Skip to content

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? ஆன்லைன்ல ரொம்ப ஈசியா எடுக்கலாம். எப்படி தெரியுமா..?

 

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? ஆன்லைன்ல ரொம்ப ஈசியா எடுக்கலாம். எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி என்பதைதான் இங்கு பார்க்கபோகிறோம். உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு கம்ப்யூட்டர் கூட தேவையில்லை. அதற்கு உங்கள் மொபைலில் மத்திய அரசின் UMANG App மட்டும் டவுன்லோட் செய்யவேண்டும். UMANG App-ல் EPFO ஆப்ஷனுக்கு செல்லவேண்டும். அதில் 'Employee Centric' ஆப்ஷனை கிளிக் செய்து, 'Raise Claim' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களது EPF UAN Numberஐ பதிவிட வேண்டும். தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Passwordஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து 'Submit' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு 'Claim reference number' அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். UAN Number வுடன் ஆதார், பான்கார்டு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு: "தமிழக மின்சார வாரியத்தில் உடனடி வேலை". உடனே போங்க..!!

வேலைவாய்ப்பு: "தமிழக மின்சார வாரியத்தில் உடனடி வேலை". உடனே போங்க..!! வேலைவாய்ப்பு: "தமிழக மின்சார வாரியத்தில் உடனடி வேலை". உடனே போங்க..!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) இருந்து தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Member

காலியிடங்கள்: 01

தகுதி: பதிவு செய்யும் பதிவாளர்கள் நல்ல திறன், ஒருமைப்பாடு, துறை ரீதியிலான செயல்பாடுகளில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் Engineering, Finance Commerce, Economics, Law or Management போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் நல்ல நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 25.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் (FAC), எரிசக்தி துறை, செயலகம், சென்னை - 600009 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ வழங்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/job/tnerc_member_040121.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 :

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (IBPS-Institute of Banking Personnel Selection). Analyst Programmer, IT Engineer & Other பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ibps.in விண்ணப்பிக்கலாம். IBPS Recruitment Updates 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவிAnalyst Programmer, IT Engineer & Other
காலியிடங்கள்06
கல்வித்தகுதிB.Tech, M.Sc, MCA
சம்பளம்மாதம் ரூ.54,126/-
வயது வரம்புகுறைந்தபட்சம்: 21 ஆண்டுகள், அதிகபட்சம்: 35 ஆண்டுகள்
பணியிடம்மும்பை, மகாராஷ்டிரா
தேர்வு செய்யப்படும் முறைஇண்டர்வியூ
விண்ணப்ப கட்டணம்Rs. 1000/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி16 ஜனவரி 2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி08 பிப்ரவரி 2021

 

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா?

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Project Assistant

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : Life Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.12,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : கால்நடை நோயியல் துறை, மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பரி, சென்னை - 600007

நேர்முகத் தேர் நடைபெறும் தேதி : 25.01.2021ம் தேதி

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

Govt Job -ஊராட்சி ஒன்றியத்தில் வேலை: விண்ணப்பிக்க கடைசிநாள்: பிப்ரவரி 10!


கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரால் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி

பணிகள் : பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: 17

ஊதியம்: ரூ.15,900 - 50,400

விண்ணப்பிக்க கடைசிநாள்: 10/02/2021

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://www.tamilyugam.in/wp-content/uploads/2021/01/Recruitment-in-Panchayat-Development-Department.pdf

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Driver - cum- PUMP Operator-cum-Fireman-A பதவிகளுக்கு வேலை வாய்ப்பு:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Driver - cum- PUMP Operator-cum-Fireman-A பதவிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளது. https://www.npcil.nic.in/index.aspx என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இந்த மாதம் 25 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-27

சம்பளம்: 21 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Deputy Manager (HRM),
HRM Section,
Madras atomic Power Station,
Nuclear Power Corporation of India Limited,
Kalpakkam- 603102.

தேர்வு முறை மற்றும் கூடுதல் விவரங்களை இந்த பிடிஎப் லிங்கை பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும் https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_22122020_01.pdf

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை. (அரசு நிர்ணய ஊதியம்):

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை. (அரசு நிர்ணய ஊதியம்):

ஆசிரியை தேவை நிரந்தரப்பணியிடம் ( அரசு நிர்ணய ஊதியம் ) வ.எண் . விபரம் இனம் கல்வித்தகுதி வேதியியல் முதுகலை M.Sc .. 1 . Oc . ( Chemistry ) பட்டதாரி ஆசிரியை B.Ed. , தகுதியுள்ள ஆசிரியை தங்களது கல்விச்சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஜெராக்ஸ் நகலுடன் விண்ணப்பிக்கவும் . கடைசி தேதி : 27.1.2021 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலர் , பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருமங்கலம் 625706 .

இந்தியன் வங்கியில் வேலை :


இந்தியன் வங்கியில் 1 காலியிடங்கள் அறிவிப்பு
இந்தியன் வங்கி பணிகள் 2021: இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் வங்கியில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்
நிறுவனம் / துறையின் பெயர்:
இந்தியன் வங்கி
துறையின் வகை:
மொத்தம் பணியிடங்கள்:
1
பணியின் பெயர்:
தலைமை பாதுகாப்பு அதிகாரி
இடம்:
சென்னை - தமிழ்நாடு
தொடக்க நாள்:
12-01-2021
கடைசி நாள்:
30-01-2021
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .

கல்வி தகுதி .


பணியின் பெயர்கல்வி தகுதி
தலைமை பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பை சரிபார்க்கவும் 

வயது வரம்பு .


பணியின் பெயர்வயது வரம்பு
தலைமை பாதுகாப்பு அதிகாரி அதிகபட்சம் 55 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை .

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்

பணியின் பெயர்சம்பளம்
தலைமை பாதுகாப்பு அதிகாரி ரூ. 89,890 - 1,00,350 / -

விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் பெயர் மொத்தம் பணிகள்
தலைமை பாதுகாப்பு அதிகாரி 1

"பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா"..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

 

"பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா"..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும்.

அதே போல் இபிஎப்ஓ சட்டத்தின்படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. பத்தாண்டுகள் ஒருவர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியதமாக கிடைக்கும்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு ஊழியரின் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட உடன் ரூ.6 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டு விடுகிறது. இது ஒரு ஆயுள் காப்பீடு திட்டம். வேலையில் இருக்கும்போது திடீர் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரர்களுக்கு இத்தொகை முழுவதுமாக தரப்படும்.

"அரசு வழங்கும் ரூ.7.5 லட்சம் கடனுதவி. எப்படி பெறலாம்".? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

 

"அரசு வழங்கும் ரூ.7.5 லட்சம் கடனுதவி. எப்படி பெறலாம்".? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழக அரசுக்கு சொந்தமான தாட்கோ நிறுவனம் 30% மானியத்துடன் 7,50,000 வரையிலும் கடனுதவி வழங்கி வருகிறார்கள்.

புதிதாக இடம் வாங்க நினைப்பவர்கள், வாகனம் வாங்கி தொழில் துவங்க நினைப்பவர்கள், சிறு குறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குறிப்பாக ஆதி திராவிட பெண்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது.

இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்:

இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற நினைப்பவர்கள் ஆன்லைனில் https://application.tahdco.com/ இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த இணையதளத்தில் Click Here to Apply என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை முதலில் கிளிக் செய்யவேண்டும். அப்போது உங்கள் பெயர், ஜாதி, மதம் மற்றும் எந்த திட்டத்தின் மூலம் லோன் பெற விரும்புகிறீர்கள் எனக் கேட்கும். அவற்றை சரியாக நிரப்பவேண்டும்.

பின்னர் விண்ணப்படிவம் உள்ள பக்கம் திறக்கப்படும். அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவலை சரியாகக் கொடுக்கவேண்டும். பின்னர், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், Project Report கொடுத்து இணைக்க வேண்டும். மேலும் நீங்கள் புதிதாக தொழில் தொடங்கவுள்ளீர்கள் என்றால், தொழில் தொடங்கவுள்ள இடம், தேவையான தொகை மதிப்பீடு போன்ற தகவல்களையும் கொடுக்கவேண்டும்.

தேவையான விவரங்கள் அனைத்தையும் கொடுத்த பிறகு உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டும். இதைத்தொடர்ந்து உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் மூலம் உங்களின் விண்ணப்ப நிலையை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

"ரிலையன்ஸ், ஜியோவில் வேலை வாய்ப்பு". 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள். மிஸ் பண்ணிடாதீங்க..!!

ரிலையன்ஸ் ஜியோ என்ற இந்திய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A உள்ளிட்ட பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எம்பிஏ, பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அனுபவம்: 2-5 வருடங்கள்

சம்பளம்: நல்ல சம்பளத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை: https://careers.jio.com/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: சென்னை

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://careers.jio.com/frmJobCategories.aspx?func=w+cpdiT6wL4=&loc=j6yHY22wuoA=&expreq=/wASbQn4xyQ=&flag=/wASbQn4xyQ=&poston=/wASbQn4xyQ=

டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை

டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை

இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் (IRFC) இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் : 14 Nos.,
Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager, Joint General Manager, Deputy General Manager & Deputy Manager பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது :
அதிகபட்ச வயது வரம்பு 38 முதல் 55 வரை

கல்வித்தகுதி :
Executive Category பணிகள் - அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் LLB/ Graduate/ CA/ CMA/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Non-Executive Category பணிகள் - B. Com/ Postgraduate/ Bachelor's Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :
ரூ.24,000/- முதல் ரூ.2,80,000/-

தேர்வு :
Executive Category பணிகள் : Interview/ Power Point Presentation
Non-Executive Category பணிகள் : Written Test/ CBT/ Skill Test

விண்ணப்பிக்கும் முறை :
27.01.2021 மற்றும் 16.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அசல் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

http://irfc.nic.in/ActiveJobs.php

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". நாளை கடைசி நாள். இன்றே போங்க..!!

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". நாளை கடைசி நாள். இன்றே போங்க..!!

தமிழ்நாடு சிமென்ட் கழகம் சார்பில் அரியலூரில் புதியதாக தொடங்க உள்ள சிமெண்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Personal Assistant, Time Keeper, Dirver.

காலிப்பணியிடங்கள்: 19

வயது: 18க்கு மேல்

சம்பளம்: ரூ.19,500 - ரூ.62,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01,2021

மேலும் விவரங்களுக்கு www.tancem.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Today Employment And Education News Collection All Depatment - 21.01.2021

 

48 பக்கங்கள் கொண்ட இன்றைய கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பில்

.வெளிவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

.ஜே இ இ தேர்வுக்கு விண்ணப்பிக்க காலா அவகாசம் நீட்டிப்பு

.விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு

.ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம் தேதி குறித்த முழு விவரங்கள்

.பரமத்தி மற்றும் நத்தம் ஒன்றிய உதவியாளர் பணிகள் அறிவிப்பு..

.புழல் சிறையில் வேலைவாய்ப்பு

தனியார் துறையில், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நிறுவன கணக்காளர், மேற்பார்வையாளர், போன்ற பல்வேறு முக்கிய பணிகள் குறித்து முழு தொகுப்பு

மேலும் பல்வேறு வேலைவாய்ப்பு, தகவல்கள் அடங்கிய கோப்பு இயன்றவரை அனைவருக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்... நாம் அறிந்ததை உலகறிய செய்வோம்...

ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..!

 

ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..!

பணியின் விவரம்

நிர்வாகம் : தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 35 வரை (அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

ஊதியம் : மாதம் ரூ.15,700 - ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை : www.tnscb.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chairman, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Triplicane, Chennai - 600 005.

விண்ணபிக்க கடைசி தேதி : 31.01.2021

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.tnscb.org/recruitment என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியை பார்வையிடலாம்.

ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?


ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

பணி : இணை பொது மேலாளர்

கல்வித் தகுதி : சிவில் பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ. 90,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் 22.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : கல்வித் தகுதி, திறன், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்

ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் தொழில் பழகுநர் பயிற்சி:

ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் தொழில் பழகுநர் பயிற்சி:

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: GTRE/HRD/026&027

பயிற்சி: Graduate Apprentice

காலியிடங்கள்: 80

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.9,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: Diploma Apprentice

காலியிடங்கள்: 30

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: Trade Apprentice

காலியிடங்கள்: 40

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.7,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
2018 ஆம் கல்வி ஆண்டுக்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் தகுதி, ஒரு ஆண்டுக்கும் அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கான முடிவு www.drdo.gov.in என்ற இணையதளத்தில் மூலம் வெளியிடப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2021

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Additional Chief Executive Officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : CCL

பணியின் பெயர் : Additional Chief Executive Officer

கல்வித்தகுதி : மேற்கூறப்பட்டுள்ள வேலை தொடர்பாக ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்/ பணியாற்றுபவர்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெறுவர்

மொத்த பணியிடங்கள் : பல்வேறு (Various)

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 12.02.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.centralcoalfields.in/external/14_01_2021_ceo_jcrl_advertisement.pdf

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Apprenticeship Training பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு, ITI Trade Certificate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : TNHRCE

பணியின் பெயர் : Apprenticeship Training

கல்வித்தகுதி : 10ம் வகுப்பு, ITI Trade Certificate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மொத்த காலியிடங்கள் : 17

தேர்வு முறை : Interview

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/01/2021010858.pdf

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Welfare Officer காலிப் பணியிடம்!!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Welfare Officer காலிப் பணியிடம்!!

சென்னை துறைமுகத்தில் (Chennai Port Trust) காலியாக உள்ள Senior Welfare Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Senior Welfare Officer - 1 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 35 வயது நிரம்பி இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
குறைந்தபட்சம்- ரூ. 50,000/-
அதிகபட்சம்- ரூ. 1,60,000/-

தேர்வுமுறை :
1. Absorption அல்லது Deputation முறை

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
செயலாளர்,
சென்னை துறைமுக அறக்கட்டளை,
ராஜாஜி சலை,
சென்னை - 600001
என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 30.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

டிகிரி முடித்து இருந்தால் போதும்". உயர் நீதிமன்றத்தில் வேலை. உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

பணியின் பெயர் : Personal Assistant & Clerk

மொத்த காலியிடங்கள் : 77

கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கடைசி நாள் : 02.02.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf

20 முதல் 60 ஆயிரம் வரை ஊதியம்! கடைசி தேதி பிப்ரவரி 1! விண்ணப்பித்து விட்டீர்களா?

20 முதல் 60 ஆயிரம் வரை ஊதியம்! கடைசி தேதி பிப்ரவரி 1! விண்ணப்பித்து விட்டீர்களா?

கோவை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.65 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கோவை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : நிர்வாகி

பணியிடம் : கோவை மாவட்டம்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 01.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Coimbatore District Co-operative Milk Producers Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam, Coimbatore - 641010

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 01.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ .250
எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு - ரூ .100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ லிங்க்கை கிளிக் செய்யவும்.

இன்ஜினியர்களுக்கு அரிய வாய்ப்பு.. தேர்வு இல்லாமல் வேலையில் சேரலாம்.. எஸ்.பி.ஐ அறிவிப்பு..

இன்ஜினியர்களுக்கு அரிய வாய்ப்பு.. தேர்வு இல்லாமல் வேலையில் சேரலாம்.. எஸ்.பி.ஐ அறிவிப்பு..

நீங்கள் பொறியியல் பட்டம் பெற்றிருந்தால் (பிஇ / பிடெக்), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்பிஐ) வேலை பெற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பொறியாளர்களுக்கான காலியிடங்களை வெளியிட்டுள்ளது.

பதவியின் பெயர் : Engineer (Fire)

காலியிட விவரம் : மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 16.

தகுதி : தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் BE (Fire) அல்லது யுஜிசி / ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த பிடெக் மாணவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விகிதம் : ரூ. 23, 700 முதல் ரூ .42,020.

வயது வரம்பு : 40 வயது வரை

விண்ணப்ப விவரங்கள் : எஸ்பிஐ காலியிடத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 2020 டிசம்பர் 22 முதல் இயங்கி வருகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 20. இது தற்போது, 27 ஜனவரி 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்கள் பூர்த்தி செய்யலாம்

விண்ணப்ப கட்டணம் : பொது, மற்றும் ஓ.பி.சி வேட்பாளர்களுக்கு 750 ரூபாய். எஸ்சி, எஸ்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு இல்லை : இந்த பணிக்கு எழுத்து தேர்வு இல்லை.. நேர்முக தேர்வின் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்..

எஸ்பிஐ வேலை அறிவிப்பு 2021 க்கு இங்கே கிளிக் செய்க.

அமேசானில் வேலை வாய்ப்பு. பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு.!!!

அமேசானில் வேலை வாய்ப்பு. பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு.!!!

அமேசானில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமேசானில் Operations Manager, Senior Software Development Engineer, Software development Engineer, Software Development Manager, HRBP, Author Central Specialist-German, Author Central Specialist, Operations manager, Specialist, Quality Services போன்ற பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ மற்றும் எம்எஸ் ஆபீஸ் பற்றி தெரிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த லிங்கில் https://www.amazon.jobs/en/job_categories தனித்தனியே வேலைவாய்ப்புகள் மற்றும் காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. இங்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

https://www.amazon.jobs/en/search?offset=10&result_limit=10&sort=relevant&distanceType=Mi&radius=24km&latitude=13.08363&longitude=80.28252&loc_group_id=&loc_query=Chennai%2C%20TN%2C%20India&base_query=&city=Chennai&country=IND®ion=Tamil%20Nadu&county=Chennai&query_options=& இதில் சென்று பணியிடங்களுக்கான கூடுதல் விவரங்களை பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

"மத்திய அரசில் 32 வகையான 6506 பணியிடங்கள்". தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு..!!

 

மத்திய அரசில் 32 வகையான 6506 பணியிடங்கள்". தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு..!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் , கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (ஜி.ஜி.எல்., ) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 6506

குரூப் 'பி'பிரிவில் கெஜட்டடு (Group 'B' Gazetted) - 250

குரூப் 'பி'பிரிவில் நான் - கெஜட்டடு (Group 'B' Non-Gazetted) - 3513

குரூப் 'சி' பிரிவில் (Group 'C') - 2743

1.பணி: Assistant Audit Officer

சம்பளம்: Rs. 47600 - 151100

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Assistant Accounts Officer

சம்பளம்: Rs. 47600 -151100

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

7.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

8.பணி: Assistant

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

9.பணி: Assistant

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

10.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

11.பணி: Inspector of Income Tax

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

12.பணி: Inspector, (Central Excise)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

13.பணி: Inspector (Preventive Officer)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

14.பணி: Inspector (Examiner)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

15.பணி: Assistant Enforcement Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

16.பணி: Sub Inspector

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

17.பணி: Inspector Posts

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

18.பணி: Inspector

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

19.பணி: Assistant

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

20.பணி: Assistant/Superintendent

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

21.பணி: Divisional Accountant

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

22.பணி: Sub Inspector

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

23.பணி: Junior Statistical Officer

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

24.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

25.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

26.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

27.பணி: Accountant

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

28.பணி: Accountant/ Junior Accountant

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

29.பணி: Senior Secretariat Assistant/Upper Division Clerks

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

30.பணி: Tax Assistant

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

31.பணி: Tax Assistant

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

32.பணி: Sub-Inspector

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

Assistant Audit Officer/ Assistant Accounts Officer: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Chartered Accountant /Cost & Management Accountant / Company Secretary அல்லது Commerce/ Business Studies/ Business Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது MBA Finance முடித்தவர்களுக்கு முன்னுரிமை.

Junior Statistical Officer: +2வில் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது Statisticsஐ ஒரு பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணிகளுக்கும்: இளநிலை பட்டப்படிப்பு

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, டிரேடு தேர்வு

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: Rs 100

பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்ச்சி முறை: டயர் 1, டயர் 2, டயர் 3, ஸ்கில் தேர்வு என நான்கு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலுார், நெல்லை,

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2021

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.

http://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,77,500/-


மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Assistant Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Assistant and other posts பணிகளுக்கு என 13 காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
கல்வித்தகுதி :
  • Assistant Director – Hindi அல்லது English டிகிரி தேர்ச்சியுடன் 5 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Assistant Editor – பணிக்கு தொடர்புடைய குறிப்பிட்ட மொழியில் நல்ல புலமையுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Production Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது printing technology பாடப்பிரிவில் diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Editorial Assistant – பணிக்கு தொடர்புடைய குறிப்பிட்ட மொழியில் நல்ல புலமையுடன் Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant – டிகிரி தேர்ச்சியுடன் 05 ஆண்டுகள் வரை பணியில் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

இந்திய ராணுவம், அதிகாரிகள் பயிற்சி அகாடமி OTA சென்னையில் வேலைவாய்ப்புகள் :

OTA சென்னையில் வேலைவாய்ப்புகள் 2021 (OTA Chennai). Librarian, MTS, LDC பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.joinindianarmy.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30 ஜனவரி 2021 . OTA Chennai Indian Army Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

OTA Chennai அமைப்புவிவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்இந்திய ராணுவம், அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA Chennai), சென்னை ( Indian Army, OTA-Officers Training Academy)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.joinindianarmy.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

OTA Chennai Recruitment 2021 வேலைவாய்ப்பு:

பதவிLibrarian, MTS, LDC
காலியிடங்கள்77
கல்வித்தகுதி10th, 12th, Degree, Diploma
சம்பளம்மாதம்ரூ.18,000 - 25,000/-
வயது வரம்பு18 - 30 ஆண்டுகள்
பணியிடம்சென்னை - தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைWritten Test, Skill Test
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிThe Commandant, Officers Training Academy, ST Thomas Mount, Chennai - 600016
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி13 ஜனவரி 2021
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி05 பிப்ரவரி 2021

OTA Chennai Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டுஇணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புOTA Chennai Official Notification pdf (English)
OTA Chennai Official Notification pdf (Tamil)
அதிகாரப்பூர்வ இணையதளம்OTA Chennai Official Website

வேலைவாய்ப்பு: " மாதம் 35,000 சம்பளம்". சென்னையில் அரசு வேலை. உடனே விண்ணப்பிங்க..!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Programmer

பணியிடம்: சென்னை

சம்பளம்: ரூ.35,900

கல்வித்தகுதி:Degree in science or Statistics or Economics or commerce with PG Diploma in Computer Application.

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 29

மேலும் விவரங்களுக்கு www.tnsic.gov.in என்று இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய விமான நிலையத்தில் 368 காலியிடங்கள் அறிவிப்பு :

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் பணிகள் 2021: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 368 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்

நிறுவனம் / துறையின் பெயர்: இந்திய விமான நிலைய ஆணையம்
துறையின் வகை:Central government
மொத்தம் பணியிடங்கள்:368
பணியின் பெயர்:அலுவலக உதவியாளர்
இடம்: இந்தியா
தொடக்க நாள்: 17-01-2021
கடைசி நாள்: 29-01-2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .


பணியின் பெயர் மொத்தம் பணிகள்
மேலாளர்பல்வேறு
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பல்வேறு


கல்வி தகுதி .



பணியின் பெயர்கல்வி தகுதி
மேலாளர்பி.இ / பி.டெக் / அறிவியல் பட்டதாரி 
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பி.இ / பி.டெக் / அறிவியல் பட்டதாரி 

வயது வரம்பு .


பணியின் பெயர்வயது வரம்பு
மேலாளர்32 ஆண்டுகள் வரை
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் 27 ஆண்டுகள் வரை

தேர்வு செய்யும் முறை .


விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்


பணியின் பெயர்சம்பளம்
மேலாளர் ரூ .60000-180000 / -
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ரூ .40000-140000 / -

விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:


  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ அறிவிப்பு: DOWNLOAD
  • விண்ணப்பம்: APPLY NOW

வேலையில்லையா?. தமிழக அரசு சார்பில் வெளிநாட்டில் வேலை.!!!


தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கீழ்க்கண்ட வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, கே.எம்.எஸ் கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 பேர். மாதசம்பளம் 72,000 வரை வழங்கப்படும். ஸ்டாப் செவிலியர் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 நபர்கள் தேவை. மாத சம்பளம் 2.5 லட்சம் வரை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று அந்த அறிவிப்பில், ஓமன், கத்தார், அயர்லாந்து போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உள்நாட்டைப் பொருத்தவரை சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த வேலைவாய்ப்பு குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ள 9176434488 மற்றும் 8667407470 ஆகிய தொலைபேசி எண்ணுக்கும், [email protected] என்ற மெயில் மற்றும் www.omcmanpower.com. என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளலாம்.

டிகிரி போதும்.. அரசு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?

டிகிரி போதும்.. அரசு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?

 govt-job

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தில் (ECGC)-ல் காலியாக உள்ள Probationary Officer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Degree தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : ECGC Ltd

பணியின் பெயர் : Probationary Officer

மொத்த காலியிடங்கள் : 59

கல்வித்தகுதி : Degree தேர்ச்சி

கடைசி நாள் : 31.01.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://img.freejobalert.com/uploads/2021/01/Notification-ECGC-Ltd-Probationary-Officer-Posts.pdf

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை. உடனே விண்ணப்பியுங்கள்.!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)

மொத்த காலியிடங்கள்: 4

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலை: Research Fellow & Research Assistant

கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி - The Registrar (Recruitment), High Court, Madras - 600 104.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_152_2020.pdf

* https://www.mhc.tn.gov.in/recruitment/docs/appln_152_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.