Skip to content

PAN CARD ADHAR CONNECT RELATED POST:

பான் கார்டு – ஆதார் இணைப்பு புதிய படிவம் வெளியிட்டது வரித்துறை!!!

பான் கார்டு – ஆதார் இணைப்பு புதிய படிவம் வெளியிட்டது வரித்துறை
புதுடில்லி, : பான் என்னும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய, ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.
மக்கள் பீதி
‘ஜூலை 1க்குள், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப்படும்’ என, சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் தகவல் வெளியானதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்தனர்.

INSPIRE-Online nomination for the year 2017-18 has been extended till 15 August 2017.

INSPIRE-Online nomination for the year 2017-18 has been extended till 15 August 2017.

INSPIRE-Online nomination for the year 2017-18 has been extended till 15 August 2017.

INSPIRE-Online nomination for the year 2017-18 has been extended till 15 August 2017.

TOMORROW PG TRB EXAMINATION -INSTRUCTION FOR STUDENTS:

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில், 41 மையங்களில், 15ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை, 9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, 'பால் பாய்ண்ட்' பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேர்வு மையத்திற்குள்வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும் சோதனையிடுவர்.

Rank list released for Veterinary courses-2017-18:

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: தருமபுரி பழங்குடியின மாணவி பி.சவுமியா 200/200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை
கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி பழங் குடியின மாணவி பி.சவுமியா 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு 21 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தரவரி சைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரி வித்தார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல் வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங் களில் கால்நடை மருத்துவக் கல்லூரி கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால் நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன.

PG TRB NEW ANNOUNCEMENT 1732 POST-BY TRB

1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3395 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

TODAY RASI PALAN 30.06.2017:

தின பலன்-30.06.2017
மேஷம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

MBBS APPLICATION RELATED NEWS:

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 

SSA CONSOLIDATE SALARY RELATED POST:

தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு

கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.மாநிலத்தில் சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள், மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர் தவிர்த்து, வட்டார கணக்காளர், பள்ளி கணக்காளர், கணினி 'புரோகிராமர்', கணிணி பயிற்றுனர், கட்டட பொறியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.

SUPER GOVERNMENT SCHOOL |MUDAIYUR AIDED SCHOOL:

மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்

திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த, மாம்பாக்கம் ஊராட்சி, முடையூர் கிராமத்தில், அரசு உதவி பெறும், ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1950ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஏற்படுத்தப்பட்டு, 1954ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
எண்ணிக்கை குறைவு 
இப்பள்ளியில் வழுவதுார், காட்டூர், கிளாப்பாக்கம், தத்தளூர், நரப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தற்போது அந்த கிராமங்களில், புதிய தொடக்கப்பள்ளிகள் வந்துள்ளதால், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

10TH 12TH PAPER VALUATION ERROR | SOME TEACHERS AFFECTED:

விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

CRC - Absent Teacher Training Held on 1.7.2017

24.06.2017 அன்று PRIMARY CRC - இல் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 01.07.2017 மீண்டும் பயிற்சி நடைபெறும்! பயிற்சியின் போது C.L,M.L. அனுமதி இல்லை!

CRC - Absent Teacher Training Held on 1.7.2017



ELEMENTARY EDUCATION | EDUCATION MINISTER SOME REPLY:

ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தி.மு.க., - ரகுபதி: தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது. இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.
தி.மு.க., - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

WHTSAPP SEND MAIL NEW UPDATE:

இனி வாட்ஸ்அப் மூலமே மெயில் அனுப்பலாம்: இது லேட்டஸ்ட் அப்டேட்!

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக
உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
இதன் காரணமாக பயனாளர்களை மேலும் கவர வாட்ஸ்அப் பல்வேறு எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதியையும் இதனுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

1997 APPOINTMENT TEACHERS REQUESTING TO EDUCATIONAL MINISTER::

20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்*

1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் 
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கனிவுடன் கோரிக்கையை கேட்ட செயலர் அவர்கள் இது குறித்து நல்லதொரு அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வில் பிற ஆசிரியர்களுடன் உள்ள ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவம் நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்...இவண் *ஆசிரியர்களில் கடைக் கோடியில் தனித்து விடப்பட்ட 1997 முதல் 2002 வரை பணியேற்ற ஆசிரியன்*..