Skip to content

URGENT SSA POST ADHAR UPDATED:

SSA -வில் பணியாற்றிடும் அனைத்து வகை பணியாளர்கள் ஆதார் எண் மற்றும் தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பு -நாள்:21/4/17 

TAMIL UNIVERSITY ADMISSION NOTIFICATION:

தமிழ்ப் பல்கலைக் கழகம் -2017-19 ஆம் கல்வியாண்டு இளங்கல்வியல் ( பி.எட் ) சேர்க்கை -விண்ணப்பிக்க கடைசி நாள்: 16/06/2017 - விளம்பரம் - விண்ணப்பம் - விவரக்கையேடு - முழு விவரம்.....


No automatic alt text available.

NEW APP INTRODUCED FOR TRAIN TRAVEL:

ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.
ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

NEET EXAM HALL TICKET PUBLISHED:

NEET' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு:
மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில்,நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.Download Admit  Card :http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx
எனவே, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள், 'நீட்' தேர்வை ஏற்று கொண்டுள்ளன. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

MADURAI KAMARAJAR UNIVERSITY EXAM POSTPONED:

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு தேதி மாற்றம்.
மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள் ஏப்.,22ல் துவங்கின.இந்நிலையில் ஏப்.,29, 30ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) நடக்க உள்ளது.
இதனால் ஏப்.,29ல் நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அத்தேர்வுகள் ஜூன் ௨ அன்று நடத்தப்பட உள்ளது.மேலும், 'ஏப்.,25ல் அனைத்துக் கட்சி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, வினாத்தாள்களை முன்கூட்டியே மையங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என தேர்வாணையர் முத்துச்செழியன் தெரிவித்தார்.

TAMILNADU GOVERNMENT SCHOOL EDN | VISUAL BOOKS INTROCUCED:

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

CPS RELATED POST:

CPS : 1.4.2003 க்குப் பின்னர் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் மட்டுமல்ல ஓய்வூதியர்களுக்கான இதர பலன்களும் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிலில் குறிப்பிட்டுள்ளது தங்கள் பார்வைக்கு.