Skip to content

8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சென்னையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- சென்னை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 23

கல்வித் தகுதி :

08-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tnrd.gov.in என்ற இணையதளம் மூலம் 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.12..2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnrd.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

source: tamil.careerindia.com

இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்:

 இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்

ஜீனியஸ் என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன? அதிகம் அறிவுள்ள நபரா? வெறுமையான விஷயங்களில் இருந்து பல கருத்துக்கள் எடுத்து முக்கிய திருப்பங்கள் கொண்டு வருபவர்களா? அவர்களின் தீவிர ஆசைகள் மற்றும் அவர்களின் நோக்கத்திற்காக அயராது உழைப்பவர்களா?    

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா?

 ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா?

 சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா? நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை மேலாண்மை : மத்திய அரசு பணி : திட்ட மேலாளர் கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.40,000 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 

எம்.டெக் பட்டதாரியா நீங்க? திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க!

எம்.டெக் பட்டதாரியா நீங்க? திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க!திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்-க்கான இடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 

இப்பணியிடத்திற்கு எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். எம்.டெக் பட்டதாரியா நீங்க? திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க! எம்.டெக் பட்டதாரியா நீங்க? திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க! நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் காலிப் பணியிடம் : 01 கல்வித் தகுதி : எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : Rs 35,000/- + 16% HRA அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nitt.edu என்ற இணையதளம் மூலம் 02.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?


 ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

 

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer (Mechanical) - I பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கு பி.இ, பிடெக், பி.எஸ்சி போன்று ஏதேனும் ஓர் தறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மேலாண்மை : மத்திய அரசு பணி : Project Engineer (Mechanical) - I வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ. 35,000 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://online.cbexams.com என்ற இணையதளம் மூலம் 3.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : அத்தியாவசிய கல்வித் தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் குறிப்பிட்ட பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 35 ஆயிர ஊதியத்தில் வேலை 2020 !

 முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 35 ஆயிர ஊதியத்தில் வேலை 2020

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 35 ஆயிர ஊதியத்தில் வேலை 2020

சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால், அதனை நிரப்பிட தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai University
பணியின் பெயர் Junior research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக/ கல்வி நிலையங்களில் Nanotech/ Biotech பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Tech/ M.Phil போன்ற ஏதேனும் ஒரு முதுகலை பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னை பல்கலைக்கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை வருமானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யபடுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்காணல் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification PDF

Official Site

1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள் – ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !

 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள் - ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள் – ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து நிரப்பப்படாமல் உள்ள பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாண்டிச்சேரி பல்கலையில் Deputy & Assistant Registrar பணியிடங்கள் காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு தகுதியான விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு திறமையான பட்டதாரிகள் எங்கள் வலைத்தள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Deputy & Assistant Registrar
பணியிடங்கள் 14
கடைசி தேதி 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Deputy & Assistant Registrar பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Deputy Registrar – 08
  • Assistant Registrar – 06
பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • தற்போது படிப்பை முடித்த புதிய விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,44,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக விண்ணப்பக்கட்டணம் :
  • UR /OBC/EWS விண்ணப்பதாரர்கள் –ரூ.2,000/-
  • SC/ST/PwBD/Ex-Serviceman All Women விண்ணப்பதாரர்கள் –ரூ.1,000/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 27.11.2020ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்ப நகலினை 01.12.2020 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Apply Online

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ஆவின் நிறுவனத்தில் வேலை !

 

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ஆவின் நிறுவனத்தில் வேலை !

காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து SFA, Driver, Technician & Manager பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் SFA, Driver, Technician & Manager
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க இறுதி நாள் 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
  1. Manager – 02
  2. Deputy Manager – 04
  3. Extension Officer Grade II – 04
  4. Technician – 02
  5. Senior Factory Assistant – 04
  6. Driver – 03
Manager பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் 02
கல்வி தகுதி Degree With CA/ Engineering
ஊதியம் ரூ.37,770 per month
Deputy Manager பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் 04
கல்வி தகுதி Bachelor Degree/ B.E/ B.Tech
ஊதியம் ரூ.35,900 per month
Extension Officer Grade II பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் 04
கல்வி தகுதி Any Degree + 10 years experience in MPCS or 10th Pass
ஊதியம் ரூ.20,600 per month
Technician பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் 02
கல்வி தகுதி 8th Pass/ 10th Pass
ஊதியம் ரூ.19,500 per month
Senior Factory Assistant பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் 02
கல்வி தகுதி 12th Pass or ITI
ஊதியம் ரூ.15,700 per month
Driver பணியிடங்களுக்கான விவரங்கள்:
பணியிடங்கள் 02
கல்வி தகுதி 8th Pass + Heavy License
ஊதியம் ரூ.15,700 per month
ஆவின் நிறுவன விண்ணப் கட்டணம்:
  • General – Rs.200
  • SC/ST – ரூ.100/-
ஆவின் நிறுவன தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆவின் நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The General Manager, Kanchipuram-Tiruvallur Co operative Milk Producers Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai-600023. என்ற முகவரிக்கு 27-11-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

B.E./B.Tech. முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !!!!

B.E.,B.Tech. முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !!!!

B.E./B.Tech. முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 

அண்ணா பல்கலைக்கழகத்தில் Teaching Fellow (Temporary) பணியும் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மெட்ராஸ் தொழில்நுட்ப வளாகத்தில் Professional Assistant – I பணியும் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் முடித்த தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே திறமையானவர்கள் இப்பணிக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Teaching Fellow (Temporary) & Professional Assistant – I
பணியிடங்கள் 05
கடைசி தேதி 27.11.2020 & 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள் :

Teaching Fellow (Temporary) மற்றும் Professional Assistant – I பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
Teaching Fellow :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Petroleum Engineering / Petrochemical Technology / Petroleum Engineering and Technology / Petroleum Technology / Petroleum Refining and Petrochemicals / Petrochemical Engineering / Chemical Engineering போன்ற இந்த பாடப்பிரிவுகளில் B.E. / B. Tech அல்லது M.E. / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Chemistry (Faculty of Science) / Chemistry / Applied Chemistry / Inorganic Chemistry / Organic Chemistry / Polymer Chemistry இவற்றில் ஏதேனும் ஒன்றில் B.Sc. M.Sc., PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Professional Assistant – I
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Automobile Engineering / Mechanical Engineering இவற்றில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
  • Teaching Fellow – பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Professional Assistant – I – இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.760/- சம்பளம் பெறுவர்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மூலமாக Shortlist செய்யப்பட்டு அதன் பின் Interview சோதனைக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27.11.2020 மற்றும் 07.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Anna University Notification PDF – Teaching Fellow

Anna University Notification PDF – Professional Assistant – I

மதுரையில் கணினி உதவியாளர் பணிக்கு அழைப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

 மதுரையில் கணினி உதவியாளர் பணிக்கு அழைப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் காந்திகிராம நிகர்நிலை (GRI) பல்கலைக்கழகத்தில் Computer Assistant பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டம் பெற்ற தகுதியான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் இப்பணிகளுக்கு வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கான தகவல்களை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து அதன்படி விண்ணபய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI 
பணியின் பெயர் Computer Assistant
பணியிடங்கள் 05
கடைசி தேதி  27.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Email 
GRI பல்கலைக்கழக பணியிடங்கள் :

Computer Assistant பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GRI பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் CS/IT பாடப்பிரிவுகளில் BCA/ B.Sc/ BE என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GRI பல்கலைக்கழக ஊதிய விவரம் :

Computer Assistant பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.14,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27.11.2020 அன்றுக்குள் gri.nrega@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

நிரந்தர பணியிடங்கள் - வேலை வாய்ப்பு செய்திகள். ( REGULAR VACANCIES - GOVT.AIDED COLLEGE ) | :

 IMG-20201126-WA0005

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Govt Aided College Co - Educational Institution ) | Surya குமாரபாளையம் -638 183 , நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு , ஆசிரியரல்லாத பணியாளர்கள் ( REGULAR VACANCIES - GOVT.AIDED COLLEGE ) | am.is. க.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நிதி உதவிபெறும் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

IMG-20201126-WA0004

ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்க நீங்க ரெடியா? சம்பளம் ரூ.35,400 – 1,12,400 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம்:Rural Development – Overseer/Junior Draughting officer Recruitment. :

 Rural Development – Overseer/Junior Draughting officer Recruitment.





மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள் 80

சம்பளம் ரூ.35,400 – 1,12,400
கல்வித்தகுதி Civil Engineering பிரிவில் டிப்ளமோ
வயதுவரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத்தேர்வு
திருவண்ணாமலை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது 
உங்களது மாவட்டத்திற்கான அறிவிப்பை உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை – 606 604
விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம்:

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/11/2020110958.pdf

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை :

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் 10 உதவி பொறியாளர்(சிவில்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.A2/78/2018

பணியிடம்: சென்னை

பணி: Assistant Engineer(Civil)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது சிவில் மற்றும் கட்டமைப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பதிவு கட்டணம்: அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.400 செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  எசி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் தேர்வு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

SBI வங்கியில் 8500 பணியிடங்கள் அறிவிப்பு:

 sbi083121

 பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.

நிறுவனம்: State Bank of India

பணி: Apprentice

காலியிடங்கள்: 8,500

தமிழ்நாடு காலியிங்கள்: 470

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020

மேலும் விரிவான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Staff Selection Commission -Government of India -Combined Higher Secondary Level Examination 2020 : pay scale 19900-81100 :

 Staff Selection Commission

Government of India

Combined Higher Secondary Level Examination 2020

notice

post name ; lower division clerk junior assistant pay scale post assistant sorting assistant data entry operator grade pay qualification 12th pass




SSC CHSL 2020 notification is expected to be released on November 6.

New Delhi:

The Staff Selection Commission (SSC) is expected to release the notification of the Combined Higher Secondary Level (CHSL) exam on November 6. The exam for selection to SSC CHSL posts will be held from April 12, 2021, to April 27, 2021. Online registration for the exam will be held till December 15, 2020.

CHSL includes Lower Division Clerk, Junior Secretariat Assistant, Postal Assistant, Sorting Assistant, and Data Entry Operator posts.

The minimum educational qualification required to sit in this exam is Class 12th pass.

Candidates have to apply for the exam online at ssc.nic.in. The application fee is ₹ 100 which can be paid online through BHIM UPI, Net Banking, by using Visa, Mastercard, Maestro, RuPay Credit, or Debit cards or in cash at SBI Branches by generating SBI Challan. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Disabilities (PwD), and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee




அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்:

 

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் பயில இடம் கிடைத்தும், அதிகளவு கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும், இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் என்றாலும், மறைமுகமாக 3 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.

சமூகநீதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு, கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க உதவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கு, அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப் படுவதையும் தடுக்கலாம் என்றும், அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடுசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!

 


அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்

தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!

தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!

5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)

6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்
ஆறு பருவங்களையும்
(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!

12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்

இந்த 1, 5, 6, 12 க்குறிய  மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்

அதேபோல் 2ம் எண்
இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)

3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்

4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்

எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு… சிபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்ட தகவல்..!!

 

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் 100% திறக்கப்படவில்லை. சில மாதங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாலும் கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பல மாநிலங்கள் பள்ளிகள் திறக்கும் திட்டத்தை தள்ளி போட்டுள்ளது. தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் பொது தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

பொதுத் தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்ற கருத்தும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என சிபிஎஸசி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்சி அமைப்பு நிர்வாகிகள் குழு செயலாளர் அனுராக் திரிபாதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். விரைவில் பொது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

B. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்ற பிறகு அது தவறு என்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தணிக்கை தடை கடிதம் பெற்றுள்ளவர்களுக்கு கீழ்கண்ட Judgement பயன்படும்.

தகவல் திரு -சா.ஜான்சன்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்.

B. Lit  முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று அதன் பிறகு MA, BEd  முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு அது தவறு என்று தணிக்கை தடை கடிதம் தற்போது வட்டாரக் கல்வி அலுவலர் மூலம்
பெற்றவர்களுக்ககு அதனை தடைசெய்து பெறப்பட்ட கீழ்கண்ட Judgement மற்றும் கருத்துக்கள் அதே போல் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களும் நீதிமன்றம் சென்று Judgement பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும்.DOWNLOAD THE JUDGEMENT COPY & G.Os  in BELOW 2 links- share to all

CLICK HERE-SUPPORTING G.Os

 

ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை:

 ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை

ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை

9 ஆயிரம் உதவி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி:

 9 ஆயிரம் உதவி ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி


உத்தர பிரதேசத்தில், உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

இங்கு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு முடிவுகள், கடந்த மே மாதம் வெளியாகின.

 தள்ளுபடிஅந்த தேர்வில், பொதுப் பிரிவினருக்கு, 65 சதவீதமும்; ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு, 60 சதவீதமும், தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த, 2018ல், இந்த மதிப்பெண்கள், 40 மற்றும், 45 சதவீதமாக இருந்த நிலையில், அதை உயர்த்தி, மாநில அரசு வெளியிட்ட உத்தரவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இதை எதிர்த்து 'உ.பி., பிராத்மிக் சிக்ஷா மித்ரா சங்கம், தேர்வு எழுதியோர் என பலரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு, உ.பி., மாநில அரசிடம் விளக்கம் பெற்றது.

தகுதி மதிப்பெண்

இந்நிலையில்மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:

தகுதி மதிப்பெண் தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை வைத்து, உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு :

சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...

மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு
இளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள், நேரடியாகவும், ரகசியமாகவும் அதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் :

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

நேற்று துவங்கிய, முதல் நாள் கவுன்சிலிங்கில், விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்து, மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதற்கு காரணமான, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நன்றி தெரிவித்தனர். 'பல தடைகளை கடந்து, இந்த உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்திருப்பதாலும், அதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருப்பதாலும், இது மறக்க முடியாத நாள்' 

இந்த கல்வியாண்டு முதல், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, கவுன்சிலிங் துவக்கமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது; நாளை முடிகிறது.இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 92 பி.டி.எஸ்., இடங்கள்என, 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.முதல் நாளான நேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில், அறிவிக்கப்பட்ட தர வரிசையின்படி, 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கையை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இவர்களில், அர்ச்சனா என்ற மாணவிக்கு, அவரே வெள்ளை நிற அங்கியையும், ஸ்டெதஸ்கோப்பையும் கையில் கொடுத்து அணிய செய்தார். அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த மாணவர்களும், பெற்றோரும், முதல்வர்இ.பி.எஸ்., காலில் விழுந்து, நன்றி தெரிவித்தனர்.தொடர்ந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை உறுதி செய்த, அரசு பள்ளி மாணவர்களுடன், முதல்வர் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, மாணவர்கள், '7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி' என்ற, வாசகங்கள் எழுதப்பட்ட பலுான்களை பறக்க விட்டனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:இந்த நாள், என் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான, மறக்க முடியாத நாள். தமிழக வரலாற்றில், ஒரு பொன்னான நாள். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில், திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். 


அரசு பள்ளியில் படித்தேன் என்ற முறையில், எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய திருநாள்.இது, ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நாள்.இந்த அரசு, 'நீட்' தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.


தமிழகத்தில், பிளஸ் 2 படிப்பவர்களில், 41 சதவீத மாணவர்கள், அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். கடந்தாண்டில், ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் தேர்வாகினர். இந்நிலையை மாற்ற, நான் உறுதியாக இருந்தேன்.அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவு லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்து, பல தடைகளை தாண்டி, சட்டத்தை கொண்டு வந்து, ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. 



இதுவரை, உங்களது குடும்பம், எவ்வாறாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இனிமேல், 'மருத்துவர் குடும்பம்' என்றே, அடையாளம் காணப்படும்.

மேலும், இம்மாணவர்களின் ஏழ்மை நிலைமை கருதி, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாதவாறு, ‛போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவி தொகை மற்றும் இதர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைப்பதற்கு, எதிர்க்கட்சியும் குரல் கொடுக்கவில்லை; மக்களும் கருத்து தெரிவிக்கவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும், 41 சதவீதம் மாணவர்களில், ஆறு பேர் தான் மருத்துவ படிப்பில் இடம் பெற்றனர் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் என்ற அடிப்படையில், இந்த சட்டத்தை கொண்டு வந்தோம்.

ஏழைகளுக்கும், மருத்துவ கல்வி கிடைக்கக்கூடிய வசதியை, இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அவர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்யும். கிராமம் முதல் நகரம் வரை, ஏழைகள் நிறைந்த பகுதியில், நல்ல தரமான மருத்துவ சிகிச்சை செய்ய, இப்படிப்பட்ட மாணவர்களை, அரசு ஊக்குவிக்கும். ஏழ்மையை உணர்ந்தவர்கள் என்பதால், அர்ப்பணிப்புடன், கிராமப்புறங்களிலும் மருத்துவ சேவையை, இம்மாணவர்கள் செய்வர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.