Skip to content

NEET EXAM RELATED NEWS:

'நெட்' தேர்வு: ஹால் டிக்கெட

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், கல்லுாரி, பல்கலைகளில் உதவி பேராசிரியராக சேர, 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதேபோல், முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின் உதவித்தொகையுடன், ஆராய்ச்சி படிப்பில் சேரவும், 'நெட்'தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., ௫ல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், ௯௧ நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில், ௫௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட் ெவளியிடப்பட்டது. அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், தபாலில் அனுப்பப்பட மாட்டாது என்றும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

அரசு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு கட்டுப்பாடு

அரசு விழாக்களுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.அரசு விழாக்களில் மாணவர்களை பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதுதொடர்பாக, விதிகள் வகுக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவினர், இரண்டு கட்டமாக கூடி, குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசித்து, விதிகளை வகுத்துள்ளனர். மாணவர் பாதுகாப்பு, நலன், விழா நோக்கம், கல்வித் துறை அனுமதி, பெற்றோரின் விருப்பம் போன்ற அம்சங்களை கணக்கில் கொண்டு, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த விதிகளை, பொது மக்கள் கருத்துகளை கேட்டு, மாற்றம் செய்யவும், பின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அரசு முடிவு செய்துள்ளது.

PRE- HALFYEARLY EXAM RELATED NEWS:

பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டுதேர்வு

தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்.
இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 1 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களைதயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

NEET EXAM RELATED NEWS:

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?

'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.

நீட்,தேர்வு,பயிற்சி,பதிவு,எப்படி

3,௦௦௦ ஆசிரியர்கள்
'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.வழிகாட்டுதல்கள்பின், தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவுசெய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும். வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு அரையாண்டு தேர்வு

தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களைதயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

7th Pay Commission |Related News:

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி? 'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார். நீட்,தேர்வு,பயிற்சி,பதிவு,எப்படி 3,௦௦௦ ஆசிரியர்கள் 'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

Today Rasipalan 18.10.2017

மேஷம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
ரிஷபம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு.

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும்.
இது போன்ற பாதிப்புகளை தடுக்க, பள்ளிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி :

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல்  துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை  அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள்.
இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  ‘கூடு’ (NEST) என்ற பெயரில் அகில இந்திய அளவில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடக்க உள்ளது.   இந்தப் போட்டி 5 வகுப்பு மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இன்னொரு பிரிவாகவும்  பிரிக்கப்பட்டுள்ளனர்.

7TH PAY COMMISSION RELATED POST:

21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

 ''21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.

மதுரையில் சங்க மாநில தலைவர் உ.மா.செல்வராஜ் கூறியதாவது:
சம்பளக்குழு முடிவுகள் 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மூன்று மாத போராட்டங்களுக்கு பின் அரசு, ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பிடம் பேசி ஒப்புக் கொண்டபடி சம்பளக்குழு அறிக்கையை பெற்று அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு, ஏழாவது சம்பளக்குழுவில் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அமல்படுத்தியது. மாநில அரசு 15 ஆயிரத்து 700 ரூபாய் என நிர்ணயம் செய்தது ஏமாற்றமளிக்கிறது.

குறைந்த பட்சம் சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க, வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் இளநிலை உதவியாளர்கள் சம்பளம் வழங்காதது ஏமாற்றத்தை தருகிறது.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு 30 சதவீத சம்பள உயர்வும் ஏமாற்றம் தருகிறது. அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் பணிபுரியும் மூன்று லட்சம் பேரில் ஐந்தாண்டுகள் பணி முடித்தவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

ஊராட்சி செயலர், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியத்தை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்த முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடி பேர் படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அரசு துறையில் நிரந்தர பணியிடங்களை குறைக்க, பணியாளர் சீராய்வுக்குழுவை அரசு அமைத்துள்ளது. இது நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவையின்படி தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்கள் 1.1.2016 முதல் சம்பள மாற்றப்பயனை அனுபவித்து வரும் நிலையில் தமிழக அரசு 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

அதை உடனடியாக வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து சென்னையில் அக்., 21ல் அரசு பணியாளர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர், என்றார்.

GOVERNMENT EMPLOYEES STRIKR REGARDING:

போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!

தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது,
எட்டாவது ஊதியக் குழு மாற்றத்தை அமல்படுத்துவது என 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 7 முதல், 15 வரையில் தொடர் போராட்டம் செய்தார்கள்

SCHOOL EDUCATION DEPARTMENT | 10TH mARK SHEET rEGARDING:

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு

அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர்.

அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர்,பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SECONDARY GRADE TEACHERS SALARY REGARDING | FEDERATION REQUEST :

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழக அரசு அறிவித்த 7 ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

DEEPAVALI LEAVE FOR TEACHERS:

தீபாவளி விடுமுறை எடுக்க ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு- DINAMALAR

'தீபாவளி பண்டிகைக்கு, ஒரு நாளைக்கு மேல் விடுமுறை எடுக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்காக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். ஆசிரியர்களும் விருப்பதிற்கேற்ப, இன்று துவங்கி ஞாயிறு வரை, விடுமுறை கேட்டு, தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பித்து உள்ளனர்.