Skip to content

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 2020 : தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

 கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக வேலைவாய்ப்பு 2020

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 2020 : தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட நகராட்சி அலுவலகங்களில் (Municipality Office) காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட நகராட்சி அலுவலகங்களில் Sanitary Worker/ Cleaning Staff போன்ற துப்புரவு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Coimbatore Municipal Corporation
பணியின் பெயர் Sanitary Worker
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக காலிப்பணியிடங்கள் :

கோயம்புத்தூர் மாவட்ட நகராட்சி அலுவலகங்களில் Sanitary Worker/Cleaning Staff போன்ற துப்புரவு பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக வேலை – வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வரை வயது கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக வேலை – கல்வித்தகுதி :

இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானதாகும்.

கோயம்புத்தூர் நகராட்சி அலுவலக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர் நகராட்சி தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பகுதிகளை சேர்ந்த நகராட்சி அலுவலக முகவரிக்கு நேரிலோ/தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Site

Reliance JIO வேலைவாய்ப்பு 2020:

 Reliance JIO வேலைவாய்ப்பு 2020

 Reliance JIO வேலைவாய்ப்பு 2020

Reliance JIO என்ற தனியார் தகவல்தொடர்பு நெட்வொர்க் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Reliance JIO நிறுவனத்தில் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, State Warehouse Executive, Engineer LTE Core/VoWiFi FM, Field Engineer, JC Channel Sales Lead A, Service Delivery Project Manager, JC Digital Repair Services Metro & Other போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Reliance JIO
பணியின் பெயர் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, State Warehouse Executive, Engineer LTE Core/VoWiFi FM, Field Engineer, JC Channel Sales Lead A, Service Delivery Project Manager, JC Digital Repair Services Metro & Other
பணியிடங்கள் 100+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Reliance JIO பணியிடங்கள் :

Reliance JIO தகவல்தொடர்பு நெட்வொர்க் நிறுவனத்தில் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, State Warehouse Executive, Engineer LTE Core/VoWiFi FM, Field Engineer, JC Channel Sales Lead A, Service Delivery Project Manager, JC Digital Repair Services Metro & Other பணிகளுக்கு 100+ காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Reliance JIO கல்வித்தகுதி :
  • Reliance JIO நிறுவனத்தின் காலிப்பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA, BE/ B.Tech பட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பணிகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதி விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த Reliance JIO பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Apply Here 

 

8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் வங்கிக்கடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் :8th graders can apply for a bank loan online at a 25% subsidy to start a business

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் வங்கிக்கடன் அளிக்கப்பட உள்ளது.

சென்னை ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் 285 பயனாளிகளுக்கு ரூ.1.8 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது தகுதி உள்ள்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கடனுதவி தொகை:-

உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சமும், 

சேவை தொழில்க்கு ரூ.5 லட்சமும் 

வியாபாரத்திற்க்கு ரூ 5 லட்சம் வங்கிக்கடன் பெறலாம். 

இதற்கு 25 சதவீதம் மானியமும் உண்டு.

தகுதி:-

விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

பொதுப்பிரிவினருக்கு 35, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி), பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ஆகியோருக்கு 45 ஆகும்.

விண்ணப்பிக்க:-

www.msmeonline.tn.gov.in/uyegp

மேலும் விவரங்களுக்கு:-

கிண்டிதொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் மற்றும் வணிகத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 044-22501621/22,  9487239561  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/10/2020102010.pdf

12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பியுங்கள் :

 மத்திய அரசின் கீழ் அல்மோராவில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணி

 

கல்வித் தகுதி :

10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: 

www.canttboardrecruit.org

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 

15.11.2020

 

மேலும் விபரங்களை அறிய

https://www.canttboardrecruit.org/uploads/Almora/AAlmora2.pdf

பிஇ பட்டதாரிகளுக்கு நெய்வேலி என்எல்சியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு :

 நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice பணி


கல்வித் தகுதி :-

B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு :-

வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள மெழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்

விண்ணப்பிக்க:-

https://www.nlcindia.com

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

03.11.2020 

மேலும் விபரங்களுக்கு:-

https://www.nlcindia.com/new_website/careers/notification%20enage%20GAT%20&TAT.pdf

தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு: தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கோரிக்கை: :

 594836

தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

'''தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்ததைத் தமிழகத்தில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். தற்போதுள்ள அரசாணைக்கு ஆளுநர் ஒப்புதல்  ஆணை பிறப்பிக்க கூடாது என்ற எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்.

தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்து முடிந்த கூட்டத்தொடரில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து, அதை அரசாணையாக ஆளுநரிடம் எழுதிக் கையொப்பமிட்டு அரசாணை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழக அரசின் பாடத் திட்டத்தைப் பயின்று வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டதிட்டங்களை இயற்ற வேண்டும்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, ஒரு கண்ணுக்கு வெண்ணெய் வைக்கக்கூடிய வேலையைச் செய்வது தவறு. குறைந்தபட்சம் அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபின் தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் வெறும் 180 பேர் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அரசுப் பள்ளியில் இனி எப்படிக் கற்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திட வேண்டும்.

தரமான மாணவர்களால்தான் தகுதியான மருத்துவர்களாக முடியும் என்பதை உணர்ந்து அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் 7.5% இட ஒதுக்கீடு  வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். எங்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டால் நீதிமன்றத்தின் வாயிலாக நிச்சயம் தடையாணை பெற்றுத் தமிழகத் தனியார் பள்ளி மாணவர்களின் உரிமைகளை நிலை நாட்டுவோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றோம்''.

இவ்வாறு நந்தகுமார்  தெரிவித்துள்ளார்.

7.5% இடஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்; இது ஒரு வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை :

 594119

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு  விரைவில் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாளப் பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் புதிதாகக் கட்டப்பட்டது. அக்கட்டிடங்களின் திறப்பு விழா இன்று அமைச்சர் செங்கோட்டையன்  தலைமையில் நடைபெற்றது. இதில் விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''நாம் விரைவிலேயே மகிழ்ச்சி அடையும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு  கிடைக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 303 சீட்டுகள் கிடைக்கும் வரலாற்றை நீங்கள் காணப் போகிறீர்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சட்டம் இயற்றியதே நாங்கள்தான். மாணவர்களுக்காக இன்று பேசும் யாரும் அதைச் செய்யவில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலாவது இது செய்யப்பட்டிருக்கிறதா?

தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக இது தொடங்கி இருக்கிறது. இது ஒரு வரலாறு'' என்றார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்ட மசோதா, அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

10, 12-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரவில் பணியாற்றலாம் வாங்க!

 10, 12-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரவில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் அல்மோராவில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : கன்டோன்மென்ட் போர்டு, அல்மோரா மேலாண்மை : மத்திய அரசு பணி : வனக்காப்பாளர் மொத்த காலிப் பணியிடம் : 01 கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.canttboardrecruit.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.canttboardrecruit.org/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி - சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.64 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிபிஎஸ் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : விஞ்ஞானி - சி கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ.64,000 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 27.10.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR - National Institute Research in Tuberculosis, No.1. Sathyamoorty Road, Chetpet, Chennai - 600 031 தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirt.res.in/html/current_job.htm அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா?

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா?

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி நிர்வாக பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயரிம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மேலாண்மை : தமிழக அரசு பணி : உதவி நிர்வாக பொறியாளர் கல்வித் தகுதி : பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ.50,000 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.11.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : AIIRLIVAS, V.Koot Road, Chinnasalem, Salem District and Sl.No. 5 to 6 will be at Estate Office, TANUVAS., Madhavaram Milk Colony, Chennai-51. தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினைக் காணவும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!

8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!! 

8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Base Assistant & Base Helper பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Programe Manager
பணியிடங்கள் 8
கடைசி தேதி 08.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியின் பெயர் : Base Assistant & Base Helper

காலியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் Base Assistant & Base Helper பணிகளுக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

பணிகளுக்கான கல்வித்தகுதி ஆனது கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Base Assistant – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
  • Base Helper – 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,418/- முதல் அதிகபட்சம் ரூ.19,864/- வரை ஊதியம் வழங்கப்படும். பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.10.2020 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

சென்னை கன்டோன்மென்ட் ஆணையத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

 சென்னை கன்டோன்மென்ட் ஆணையத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை கன்டோன்மென்ட் ஆணையத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை செயல்படும் மத்திய அர கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட் ஆணையத்தில் காலியாக உள்ள Midwife பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28.09.2020 இறுதி நாள் என்பதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திறமையான விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான தகுதி வரம்புகளை ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cantonment Board, Chennai
பணியின் பெயர் Midwife
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Midwife
காலியிடங்கள் :

Midwife பணிக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

12th Std/ Diploma in Auxiliary Nursing Mid Wifery Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தோர் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Skill Test
தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் (05.10.2020 – Remote Areas) தங்களின் விண்ணப்பப் படிவத்தை The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai – 600 016 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

ஜே.இ.இ. ‘அட்வான்ஸ்டு’ தேர்வு: நாடு முழுவதும் 1,000 மையங்களில் இன்று நடக்கிறது :J.E.E. ‘Advanced’ selection: takes place today at 1,000 centers across the country

ஜே.இ.இ. ‘அட்வான்ஸ்டு’ தேர்வு: நாடு முழுவதும் 1,000 மையங்களில் இன்று நடக்கிறது

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுதி இருந்தார்கள். இதற்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் அடுத்த கட்டமாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். அதன்படி, இந்த தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

நாடு முழுவதும் 222 நகரங்களில் 1,000 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காலையில் தாள்-1 தேர்வும், பிற்பகலில் தாள்-2 தேர்வும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை டெல்லி ஐ.ஐ.டி. நடத்த இருக்கிறது.

வீடுதோறும் கரும்பலகை அமைத்து கல்வி - இணைய சேவை கிடைக்காததால் நூதன முயற்சி :Setting up a blackboard at home Education - Innovative initiative due to unavailability of internet service

 பள்ளிகள் திறக்காததால் சமூக இடைவெளியுடன் வீடுதோறும் கரும்பலகை அமைத்து கல்வி - இணைய சேவை கிடைக்காததால் நூதன முயற்சி

IMG-20200926-WA0044

பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

 பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

 பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! 

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோவில் சிவில் பொறியியல், பி.இ சிவில் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மேலாண்மை : மத்திய அரசு பணி : இளநிலை பொறியாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 14 வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி : Diploma in Civil Engineering, B.E Civil Engineering, Diploma in Mechanical Engineering, B.E Mechanical Engineering, B.E Electrical and Electronics Engineering, Diploma in Electrical Engineering உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://aiimsrishikesh.edu.in/aiims/# என்ற இணையதளம் மூலம் 17.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : உத்தரகண்ட் (டொமைசில்) யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ.1500 Group C - ரூ.1000 உத்தரகண்ட் டொமைசில் தவிர வேறு யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ. 3000 Group C - ரூ. 2000 எஸ்சி / எஸ்டி / பெண்கள் / ஓபிஎச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aiimsrishikesh.edu.in/aiims/# அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ அல்லது ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்? ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்? நிர்வாகம் : இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடம் : 01 பணி : உதவியாளர் கல்வித் தகுதி : எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.18,420 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.igau.edu.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 09.10.2020 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Indira Gandhi Agricultural University (IGAU/IGKV) Raipur, Chhattisgarh, Jagdalpur, Chhattisgarh தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 200 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.igau.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை!

 ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை!

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம். ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை! ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை! நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : Junior Research Fellow மொத்த காலிப் பணியிடம் : 01 கல்வித் தகுதி : M.Sc Analytical Chemistry, M.Sc Chemistry, M.Sc Organic Chemistry துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : மாதம் ரூ.31,000 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக nissiddha@gmail.com என்ற இணையதளம் மூலம் 13.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

 ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள மெக்கானிக் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குளிர்சாதன இயந்திரத்திற்கான துறையில் டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.53 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மேலாண்மை : மத்திய அரசு பணி : மெக்கானிக் வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி : குளிர்சாதன இயந்திரத்திற்கான துறையில் டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://aiimsrishikesh.edu.in/aiims/# என்ற இணையதளம் மூலம் 17.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : உத்தரகண்ட் (டொமைசில்) யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ.1500 Group C - ரூ.1000 உத்தரகண்ட் டொமைசில் தவிர வேறு யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ. 3000 Group C - ரூ. 2000 எஸ்சி / எஸ்டி / பெண்கள் / ஓபிஎச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aiimsrishikesh.edu.in/aiims/# அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.