Skip to content

வேலையில்லையா?. தமிழக அரசு சார்பில் வெளிநாட்டில் வேலை.!!!


தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கீழ்க்கண்ட வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, கே.எம்.எஸ் கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 பேர். மாதசம்பளம் 72,000 வரை வழங்கப்படும். ஸ்டாப் செவிலியர் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 நபர்கள் தேவை. மாத சம்பளம் 2.5 லட்சம் வரை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று அந்த அறிவிப்பில், ஓமன், கத்தார், அயர்லாந்து போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உள்நாட்டைப் பொருத்தவரை சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த வேலைவாய்ப்பு குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ள 9176434488 மற்றும் 8667407470 ஆகிய தொலைபேசி எண்ணுக்கும், [email protected] என்ற மெயில் மற்றும் www.omcmanpower.com. என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளலாம்.

டிகிரி போதும்.. அரசு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?

டிகிரி போதும்.. அரசு வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?

 govt-job

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தில் (ECGC)-ல் காலியாக உள்ள Probationary Officer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Degree தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : ECGC Ltd

பணியின் பெயர் : Probationary Officer

மொத்த காலியிடங்கள் : 59

கல்வித்தகுதி : Degree தேர்ச்சி

கடைசி நாள் : 31.01.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://img.freejobalert.com/uploads/2021/01/Notification-ECGC-Ltd-Probationary-Officer-Posts.pdf

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை. உடனே விண்ணப்பியுங்கள்.!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)

மொத்த காலியிடங்கள்: 4

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலை: Research Fellow & Research Assistant

கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி - The Registrar (Recruitment), High Court, Madras - 600 104.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_152_2020.pdf

* https://www.mhc.tn.gov.in/recruitment/docs/appln_152_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு!

Alagappa university_job,karikudi alagappa university

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவியின் பெயர்:
Research Assistant - 05 காலிப் பணியிடம்

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் PG (Library & Information Science), MA (Economics/Rural Economics) அல்லது M.Sc (Economics/Econometrics), MBA டிகிரி, PG (Chemistry/Physics/Bio-Tech) பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
குறைந்தபட்சம்- ரூ.16,000/-

தேர்வுமுறை :
1. Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
alustride1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 22.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

 

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலிப்பணியிடம் அறிவிப்பு!

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலிப்பணியிடம் அறிவிப்பு!

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள Assistant Professors காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவியின் பெயர்:
Assistant Professors - Various

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Bachelor's Degree in Architecture அல்லது B. Arch/ Master's Degree in Architecture/ allied subjects of Architecture Degree/ Ph.D. பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
அனுபவ அடிப்படையில் சம்பளம்

தேர்வுமுறை :
1. Interview

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
முதல்வர் i / c, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு - 625 015

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை மேற்கண்ட முகவரிக்கு 18.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

101 அரசு காலியிடங்கள். விண்ணபிக்க நாளை கடைசி நாள்.!!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

காலியிடங்கள் : 101

கல்வித்தகுதி : 10 +2/ Degree/ Engineering

வயது வரம்பு : 27 - 33 ஆண்டுகள்

பணியிடம் : திருச்சி, தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு

விண்ணப்ப கட்டணம் : Rs.1000 for UR/ OBC/ EWS candidates and Rs.500 for SC/ ST/ PWD/ Women candidates
No fee for PWD/ Women aspirants.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஜனவரி 2021

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.nitt.edu

கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://recruitment.nitt.edu/GroupBC/advt/Short%20Notice%20-%20Ministerial%20and%20Technical.pdf

https://recruitment.nitt.edu/GroupBC/|

விண்ணப்பிக்க கடைசிநாள் 18-01-2020. காலியிடங்கள் 123. மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 IMG_20210116_144202

IMG_20210116_144130

MADURAI KAMARAJ UNIVERSITY (University with Potential for Excellence) MADURAI - 625021 RASHTRIYA UCHCHATAR SHIKSHA ABHIYAN - RUSA (Phase-2) Research, Innovation & Quality Improvement Call for Applications for Project Assistants Number of Vacancies - 123 Madurai Kamaraj University, a University with Potential for Excellence, has been supported by RUSA -Phase-II. The University is committed to Nation Building through promotion of Research and Innovation. The innovative eco system and entrepreneurship hub exist in the University, aim to nurture young talents in the emerging research themes. Applications are invited from eligible candidates to work as Project Assistants in the Research Projects sanctioned to Investigators under RUSA - Phase-II, Component 10 - Research, Innovation & Quality Improvement in various Schools in Madurai Kamaraj University. No. of Fellowships: 123 (One Hundred and Twenty Three) Fellowship: A consolidated amount of Rs. 16,000 (Rupees Sixteen Thousand only) Per Month Duration: 24 Months or coterminous with the project. Qualification: P.G. Degree in the Relevant Discipline with minimum of 55% of Marks. (5% relaxation will be given to BC/BCM/MBC&DNC/SC/SCA and differently abled) Application Procedure: For detailed information and School/Discipline wise vacancies, visit Madurai Kamaraj University (www.mkuniversity.ac.in) website. Interested candidates satisfying the above requirements shall apply through Google Online Form available at: https://forms.gle/eVWb7CvFGyxHgakq9 with uploading relevant documents/certificates. The Last date for submitting the Online Application Form is: 18.01.2021. No TA/DA will be paid for attending Written Test/Interview. The selected candidates may also register for Ph.D. in the relevant Disciplines. - REGISTRAR

அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் 1000 வினாக்கள் மற்றும் விடைகள் அடங்கிய புத்தக தொகுப்பு 64 பக்கங்களில் நீங்கள் படித்து பயண்பெற வேண்டிய தொகுப்பு

அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் 1000 வினாக்கள் மற்றும் விடைகள் அடங்கிய புத்தக தொகுப்பு 64 பக்கங்களில் நீங்கள் படித்து பயண்பெற வேண்டிய தொகுப்பு CLICK HERE

நிரந்தர பணி ஆசிரியரல்லாத பணிக்கு தகுதியானோர் தேவை.

IMG-20210106-WA0017

காயல்பட்டணம் ஆறுகநேரி மேல்நிலைப்பள்ளி ஆறுமுகநேரி - 628202 , Ph : 04639-280132 பள்ளியில் காலியாக உள்ள கீழே கண்ட ஆசிரியர் அல்லா பணியிடத்தை ( நிரந்தரம் ) நிரப்புவதற்கான நேர்காணல் 18.01.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு பள்ளியில் வைத்து நடைபெறுகிறது . தகுதி வாய்ந்த நபர் ( அரசு விதிகளின்படி ) உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பதவியின் பெயர் கல்வித் தகுதி இனம் / பால் 1.பதிவறை எழுத்தர் OC ஆண் 2.அலுவலக உதவியாளர் | 8th | oc ஆண் 3.இரவு காவலர் | தமிழ் எழுத படிக்க OC ஆண் தெரிந்திருக்க வேண்டும் செயலர் , காயல்பட்டணம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி , ஆறுமுகநேரி -628202 , தூத்துக்குடி மாவட்டம்

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷனில் வேலை..!! மாதம் ரூ.62,000 வரை சம்பளம்".

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. தனி உதவியாளர் (Personal Assistant) - 4
2. இளைய உதவியாளர் (Junior Assistant) - 10
3.நேரக்காப்பாளர் (Timekeeper) - 2
4. ஓட்டுநர் (Driver) - 3

கல்வித்தகுதி: 10th, Any Degree , Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.5,670 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://tancem.com/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2021

WOW : சாப்பிட்டு படம் பார்க்கும் வேலை.. ரூ35,000 சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

போனஸ் ஃபைண்டர் என்ற நிறுவனம் பீட்சா சாப்பிட்டுக்கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்கும் புதிய வேலை ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு மாத சம்பளம் ரூபாய் 35 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்பவர்கள் தினமும் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியாகும் தொடர் மற்றும் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுத வேண்டும்.

மேலும் அவர்கள் படம் பார்க்கும்போது சாப்பிடும் பீட்சாவின் சுவை அதில் சேர்க்கப்பட்ட கலவை பொருட்கள் உள்ளிட்டவற்றை பற்றியும் எழுத வேண்டும். இந்த பணிக்கான தேர்வு வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது என கூறப்படுகிறது

தமிழக வருமானவரித்துறையில் வேலை ( விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2021 ) :

தமிழக வருமானவரித் துறையில் நிரப்பப்பட உள்ள 38 வருமானவரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 38

பணி மற்றும் காலியிடங்கள்: 

பணி: Inspector of Income-tax - 12

சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

பணி: Tax Assistant - 16

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: குறைந்தபட்ச தகுதியாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-Tasking Staff (MTS) - 10

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விளையாட்டுத் துறையில், தடகளம் (ஆண்கள்,பெண்கள்), கூடைப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், கேரம் போன்ற விளையாட்டுகளில் சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.04.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் துறையில் வெற்றிப்பெற்ற சான்றிதழ்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.tnincometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/12/SPORTS_QUOTA_Notice_5_1_21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் துறையில் 17 காலியிடங்கள் அறிவிப்பு :

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் பணிகள் 2021: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் துறையில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்

நிறுவனம் / துறையின் பெயர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ்
துறையின் வகை:TN Jobs
மொத்தம் பணியிடங்கள்:17
பணியின் பெயர்:டிரைவர், கிளார்க் & அலுவலக உதவியாளர்
இடம்: கரூர்
தொடக்க நாள்: 14-01-2021
கடைசி நாள்: 10-02-2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .


பணியின் பெயர் மொத்தம் பணிகள்
அலுவலக உதவியாளர் 10
பதிவு எழுத்தர் 3
ஜீப் டிரைவர் 4

கல்வி தகுதி .


பணியின் பெயர்கல்வி தகுதி
அலுவலக உதவியாளர் 8 வது பாஸ் 
பதிவு எழுத்தர் 10 வது பாஸ் 
ஜீப் டிரைவர் 8 வது தேர்ச்சி + 5 வருட அனுபவம் 

வயது வரம்பு .

பணியின் பெயர்வயது வரம்பு
அலுவலக உதவியாளர் 30 ஆண்டுகள் வரை
பதிவு எழுத்தர் 30 ஆண்டுகள் வரை
ஜீப் டிரைவர் 30 ஆண்டுகள் வரை

தேர்வு செய்யும் முறை .

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்


பணியின் பெயர்சம்பளம்
அலுவலக உதவியாளர் மாதத்திற்கு ரூ .15,700 முதல் ரூ .50,000 வரை
பதிவு எழுத்தர் மாதத்திற்கு ரூ .15,900 முதல் ரூ .50,400 வரை
ஜீப் டிரைவர் மாதத்திற்கு ரூ .19,500 முதல் ரூ .62,000 வரை

விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள 53 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு :

தமிழக குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள 53 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு :

தமிழக குடிசை மாற்று வாரியத்தில் பணிகள் 2021: தமிழக குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள 53 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக குடிசை மாற்று வாரியத்தில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்

நிறுவனம் / துறையின் பெயர்: தமிழக குடிசை மாற்று வாரியத்தில்
துறையின் வகை:TN Jobs
மொத்தம் பணியிடங்கள்:53
பணியின் பெயர்:அலுவலக உதவியாளர்
இடம்: தமிழ்நாடு
தொடக்க நாள்: 16-01-2021
கடைசி நாள்: 31-01-2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .


பணியின் பெயர் மொத்தம் பணிகள்
அலுவலக உதவியாளர் 53

கல்வி தகுதி .

பணியின் பெயர்கல்வி தகுதி
அலுவலக உதவியாளர் 8 வது பாஸ் 

வயது வரம்பு .

பணியின் பெயர்வயது வரம்பு
அலுவலக உதவியாளர் குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 35 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை .

விண்ணப்பதாரர்கள் டி.என்.எஸ்.சி.பி துறை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்

பணியின் பெயர்சம்பளம்
அலுவலக உதவியாளர் ரூ. 15,700-50,000 / - மாதத்திற்கு

விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆவின் கோயம்புத்தூர் காலியிடங்கள் அறிவிப்பு :

ஆவின் கோயம்புத்தூர் காலியிடங்கள் அறிவிப்பு :

ஆவின் கோயம்புத்தூர் பணிகள் 2021: ஆவின் கோயம்புத்தூர் காலியாக உள்ள 15 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆவின் கோயம்புத்தூர் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்

நிறுவனம் / துறையின் பெயர்: ஆவின் கோயம்புத்தூர்
துறையின் வகை:TN Jobs
மொத்தம் பணியிடங்கள்:15
பணியின் பெயர்:மேலாளர், துணை மேலாளர், நிர்வாக மற்றும் செயலாளர்
இடம்: கோவை
தொடக்க நாள்: 15-01-2021
கடைசி நாள்: 01-02-2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .


பணியின் பெயர் மொத்தம் பணிகள்
மேலாளர்5
துணை மேலாளர் 8
தனியார் செயலாளர் 1
நிர்வாகி1

கல்வி தகுதி .


பணியின் பெயர்கல்வி தகுதி
மேலாளர்BE / B.Tech / UG பட்டம் 
துணை மேலாளர் பி.ஜி பட்டம் 
தனியார் செயலாளர் எந்த பட்டம் + தட்டச்சு எழுதுதல் 
நிர்வாகிடிப்ளோமா (சிவில்) 

வயது வரம்பு .

பணியின் பெயர்வயது வரம்பு
மேலாளர்வயது வரம்பு இல்லை
துணை மேலாளர் வயது வரம்பு இல்லை
தனியார் செயலாளர் வயது வரம்பு இல்லை
நிர்வாகிவயது வரம்பு இல்லை

தேர்வு செய்யும் முறை .

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்

பணியின் பெயர்சம்பளம்
மேலாளர்மாதத்திற்கு ரூ .37,700 முதல் ரூ .1,75,700 வரை
துணை மேலாளர் மாதத்திற்கு ரூ .35,600 முதல் ரூ .1,13,500 வரை
தனியார் செயலாளர் மாதத்திற்கு ரூ .20,600 முதல் ரூ .65,500 வரை
நிர்வாகிமாதத்திற்கு ரூ .20,600 முதல் ரூ .65,500 வரை

விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்பம் கட்டணம் ரூ .250 (பொது) மற்றும் ரூ .100 (எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி) .
  • விண்ணப்பம் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.

 46 பக்கங்கள் கொண்ட இன்றைய ( 16.01.2021)  கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பில்...

இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.

.ராணுவத்தில் மதபோதகர் பணி 

. திருச்சி என் ஐ டி பணி 

. திரைப்படவியல் பயிற்சி தேதி 

. முதுநிலை மருத்துவ நீட் தேர்வு தேதிகள் 

. ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தேதி, இடம் 

. வனத்துறை சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 

. நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஆலோசனை 

. லாஜிஸ்டிக், தனியார் மேற்பார்வையாளர், ஆசிரியர் பணிகள் குறித்த விவரங்கள் 

. தபால் துறை தேர்வு தமிழில் எழுதலாம் குறித்தும் முழு தகவல்கள் 

. மதிய அரசில் 6500 பட்டதாரி பணிகள்

. 100மேற்பட்ட நிறுவனம் 6000மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம் JAN 30-31

. கடற்படையில் பணி 

. ராணுவத்தில் 400+பட்டதாரி பணிகள் 

. வயது வரம்பு தளர்வு குறித்த தகவல்கள்.. 


மேலும் பல்வேறு வேலைவாய்ப்பு, தகவல்கள் அடங்கிய கோப்பு இயன்றவரை அனைவருக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்... நாம் அறிந்ததை உலகறிய செய்வோம்...


Today Education And Employment News Collection - Download here...

வேலைவாய்ப்பு: இந்தியன் ரயில்வேயில் வேலை. தேர்வு எழுத அவசியமில்லை. உடனே போங்க..!!

வேலைவாய்ப்பு: இந்தியன் ரயில்வேயில் வேலை. தேர்வு எழுத அவசியமில்லை. உடனே போங்க..!!

இந்திய ரயில்வே (Indian Railways) துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது ரயில் சக்கர ஆலையில் (Rail Wheel Plant) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு நியமனங்கள் இப்போது செய்யப்படுகின்றன.

நிறுவனம்: இந்தியன் ரயில்வே (Indian Railways)

பணிக்கு அமர்த்தும் அமைப்பு : ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் (Railway Recruitment Board)

காலியிடங்கள்:

பட்டதாரி பொறியாளர்கள் (Graduate Engineers) - 10

பொறியியல் டிப்ளோமா (Diploma of Engineering) - 60

கல்விதகுதி : பொறியியல் பட்டம் அல்லது டிப்ளோமா (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) தேர்ச்சி

விண்ணப்பக் கட்டணம் : இல்லை

கடைசி தேதி : 14.01. 2021

விண்ணப்பிப்பது எப்படி : நேஷனல் அப்ரெண்டிஸ்ஷிப் போர்ட்டல் (National Apprenticeship Portal) (https://portal.mhrdnats.gov.in/announcements) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ள நபர்கள் இந்தியன் ரயில்வேயின் (Indian Railways) அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://rwf.indianrailways.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிகளுக்கு தேர்வர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இருக்காது. பொறியியல் டிப்ளோமா / பட்டப்படிப்புகளில் பெறப்பட்ட மதிப்பெண் உள்ளிட்ட சில திறன் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (marks obtained in Engineering diploma/Degree exams).

மேலும் கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

https://rwp.indianrailways.gov.in/uploads/files/Personnel.pdf

வேலை வாய்ப்பு பதிவை மாற்ற எளிய வழிமுறை :

 

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செய்துள்ள பதிவை, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற, எளிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் வசிப்போர், இங்குள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலை வேண்டி பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் சென்றுள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவை, தற்போது தங்கள் உள்ள மாவட்டத்துக்கு மாற்றம் செய்ய, எளிய முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்ற தாசில்தார் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிப்பெயர்ச்சி, இருப்பிட சான்று, ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், அதற்கான அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, நடைமுறை இருந்தது. தற்போது, மாநில வேலைவாயப்பு சுற்றறிக்கையின் படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற, சுய சான்றளிக்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது, டிரைவர் லைசென்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து, மாற்றம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை எளிதாக மாற்றி மக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கலப்பு திருமணங்கள் பற்றி நோட்டீஸ் தேவையில்லை. புதிய உத்தரவு..!!

inter cast marriage_new rules _high court

கலப்பு திருமணங்கள் செய்பவர்கள் தங்களை பற்றிய அறிவிப்பை அளிக்க தேவையில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்புத் திருமணங்கள் சட்டப்படி, பதிவு அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்களைப் பற்றிய அறிவிப்பை மாவட்ட திருமண அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர் அதனைப் பதிவு அலுவலக நோட்டீஸ் போர்டில் 30 நாட்கள் ஒட்டி வைப்பார். இந்த விதி அடிப்படை உரிமைகளான சுதந்திரம் மற்றும் தனி உரிமை ஆகியவற்றில் போர் தொடுப்பதாகும் என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் இது தேவையற்றது என்று தீர்ப்பளித்துள்ளது.

இதனால் தம்பதிகள்மீது தேவையற்ற சமூக அழுத்தங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே தங்கள் விவரங்களை வெளியிடலாமா கூடாதா என்பதை தம்பதிகள் முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை. சம்பளம் எவ்வளவு தெரியுமா?. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை. சம்பளம் எவ்வளவு தெரியுமா?. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம்

பணி: உதவி புரோகிராமர் (Assistant Programmer)

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

தகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் மற்றும் கம்யூட்டர் அப்பிளிகேசன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பம்போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.01.2021

மேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.