருவதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

ஏ. அருண்குமார், பட்டதாரி ஆசிரியர்,

சிந்தகமானிபெண்டா, திருப்பத்தூர் மாவட்டம்

நான் ஒரு மலைக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டேன். மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் வழிகாட்டுதலின்படி, வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள், சிறிய வீடியோ பதிவுகள், ஜிஐபி படங்கள் மூலம் தினந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.

பொதுமக்களிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு தெளிவை ஏற்படுத்த, காலை நேரங்களில் உழவர் சந்தையில் தன்னார்வலராகப் பணியாற்றினேன். அங்கு வரும் மக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம், சமூக தனிநபர் இடைவெளியின் அவசியம் குறித்தும் விளக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதுடன் ஒவ்வொரு நாளும் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கினேன்.

அனைவருக்கும் பயன்படும் கொரோனா சார்ந்த வினாடி வினா செயலியினை உருவாக்கினேன். அதன் வழியாக, தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். வாணியம்பாடி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மருத்துவமனைகளில் தன்னார்வப் பணியும் தொடர்கிறது. நியாயவிலைக் கடைகளில் சமூக இடைவெளி பற்றிய சேவையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றி வருவதில் மனம் நெகிழ்கிறது.

ஜி. ஆனந்தகண்ணன், எம். விஜயகுமார்,

பட்டதாரி ஆசிரியர்கள், கள்ளக்குறிச்சி

தமிழகம் முழுவதும் ஊரடங்கு நேரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையில் ZOOM ஆப்ஸ் மூலமாக பயிற்சிகளை வழங்கிவருகிறோம். அதாவது தினமும் 100 ஆசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் வழியாக கற்றல் – கற்பித்தலை எவ்வாறு வகுப்பறையில் மேற்கொள்வது பற்றிய ஆன்லைன் ஐசிடி (இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிக்கேஷன் டெக்னாலஜி) வகுப்புகளை நடத்திவருகிறோம். ஏப்ரல் முதல் தேதியன்று தொடங்கி, இன்றுவரை 18 வகுப்புகள் நடத்தியதன் மூலம் 1794 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பயிற்சிக்காக கூகுள் ஃபார்ம் மூலம் பதிவு செய்த ஆசிரியர்கள், பேஸிக், இன்டர்மீடியட், அட்வான்ஸ்டு என பிரிக்கப்பட்டு, தொழில்நுட்பம்வழி கற்பித்தலில் அவர்கள் எந்த நிலை என கண்டறிந்து கற்பிக்கபடுகிறது. தினம் ஒரு கல்வி மென்பொருள் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் என பல தலைப்புகளில் கற்பிக்கப்பட்டு, தினந்தோறும் ஆசிரியர்கள் தெரிந்துகொண்டதை ஆர்வமுடன் புராஜெக்ட் செய்து ஒப்படைக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவருமே நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குக் கற்பிக்கும் அளவுக்கு தெரிந்துகொண்டோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆன்லைன் பயிற்சி முடியும்போதும், ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் சர்டிபிகேட் ஜெனரேஷன் மற்றும் மேனுவல் சர்டிபிகேட் ஜெனரேஷன் என நவீன தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மா.லோகநாதன்,

இடைநிலை ஆசிரியர், ஈரோடு மாவட்டம்

கொரோனா தொற்றால் முதன்முதலில் பாதிக்கப்பட்டது எங்கள் ஈரோடு மாவட்டம். எனக்கு சமூகப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னார்வலராகப் பணியாற்ற முன்வந்தேன். ஈரோடு மாநகராட்சி மூலம் கமலா நகர் பிரதான சாலைப் பகுதியில் குடியிருக்கும் மக்களை கொரோனா பாதிக்காத வண்ணம் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஏப்ரல் முதல் இன்று வரை தொடர்ந்து செய்துவருகிறேன்.



வாட்ஸ் ஆப் குழு அமைத்து மக்களின் உடல்நலன் சார்ந்த கண்காணிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தேவைகளை அறிந்து, என்னால் இயன்றவரை பூர்த்திசெய்துவந்தேன். தினமும் மக்கள் எவருக்காவது இருமல், தொடர் சளி, மூச்சு விடுவதில் பிரச்சினை, ரத்த அழுத்தம் இருக்கிறதா, கர்ப்பிணிகள் இருக்கிறார்களா என்று விவரங்களைச் சேகரித்தேன். அத்துடன் செல்போன் எண் பெற்று வாட்ஸ் ஆப் மூலம் அடிப்படை மருத்துவத் தகவல்களை அனுப்பிவருகிறோம். நேரடியாகவும் தகவல்களை மக்களிடம் சேர்த்துவருகிறேன். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு முறையான விளக்கமும் அளிக்கப்படுகிறது.

எங்கள் வாட்ஸ்ஆப் குழுவில் சுகாதார நிலைய அதிகாரிகள், செவிலியர், மருத்துவர்களை இணைத்துள்ளேன். மக்களின் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன் கண்டறிந்து, உரிய பரிசோதனையை செய்து, மருத்துவர்கள் மூலம் மருந்துகளையும் வழங்குகிறோம். என்னைப் போன்ற பலரின் தன்னார்வத் தொண்டுகளால், ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்து பச்சைக்கு மாறியது உற்சாகம் அளிக்கிறது.

ச. மாலதி,

அரசு பட்டதாரி ஆசிரியை, வீரகேரளம்புதூர், தென்காசி மாவட்டம்

ஊரடங்கு நாட்களில் ஆசிரியர்களாகிய நாங்கள் கற்றுக்கொண்டும் கற்பித்துக் கொண்டும் வருகிறோம். அடுத்த கல்வியாண்டில் மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டிய பாடங்களைத் தயாரித்துவருகிறோம். பல்வேறு பாடங்களை சிறந்த முறையில் கற்பிப்பதற்கு வசதியாக காணொலிக் காட்சி, பவர் பாயிண்ட் போன்றவற்றை தயாரிப்பது, தீக்சா மற்றும் இதர செயலிகளில் இருந்து பதிவிறக்கம் செய்வது எப்படி உள்ளிட்ட பல பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கிவருகிறோம்.

வினாக்களைத் தயாரிப்பது, அவற்றை ஆன்லைனில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது, தேர்வுகள் நடத்துவது தொடர்பாக கல்வியாளர்களும், அனுபவமிக்க ஆசிரியர்களும் பயிற்சி அளிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களும் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு பாடத்தை தீக்சா ஆப்ஸ் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறேன். இன்றைய நிலையில் ஆன்லைன்வழி கல்வி என்பது கிராமம், நகரம் என்ற எல்லைகளைக் கடந்து அனைத்து மாணவர்களுக்கும் மிகச்சிறந்த தோழனாக இருக்கிறது.

-சுந்தரபுத்தன்

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள்: 460 கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு மாத ஊதியம்: ரூ.pay level 15700+ to 50,000+ /- உடனே விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்:

 File:Aavin dairy logo.svg

The Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Limited invites online applications from the qualified and eligible persons for appointment to the post of Senior Factory Assistant on regular basis.

                                                                        CLICK TO LINK APPLY --BLOW 


A. Name of the post and Vacancies:

1. Senior Factory Assistant (Dairying): 170

2. Senior Factory Assistant (Lab): 20

3. Senior Factory Assistant (Animal Husbandry): 70

4. Senior Factory Assistant (Admn.): 70

5. Senior Factory Assistant (Marketing): 60

6. Senior Factory Assistant (Engg.): 70


B. Place of work: Federation jurisdictions i.e. Chennai, Erode, Nilgiris, Tiruvannamalai, Salem & Thanjavur


C. Revised Level of pay: Rs.15700-50000 [Pay Matrix Level (1)]



CLICK HERE TO APPLY

தமிழக விமானப்படை நிலையத்தில் வேலை 2020 :

 

தமிழக விமானப்படை நிலையத்தில் வேலை 2020

22.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்

APPLICATION FORM FOR EMPLOYMENT IN ECHS

Official Notification PDF

Application Form 

SBI PO வேலைவாய்ப்பு 2020 – 2000 காலிப்பணியிடங்கள் :

 പ്രമാണം:SBI New Logo.jpg

 நாடு முழுவதும் உள்ள 2000 Probationary Officers (POs) காலியிடங்களை நிரப்ப ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 14.11.2020 முதல் 04.12.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

State Bank of India Central Recruitment & Promotion Department Corporate Centre, Mumbai Phone: 022-22820427

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS ADVERTISEMENT NO: CRPD/ PO/ 2020-21/ 12 ONLINE REGISTRATION OF APPLICATION & PAYMENT OF FEES: FROM 14.11.2020 TO 04.12.2020

 Applications are invited from eligible Indian Citizens for appointment as Probationary Officers (POs) in State Bank of India. The selected candidates may be posted anywhere in India. 

Official Notification PDF

WIPRO பல துறைகளில் சிறப்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 :

 

DEdwards EnterpriseOne - Technical-Project Manager

Req ID: 2537674

LocationChennai, IN

Posted11/17/2020

Apply Now

Microsoft Dynamics AX-Developer

Req ID: 2521028

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now

 

BigFix Patch Management-Administrator

Req ID: 2549487

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now


Lead Analyst

Req ID: 2549005

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now

Sr Analyst

Req ID: 2544360

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now


Network Architecting-Architect

Req ID: 2549526

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now


SWIFT message processing-Business Analyst

Req ID: 2545025

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

 


Privilege Password Management - PPM - CyberArk-Lead Administrator

Req ID: 2541565

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

Network Voice Admin-Consultant

Req ID: 2537640

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

ITIL Capacity Management-Project Manager

Req ID: 2549057

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

SWIFT MESSAGE PROCESSING-BUSINESS ANALYST, 

PRIVILEGE PASSWORD MANAGEMENT – PPM – CYBERARK-LEAD ADMINISTRATOR, 

NETWORK VOICE ADMIN-CONSULTANT,

 IIL CAPACITY MANAGEMENT-PROJECT MANAGER, 

VAPT –VULNERABILITY ASSESSMENT AND PENETRATION TESTING-TEST ENGINEER,

MONGODB ADMIN-LEAD & OTHER 

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை!

 பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை!

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை! நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடம் : 01 பணி : திட்ட உதவியாளர் கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.50,000 மாதம் இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ird.iitd.ac.in/ என்ற இணையதளம் மூலம் 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ird.iitd.ac.in/rec அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


குருப்பெயர்ச்சி பலன்கள்: 15-11-2020 முதல் 13-11-2021 வரை - குரு பார்க்கக் கோடி நன்மை :

 குருப்பெயர்ச்சி பலன்கள்: 15-11-2020 முதல் 13-11-2021 வரை - குரு பார்க்கக் கோடி நன்மை

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கிரகப்பெயர்ச்சிகளில், குருப்பெயர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். ‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று வர்ணிக்கப்படுபவர் குரு பக வான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்குத் திருவருள் கிடைக்கும். அந்த குரு பகவான், சுபஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30-ந் தேதி (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.36 மணிக்கு உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார்.

மகர ராசி குரு பகவானுக்கு நீச்ச வீடாகும். இருப்பினும் அவரது பார்வை பலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார். ‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.

‘தனகாரகன்’ என்றும், ‘புத்திரகாரகன்’ என்றும் குருவைச் சொல்வார்கள். ஒருவருக்கு புத்திர பாக்கியம் கிடைத்து திருப்தியான வாழ்க்கை வாழ வேண்டுமானாலும், செல்வச் செழிப்பு மிக்கவராக விளங்க வேண்டுமானாலும் குரு வின் அருள்தான் வேண்டும். அதுமட்டுமல்ல திருமணம் கைகூட வேண்டுமானாலும் குரு பகவான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் குரு பகவான் அமர்ந்தால், அவர் செல்வாக்கு பெற்றவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பவராகவும் விளங்குவார்.

இப்பொழுது மகரத்தில் வந்திருக்கும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். அதே நேரத்தில் குருவும், சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள்.

டிசம்பர் 26-ந் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி மகரத்திற்குச் சென்ற பிறகு, நீச்சம் பெற்ற வியாழனோடு இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது.

இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் 5.4.2021 முதல் 13.9.2021 வரை அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் அதிசாரமாக கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். மீண்டும் மகர ராசிக்கு மாறுதலாகி வந்து 13.11.2021 வரை சஞ்சரிக்கின்றார். இதற்கிடையில் 16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். எனவே அந்தந்த காலங்களுக்கு ஏற்பவும், உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடம் மற்றும் திசா, புத்தி அடிப்படையிலும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பொதுவாக இந்தப் பெயர்ச்சியில் குருவின் பார்வை பெறும் மூன்று ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி

குரு பார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசி: மேஷம்

குரு பார்வை லாப ஸ்தானத்தில் பதியும் ராசி: விருச்சிகம்

குரு பார்வை தொழில் ஸ்தானத்தில் பதியும் ராசி: தனுசு

மேற்கண்ட ராசிகள் அனைத்திற்கும் தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும், தொகை வரவும் திருப்தி தரும்.

குருப்பெயர்ச்சி நாளில் இல்லத்து பூஜையறையில் ‘வானவர்க்கு அரசனான வளம்தரும் குருவே’ என்ற குரு கவசப் பாடலைப் பாடுவதோடு, குரு பகவான் படத்திற்கு மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, முல்லைப்பூ மாலை அணிவித்து இனிப்புப் பொருள் நைவேத்தியம் வைத்து வழிபடுவது நல்லது.

மகரத்திற்கு ஜென்ம குருவாகவும், மிதுனத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், துலாத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், கும்பத்திற்கு விரய குருவாகவும், சிம்மத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைகிறது. எனவே மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுயஜாதக அடிப்படையில், பாக்கிய ஸ்தானத்திலுள்ள கிரகத்தின் பலமறிந்து அதற்குரிய ஆலயங் களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்றநாளில் பொருத்தமான வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

வழிபாட்டின் மூலம் வருமானப் பற்றாக்குறை அகலும். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பொதுவாழ்வில் புகழ், இழந்த பதவியைப் பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும். குருவருள் இருந் தால் சாதாரணமானவர்கள் கூட சக்கரவர்த்தியாக மாறமுடியும். - சுபம்.

தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊதியக்குழுவில் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான ஊதிய குறை தீர்ப்பு குழுவின் அரசாணைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 2010ல்  வெளியிடப்பட்ட ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான ஒரு நபர் ஊதிய குழுவில் பல பிரிவினருக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.பின்னர் அது தவறு என   மூன்று நபர் ஊதியக் குழுவில் ஊதிய பிடித்தம் செய்ய ஆணை வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து பத்தாண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு கடைசியாக உச்சநீதிமன்றம் சென்றதன் பெயரில் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் உயர்த்தி

வழங்கப்பட்ட ஊதியம் சரியா...? தவறா...?? என ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . அதனடிப்படையில் ஊதிய குறை தீர்ப்பு குழு அமைக்கப்பட்டு அதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது . தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணைகளில் பார்வை 12 &13 இதுகுறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குறை தீர்ப்பு குழுவானது உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் ஒரு சிலருக்கு சரியென்றும் ஒரு சிலருக்கு மாற்றியும் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு முருகேசன் அவர்கள் தலைமையில் அமைந்த குழு  அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பித்து அதனடிப்படையில் 20 க்கு மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.


(இது தமிழக அரசு ஏற்படுத்திய ஒரு நபர் ஊதியக்குழுவான சித்திக் அவர்கள் தலைமையில் அமைந்த கமிட்டி அல்ல...)

ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு- CLICK HERE

செய்தி பகிர்வு

மாநில தலைமை

2009& TET போராட்டக்குழு

ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரிக்கை: தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தல்;

 

அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்பட்டால் கிடைக்கும் குறைந்த நாட்களில் கற்பித்தல் பணிக்கு மட்டும் திட்டமிட வேண்டும். இதனால் பொது மாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாடுகளை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

BHEL REQUIREMENT OF ENGINEERS / OFFICERS SALARY 25000+ TO 35000+ CLICK TO APPLY LAST DATE DEC 03 Selection will be through interview :

 

Bharat Electronics Limited

Government of India, Ministry of DefenceA Navratna Company
LAST DATE DEC 03
Bharat Electronics Limited, a Navratna Company and India's Premier Professional Electronics Company under Ministry of Defence, requires the following personnel on contract basis for its Machilipatnam Unit: 

1. REQUIREMENT OF ENGINEERS / OFFICERS 

Post code Name of the post No. of posts Upper age limit as on 01.10.2020*

Minimum post qualification experience as on 01.10.2020 Reser vation Remuner ation per month in Rs.

 P001 Trainee OL Officer (Translator) – I 1 25 Years 1 year UR-1 25000/-
P002 Project Engineer (Electronics) – I 4 UR – 28 years OBC-31 years SC-33 years 2 years UR-5 OBC-2 SC-1 35000/-
P003 Project Engineer (Mechanical) – I 2
P004 Project Engineer (Civil) – I 1
P005 Project Officer (HR) – I 1 * Age: For candidates belonging to PWD category having minimum
இந்த தகவலை  உங்களுடைய  whatsapp குழுவில் பகிரவும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார்:

 

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு துவக்கி வைக்க இருக்கிறார்.

சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் துவக்கி வைக்க இருப்பதால், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வில், தினமும் 3 கட்டங்களாக தலா 175 மாணவர்கள், கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, வாகன வசதி, தங்கும் இடம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை; பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து: அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு முடிவு;

 

ஆன்லைன் கல்வி குறித்த கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அண்மையில் ஆய்வு நடத்தியது. கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த 1,522 பள்ளிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது உணர்வுப்பூர்வமான தொடர்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்படவில்லை என்று பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் கல்வி மூலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் அனுபவம் குறித்து இந்த ஆய்வை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டவை:

'இந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வகுப்புகளின்போது தங்களுடைய மாணவர்களுடன் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல ஆன்லைன் வழியில் தாங்கள் கற்பிக்கும் பாடம், மாணவர்கள் மனத்தில் சரியாகப் பதிகிறதா என்பதை மதிப்பீடு செய்ய முடியவில்லை என்று 90 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்யாததால் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 50 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையான கல்வி பெறவில்லை என்று 70 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். திறன்பேசி இல்லாததால் 60 சதவீதக் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சென்றடையவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக 90 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் வழக்கப்படி திறக்கப்பட்டால் தங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமில்லை என்று 65 சதவீதப் பெற்றோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், கல்வியை ஆன்லைன் வழியாகக் கொண்டு சேர்ப்பதில் போதாமையும் குறைபாடுகளும் காணப்படுவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற பெருவாரியான ஆசிரியர்களும் பெற்றோரும் தெரிவித்துள்ளனர். உரிய சுகாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைக்க பெரும்பாலான பெற்றோர் தயாராக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இணைய வசதி இல்லாதது, ஆன்லைன் பாடக் குறிப்புகள் கிடைக்காதது ஆகியவை மட்டுமே சிக்கல் அல்ல.

பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு நேரடியாக அல்லாமல் ஆன்லைன் வழியாகக் கற்பிப்பது போதுமானதாக இல்லை. பள்ளிப் பருவத்தினருக்குச் சிறந்த முறையில் கற்பிக்க ஆசிரியரும் மாணவரும் நேருக்கு நேர் சந்திப்பது, கவனம், சிந்தனை, உணர்வு இவை அனைத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. படிப்படியாக, ஒவ்வொரு மாணவருக்கு ஏற்றாற்போல கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம். பேச்சு மொழி மட்டுமின்றி உடல்மொழிக்கும் இதில் முக்கியப் பங்குள்ளது. இவை அனைத்தும் அசல் வகுப்பறையில்தான் சாத்தியப்படும்'.

இவ்வாறு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD Proceedings*

 

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD Proceedings*

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD - SS- List of teachers for online training on teacher development programme on ICT facilities- Level 1 - reg*

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக மாறிய மாவட்டம்.!

 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் இருந்தனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 1,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,384 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,32,656 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 17 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,495 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மேலும் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,09,167 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்:

 

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் தர வரிசைப் பட்டியலில் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவர்களில் பலரும் குடும்ப பின்னணி, வறிய நிலை வாழ்க்கைச் சூழல் போன்ற தடைகளைத் தகர்த்து முன்னேறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் ஆணையைத் தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (நவம்பர் 16) வெளியிட்டார்.

உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்ட சாம்பிராணி தூபத்தோடு இதையும் சேர்த்து போடுங்க:

 

கெட்ட சக்தி, பில்லி, சூனியம், மருந்து வைப்பது எதுவாக இருந்தாலும், அதை நம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 4 பொருளுக்கு உண்டு. 48 நாள் சாம்பிராணி தூபத்தோடு சேர்த்து இதையும் போடுங்கள்.

உங்களுடைய பிரச்சினைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாராவது உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மருந்து வைத்து விட்டார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? ஏவல் பில்லி சூனிய பாதிப்பை நம்புபவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

நாட்டு மருந்து கடைக்கு சென்று, அந்த கடையில் தேவதாரு பொடி, பூலான் கிழங்கு பொடி, பெரும் கோரை கிழங்கு பொடி, கட்டி சாம்பிராணி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகப் பெருமானின் முன்பு இந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் உங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று.