Skip to content
Showing posts with label EDNL NEWS. Show all posts
Showing posts with label EDNL NEWS. Show all posts

மத்திய அரசு ஊழியர்களுக்கு 32% அகவிலைப்படி – உண்மை நிலவரம் என்ன?

 

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் ஜூலை 2021 முதல் 32 சதவீத அகவிலைப்படி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


அகவிலைப்படி உயர்வு:

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வரிவசூல் பாதிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை உருவானது. இதனை சரிசெய்யும் பொருட்டு ஜனவரி 2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இது ஜூலை 2021 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த உத்தரவினை திரும்ப பெரும் நேரத்தில் மத்திய அரசு துறைகளில்

பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய பயனை அடைவார்கள் என கூறப்படுகிறது. அதாவது ஜனவரி 2020 இல் DA 4%, ஜூலை 2020 இல் 3% அதிகரிப்பு ஏற்படும். இப்போது 2021 ஜனவரியில் 4% உயரும். இதன் மூலம் DA 17% -லிருந்து 28% வரை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் ஜூன் 2021 க்குள் DA மேலும் 3-4% அதிகரிக்கக்கூடும். இதன் மூலம், ஜூன் 2021 இல் தடையை நீக்கிய பின்னர் DA 30-32% ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மத்திய

அரசால் DA நிறுத்தப்பட்ட போது, ​​2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை அரியர் தொகை எதுவும் பெறப்பட மாட்டாது என உத்தரவில் தெளிவாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு பின் பிளஸ் 2 செய்முறை தேர்வு (Dinamalar):

 

பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்தலுக்கு பின் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுவரை பாடங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மே, 3ல் துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு தேதிக்கு முன், ஏப்., 6ல் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து விடுகிறது. இதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், அவர்களுக்கான பாடங்களை உரிய காலத்தில் முடிக்கவும், போதிய கால அவகாசம் கிடைத்து உள்ளது.

எனவே, இந்த அவகாசத்தை பயன்படுத்தி, பிளஸ் 2 செய்முறை தேர்வை, சட்டசபை தேர்தலுக்கு பின், ஏப்ரலில் நடத்தி கொள்ள பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.அதுவரை, மாணவர்களுக்கு பாடங்களை தொடர்ந்து நடத்தவும், திருப்புதல் தேர்வுகளை நடத்தி, மாணவர்களை பொதுதேர்வுக்கு தயார்படுத்தவும், பள்ளி ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மொத்தம் 510 பணியிடங்கள்! ஊதியம் ரூ.55 ஆயிரம்! மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் காலியாக உள்ள State Programme Coordinator, Young Fellow மற்றும் Cluster Level Resource Person பணியிடங்களை பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் - ஹைதராபாத் (NIRDPR)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 510

பணி : State Programme Coordinator, Young Fellow மற்றும் Cluster Level Resource Person

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு :

State Programme Coordinator: விண்ணப்பதாரர் 30 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Young Fellow: 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Cluster Level Resource Person: 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.12,500 முதல் ரூ.55,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nirdpr.org.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirdpr.org.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இந்திய உணவு துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

 

இந்திய உணவு கழகம் Food Corporation Of India இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை தங்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பினை பகிர்ந்துள்ளது. ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம் . மேலும் இப்பணிகளுக்கான விரிவான அறிவிப்பும் இந்த படிவத்தில் இணைக்க பட்டுள்ளது.

துறையின் பெயர்: Food Corporation Of India

பதவிகள்: Assistant General Manager, Medical Officer

வயது வரம்பு: அதிகபட்சம் 35

ஊதியம்: 50,000 - 1,80,000

விண்ணப்ப கட்டணம்: 1000

விண்ணப்பிக்கும் தேதி: 01-03-2021

கடைசி நாள்: 31-03-2021

Official PDF Notification – https://www.recruitmentfci.in/assets/category_I/FCI%20Cat%20I%20Advt%20English.pdf

Apply Online – https://www.fci.gov.in/

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 78 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Resident

மொத்த காலிப்பணியிடங்கள் : 78

கல்வித் தகுதி : Senior Resident பணியிடங்களுக்கு MD/ MS/ DNB போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.67,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய நாட்களில் ஜிப்மர் கல்வி மையம், ஜிப்மர், புதுச்சேரி என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
  • பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

கடலூர் மாவட்டத்தில் மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு நேர்காணல் :

கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் உதவியாளர் பணியிடங்களுக்கு 619 பேரிடம் நேற்று நேர்காணல் நடந்தது.

கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவர், செவிலியர், உதவியாளர் பணிகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையே தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள உத்தர விட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 66 மினி கிளினிக் குகளுக்கு தலா 66 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய் யப்பட்டனர்.

இந்நிலையில் உதவி யாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் நேற்று கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. இதற்கு 8-ம் வகுப்புத் தேர்ச்சி கல்வித் தகுதியாகும். நேர்காணலில் பங்கேற்றிருந்த பெண்களிடம் விசாரித்த போது பெரும்பாலானோர் முதுகலை படித்துவிட்டு இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. மேலும் தற்போது வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே அரசு வழங்கும் மாதம் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் கிடைக்கும் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 565 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இது தவிர சிலர்நேரிடையாகவும் இன்று (நேற்று)வந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து 619 பேர் விண்ணப்பித் துள்ளனர் என்று தெரிவித்தார்.


அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அதில் Project Fellow பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகவல்களையும் தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Biotech/ Microbiology/ Biochemistry/ Molecular Biology பாடங்களில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் சோதனை மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 08.03.2021 அன்று நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.03.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://alagappauniversity.ac.in/uploads/notifications/DST-SERB-DBT-23.02.2021.pdf

ஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.!!

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டென்ட்.

காலிப்பணியிடங்கள்: 2,098.

வயது: 40க்குள்.

சம்பளம்: ரூ.36, 900 - ரூ.1,16, 000.

கல்வித்தகுதி: Bachelor degeree, master degree, Post graduate, B.A.Ed,B.SC, B.E.d.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிக்க கடைசி: மார்ச் 25.

மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nici.n என்ற இணையதளத்தை பார்க்கவும்

The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.

SPD PROCEEDINGS:INDIA TOY FAIR-2021- 27.2.21முதல் 02.03.21 முடிய பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல் முறைகள்.

மத்திய கல்வி அமைச்சகம் மூலம் " The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மேற்காணும் கண்காட்சி சார்ந்து பதிவு செய்தல் குறித்த விளக்க நடைமுறை மற்றும் அறிவுரைகள் அடங்கிய மத்திய கல்வி அமைச்சகக் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இக்கண்காட்சில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்ளுதல் வேண்டும். மேற்படி கண்காட்சியினை பெரும்பான்மையான மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு பயன்பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன . எனவே , இக்கண்காட்சியில் பங்கேற்க உரிய பதிவுகள் செய்து பயன்பெறும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சி நடைபெறும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் , பங்கேற்பாளர்கள் பங்குபெறுவதை கண்காணிக்கவும் மற்றும் அதன் விவரங்களை அனுப்பப்படும் Google Sheet ல் பதிவுகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG_20210224_220449

ஐடிஐ முடித்தவர்களுக்கு... 1, 159 காலிப்பணியடங்கள்.. இந்திய கடற்படையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

இந்திய கடற்படையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Tradesman Mate.

பணியிடங்களின் எண்ணிக்கை: 1,159.

தகுதி: ஐடிஐ தேர்ச்சி.

வயதுவரம்பு: 25க்குள்.

ஊதியம்: ரூ.56, 900 வரை.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7.

மேலும் விபரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in

வேலைவாய்ப்பு: "561 காலியிடங்கள்". ஐடிஐ படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 561

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.wcr.indianrailway.gov.in அல்லது http://mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Jabalpur/Act%20Apprentice%20Notificatioin%202020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ரூ.3.20 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா?


மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (Ministry of Port)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Chairperson மற்றும் பொது மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி:

பொது மேலாளர் : இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் competency as master of Foreign Going என்ற தகுதிச் சான்றிதழை பெற்று, அதிகபட்சம் 08 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Chairperson : அரசுத் துறையில் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் கையாளும் திறன், நிர்வாக அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.1,00,000 முதல் ரூ.3,20,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

பொது மேலாளர் : இங்கே கிளிக் செய்யவும்.

Deputy Chairperson : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://shipmin.gov.in/?q=orders/vacancies என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2021 மற்றும் 24.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://shipmin.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஒரு டிகிரி போதும். ஆக்சிஸ் வங்கியில் வேலை. 11,256 காலியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்கள்.!!!

ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆக்சிஸ் வங்கியில் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: business associate, team member
காலிப்பணியிடங்கள்: 11,256
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: டிகிரி.
வயது: 18 க்கு மேல்
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
தேர்வு முறை: தகுதி பட்டியல், நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

 

வேலைவாய்ப்பு: "13,026 காலிப்பணியிடங்கள்".நேரு யுவ கேந்திர சங்கதனில் வேலை. உடனே போங்க..!!

நேரு யுவ கேந்திர சங்கதன் நிறு வனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் National Youth Volunteer பணிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு 20.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நேரு யுவ கேந்திர சங்கதன் பணியிடங்கள் :

National Youth Volunteer பணிகளுக்கு என 13026 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.04.2021 அன்று கணக்கீட்டின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NYKS கல்வித்தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.5,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NYKS தேர்வுச் செயல்முறை :

கணினி பயன்பாட்டின் உயர் கல்வி தகுதி மற்றும் அடிப்படை அறிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரிமூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

"திருச்செந்தூர் கோயிலில் வேலைவாய்ப்பு". மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.? உடனே விண்ணப்பிங்க.!!

 

திருச்செந்தூர் முருகன் கோவிலில், 36 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள, கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு, உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை

tiruchendurmurugantemple(dot)tnhrce(dot)in/ என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.02.2021 மாலை 5.00 மணி

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோவில், திருச்செந்தூர், - 628215, தூத்துக்குடி மாவட்டம்.

பதவி: இலை விபூதி போத்தி (ஊதிய விகிதம்: 15900 - 50400)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: திருவலகு (ஊதிய விகிதம்: 15900 - 50400)

பதவி: பலவேலை (ஊதிய விகிதம்: 15700 - 50000)

பதவி: தவில் (ஊதிய விகிதம்: 18500 - 58600)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சிக்கான சான்று.

பதவி: தாளம் (ஊதிய விகிதம்) 18500 - 58600)

பதவி: சுருதி (ஊதிய விகிதம் 15700 - 50000)

பதவி: காயாமொழி கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 11600 - 36800)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், இதர நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சிக்கான சான்று.

பதவி: காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 10000 - 31500)

பதவி: குலசை கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 11600 - 36800)

பதவி: குலசை கோயில் அத்தியான வாத்தியார் (ஊதிய விகிதம் 11600 - 36800)

பதவி: குலசை கோயில் தேவாரம் (ஊதிய விகிதம்: 11600 - 36800)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள், அரசால், இதர நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் பயின்று குறைந்தபட்சம் மூன்று வருடம் பயின்று தேர்ச்சிக்கான சான்று.

பதவி: குலசை கோயில் மடப்பள்ளி (ஊதிய விகிதம் 11600 - 36800)

தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இத்திருக்கோயில் நடைமுறை பழக்கவழக்கத்தின்படி நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: தட்டச்சர் (ஊதிய விகிதம் 18500 - 58600)

தகுதி: 1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் SSLC தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும்

2. அரசு தொழில் நுட்ப தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை (or) தமிழில் உயர்நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை (or) ஆங்கிலத்தில் உயர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை

3. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் Computer Application and Office Automation தேர்ச்சி பெற்றதற்கான பயிற்சி சான்று, அதற்கு இணையான சான்று.

பதவி: அலுவலக உதவியாளர் (ஊதிய விகிதம் 15900 - 50400)

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி.

பதவி: இளநிலை மின் பொறியாளர் (ஊதிய விகிதம் 35600 - 112000)

தகுதி: பொறியியலில் மின்னியல் பட்டயப்படிப்பு சான்று.

பதவி: உதவி மின் கம்பியாளர் (ஊதிய விகிதம் 16600 - 52400)

தகுதி:

1. அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப பள்ளியில் மின் கம்பியர் பணிக்கான சான்று

மற்றும்

2. மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து "H' சான்று

பதவி: பிளம்பர் (ஊதிய விகிதம் 15900 - 50400)

தகுதி: அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப பள்ளியில் குழாய் பணிக்கான சான்று மற்றும்

2. குறிப்பிட்ட பணியில் ஐந்து வருட முன் அனுபவம், பயிலுணர் தகுதி இரண்டு வருடத்திற்கான சான்று.

விண்ணப்ப படிவம் உள்ளிட்ட விவரங்கள்:

நிபந்தனைகள்

1. விண்ணப்பதாரர்கள் 01.02.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. வரிசை எண்.1 முதல் 17 பணியிடங்களுக்கு தனித்தனியாக எழுத்துத் தேர்வு / நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

4. அனைத்து பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் இதர தகுதி விவரங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், tnhrce (dot)gov(dot)in, tiruchendurmurugantemple(dot)tnhrce(dot)in இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

5. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

6. தெய்வீகத்தாலும், இராஜீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

இவ்வாறு, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம் :நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாங்கித் தருகிறது.

பி.எஸ்.சி நர்சிங் முடித்து ஆங்கில திறன் அறியும் தேர்வான IELTS அல்லது OET போன்றவற்றில் 7 பேன்ட் அல்லது பி, சி கிரேடு வைத்துள்ளவர்களுக்கு அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 2 முதல் 2.5 லட்சம் மாத சம்பளத்தில் தமிழக அரசே வேலை வாங்கி தருகிறது.

அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற நிறுவனத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. கிண்டியிலுள்ள இந்நிறுவனம் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். டிப்ளமோ, பொறியியல், நர்சிங், துணை மருத்துவ படிப்புகள், எம்.பி.பி.எஸ்., பிட்டர், வெல்டர் போன்றவற்றில் ஐ.டி.ஐ., முடித்தவர்களை இவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நர்சிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. பிரிட்டன் அரசே 100 நர்சுகளை தங்கள் நாட்டு அரசு மருத்துவமனைகளுக்காக எடுக்கிறது. அவர்களுக்கான ஊதியம் 2.5 லட்சம் வரை. அதே போல் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வேலை பார்க்க 20 நர்சுகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இது தவிர கத்தார் தலைநகர் தோஹாவில் வேலை பார்க்கவும் நர்சுகள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தார் பணிக்கு ரூ.70 ஆயிரம் வரை சம்பளம். அதற்கென கத்தார் டேட்டா ப்ளோ அல்லது கத்தார் புரோமெட்ரிக் முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 31 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.omcmanpower.com/currentopenings.php தொடர்பு எண்: 044- 22505886.

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? ஆன்லைன்ல ரொம்ப ஈசியா எடுக்கலாம். எப்படி தெரியுமா..?

 

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? ஆன்லைன்ல ரொம்ப ஈசியா எடுக்கலாம். எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி என்பதைதான் இங்கு பார்க்கபோகிறோம். உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு கம்ப்யூட்டர் கூட தேவையில்லை. அதற்கு உங்கள் மொபைலில் மத்திய அரசின் UMANG App மட்டும் டவுன்லோட் செய்யவேண்டும். UMANG App-ல் EPFO ஆப்ஷனுக்கு செல்லவேண்டும். அதில் 'Employee Centric' ஆப்ஷனை கிளிக் செய்து, 'Raise Claim' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களது EPF UAN Numberஐ பதிவிட வேண்டும். தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Passwordஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து 'Submit' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு 'Claim reference number' அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். UAN Number வுடன் ஆதார், பான்கார்டு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.

 46 பக்கங்கள் கொண்ட இன்றைய ( 16.01.2021)  கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பில்...

இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.

.ராணுவத்தில் மதபோதகர் பணி 

. திருச்சி என் ஐ டி பணி 

. திரைப்படவியல் பயிற்சி தேதி 

. முதுநிலை மருத்துவ நீட் தேர்வு தேதிகள் 

. ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தேதி, இடம் 

. வனத்துறை சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 

. நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஆலோசனை 

. லாஜிஸ்டிக், தனியார் மேற்பார்வையாளர், ஆசிரியர் பணிகள் குறித்த விவரங்கள் 

. தபால் துறை தேர்வு தமிழில் எழுதலாம் குறித்தும் முழு தகவல்கள் 

. மதிய அரசில் 6500 பட்டதாரி பணிகள்

. 100மேற்பட்ட நிறுவனம் 6000மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம் JAN 30-31

. கடற்படையில் பணி 

. ராணுவத்தில் 400+பட்டதாரி பணிகள் 

. வயது வரம்பு தளர்வு குறித்த தகவல்கள்.. 


மேலும் பல்வேறு வேலைவாய்ப்பு, தகவல்கள் அடங்கிய கோப்பு இயன்றவரை அனைவருக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்... நாம் அறிந்ததை உலகறிய செய்வோம்...


Today Education And Employment News Collection - Download here...