Skip to content

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பணி :

 அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பணி :
பணி : 

அலுவலக உதவியாளர்

பணியிடம் :

சென்னை

கல்வித் தகுதி : 

இப்பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றறு இருக்கவேண்டும்

விண்ணப்பிக்க

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 


The Dean,

The Registrar,

Anna University,

Chennai - 600 025

விண்ணப்பிக்க கடைசி நாள்:

19.09.2020


மேலும் விவரங்களுக்கு:

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

10.,ம் வகுப்பு 12.,ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை :

உத்தரகண்டின் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



வயது வரம்பு : 

18 - 27 

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவுக்கு 21 - 30 வயதுக்குள் 

கல்வித்தகுதி: 

எம்.டி.எஸ்., பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

ஸ்டெனோ பிரிவுக்கு பிளஸ் 2 தேர்ச்சி 

மற்ற பணிகளுக்கு B.E முடித்திருக்கவேண்டும்


விண்ணப்பிக்க கடைசிநாள் : 

15.9.2020.

மேலும் விபரங்களுக்கு:

 

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

Grama Niladhari job in Tamil Nadu Postal Department: 10th class graduates can apply

கல்வித்தகுதி

10-ம் வகுப்பு தேர்ச்சி யோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு 

18 வயது முதல் 40 வயது வரை 

விண்ணப்பிக்க


விண்ணப்பிக்க கடைசி நாள்

30.09.2020

மேலும் விவரங்களுக்கு

NEET 2020 - Original Question Paper And Answer key:

neet%252B2020


The National Eligibility cum Entrance Test (NEET) is held today – September 13 from 2 pm to 5 pm. Over 15.97 lakh candidates will appear for the medical college entrance exam from 3,843 exam centres across the country.


NEET 2020 -  Answer Key ( soon )

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு.!





DBCWO அதிகாரபூர்வ இணையதளத்தில் Cook காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8TH கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Trichy) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தபால் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க
விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : DBCWO
பணியின் பெயர் : Cook
கல்வித்தகுதி : 8TH
பணியிடம் : Trichy
தேர்வு முறை : I nterview
கடைசி நாள் : 18/09/2020
முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020090512.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

PNB இல் Job offer, மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பதவிக்கு இங்கு விண்ணப்பிக்கலாம் Apply here for Job offer, Manager and Senior Manager position in PNB

 

சிறப்பு அதிகாரி (மேலாளர் மற்றும் மூத்த மேலாளர்) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் pnbindia.in இல் உள்ள இடுகைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியான மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் (Eligible and Interested candidates) 2020 செப்டம்பர் 8 முதல் pnbindia.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) SO 2020 இன் ஆன்லைன் ஆட்சேர்ப்புக்கான கடைசி தேதி 2020 செப்டம்பர் 29 வரை ஆகும். விண்ணப்ப செயல்முறை, தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கான அளவுகோல்கள், ஊதிய அளவு மற்றும் பிற விவரங்களுக்கு மேலும் படிக்கவும்.

முக்கிய தேதி

  • ஆன்லைன் பதிவின் ஆரம்பம்: 8 செப்டம்பர் 2020
  • ஆன்லைன் பதிவின் கடைசி தேதி: 29 செப்டம்பர் 2020
  • தற்காலிக தேர்வு தேதி (Tentative Exam Date ): அக்டோபர் / நவம்பர் 2020

இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்த இந்த நான்கு வங்கிகள்....!!

PNB SO ஆட்சேர்ப்பு 2020 விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/PWBD category candidates - Rs. 175/-
  • All others: Rs. 850/-

PNB SO ஆட்சேர்ப்பு 2020 வயது வரம்பு

  • மேலாளர் - 25 முதல் 35 வயது வரை
  • மூத்த மேலாளர் - 25 முதல் 37 வயது வரை

குறிப்பு: அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒதுக்கப்பட்ட வகை வேட்பாளர்களுக்கு வயது தளர்வு இருக்கும்.

மேலாளர் பதவிக்கான காலியிட விவரங்கள்

  • மொத்த இடுகைகள் - 535 பதிவுகள்
  • மேலாளர் (Risk) - 160 பதிவுகள்
  • மேலாளர் (Credit) - 200 பதிவுகள்
  • மேலாளர் (Treasury) - 30 பதிவுகள்
  • மேலாளர் (Architect) - 25 பதிவுகள்
  • மேலாளர் (Civil) - 2 பதிவுகள்
  • மேலாளர் (Economic) - 10 பதிவுகள்
  • மேலாளர் (HR) - 10 பதிவுகள்

மூத்த மேலாளர் பதவிக்கான காலியிட விவரங்கள்

  • மூத்த மேலாளர் (Risk) - 40 பதிவுகள்
  • மூத்த மேலாளர் (Credit) - 50 பதிவுகள்

PNB SO ஆட்சேர்ப்பு 2020 தகுதி அளவுகோல்

வேட்பாளர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி பதவிகளுக்கு ஏற்ப வித்தியாசமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் காணலாம்.

எவ்வளவு சம்பளம் கிடைக்கும்

  • மேலாளர் - 31705-1145 / 1-32850- 1310 / 10-45950 ரூபாய்.
  • மூத்த மேலாளர் - 42020 -1310 / 5-48570- 1460 / 2-51490 ரூபாய்.

நீங்கள் எவ்வாறு தேர்வு செய்வீர்கள்

ஆன்லைன் சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்

1 ஆண்டில் 18 அரசு வங்கியில் 1.5 லட்சம் கோடி மோசடி!! எந்த வங்கிக்கு எவ்வளவு இழப்பு? முழு விவரம்

தேர்வு முறை

PNB SO ஆட்சேர்ப்பு 2020 தேர்வு பகுத்தறிவு, ஆங்கில மொழி, அளவு திறன் மற்றும் தொழில்முறை அறிவு ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய 120 நிமிடங்களுக்கு 200 மதிப்பெண்களாக இருக்கும். ஆங்கில மொழி சோதனை தவிர அனைத்து தேர்வுத் தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும். ஆன்லைன் சோதனையில் தவறான பதில் அளிக்கப்பட்டால் எதிர்மறை குறிக்கும். தவறான பதிலில், எண்ணின் கால் பகுதி கழிக்கப்படும்.

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு....

நம் இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் என்ட்ரி பிரிவில்  12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்



பணி : 
டெக்னிக்கல் என்ட்ரி
கல்வித்தகுதி : 
12 ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 
16.5 - 19.5 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க:

http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

விண்ணப்பிக்க கடைசிநாள் : 
9.9.2020
மேலும் விபரங்களுக்கு:
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TES_44.pdf

ரயில்வே போட்டி தேர்வுகளில் பங்கேற்க தமிழக இளைஞர்களுக்கு ஆர்வமில்லை: தேர்வு வாரிய தலைவர் தகவல்:

ரயில்வே போட்டித்தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பெங்களூரூ ஆர்ஆர்பி தலைவர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்தியாவில் ரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட மத்திய துறைகளில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது தகுதித்தேர்வை (சிஇடி) நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை மண்டல பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) சார்பில் என்ஆர்ஏ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், இணையவழியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் (ஆர்ஆர்பி) தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி பேசும்போது, ‘‘சிஇடி தேர்வால் கிராமப்புற தேர்வர்கள்,பெண்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், ஒரே தேர்வர் பலமுறை முதல்நிலைத் தேர்வு எழுதுவது தவிர்க்கப்படும். இதற்கான பாடத்திட்டம் தேசிய அளவில் உருவாக்கப்படும்’’ என்றார்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் நாளை போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு:

neet-exam-jee-2020-postponement-congress-to-hold-nationwide-protests-on-august-28-against-conduct-of-exams
நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆக.28-ம் தேதி (நாளை) போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும் கடந்த வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆக.28-ம் தேதி (நாளை) போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கோவிட் பெருந்தொற்று சூழலில் தேர்வுகளை நடத்தும் அரசின் முடிவு மாணவர்கள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் சர்வாதிகார நடவடிக்கை இது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரியுள்ளனர்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பிரிவுகள் சார்பில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் போராட்டம் நடைபெற உள்ளது. மாநிலம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்படும்.
அனைத்துப் போராட்டங்களும் சமூக இடைவெளி விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தே நடைபெறும். அதேபோலக் கட்சி சார்பில் ஆன்லைன் போராட்டமும் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து சமூக வலைதளங்களில் தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரிப் பதிவுகள் இடப்படும். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் #SpeakUpForStudentSaftey என்ற ஹேஷ்டேகில் பதிவுகளைப் பகிரலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்திய அரசின் முடிவால் 25 லட்சம் மாணவர்களின் உடல்நலனும் பாதுகாப்பும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

CHAPTER WISE QP FOR NEET BIOLOGY - XII (அனைத்து பாடங்களும் ஒரே பக்கத்தில் 12ஆம் வகுப்பு உயிரியல் ஆங்கில வழி )

NEET BIOLOGY VIDEOS - HUMAN HEALTH AND DISEASE -2020

வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு :

 
வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு அளிக்கப்படுவதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே 2020ம் ஆண்டு வங்கி பணியாளர் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் (24ம் தேதி) நேற்று முதல் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க கடைசி 26ம் தேதி (நாளை). தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது.

ஜே.இ.இ., நீட் தேர்வுகளை தள்ளி வைக்க கோரி மோடிக்கு மம்தா கடிதம் :

புதுடில்லி: மாணவர்களின் பாதுகாப்பு கருதி நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை, ஜூலை, 26ம் தேதி நடத்த, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.

இந்த வருடம் மட்டும் நீட் தேர்வு வேண்டாம்! ராகுல் காந்தி ட்வீட்!


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ முதன்மைத் தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதியும் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசியலை கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார், அதில், "ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றும், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவை மத்திய அரசு எட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியா நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கல்லூரியில் செல்போன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும்!

 
கொரோனா பாதிப்பின் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு தாமதம் ஆனது. அதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த மாதம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதால், அனைத்து தனியார் கல்லூரிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே போல, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

கரோனா அச்சம்: ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்; ஜி.கே.வாசன்


ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:
"ஜேஇஇ தேர்வு வருகிற செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையும் நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 13-ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் கரோனா தொற்றின் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்கும்படி உயர் நீதிமன்றத்தி;ல் வழங்கு தொடுத்து இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது, மத்திய அரசின் கொள்கை முடிவின்படி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஜேஇஇ/நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்த கரோனா காலக்கட்டத்தால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆதலால் தேர்வு மையங்களுக்குப் பல்வேறு இடங்களில் இருந்து பல கிலோ மீட்டர் கடந்து வந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து வரவேண்டியுள்ளது. அதோடு தூரத்தில் இருந்து வருபவர்கள் கரோனாவின் காரணங்களால் உணவகங்களில் தங்கவோ உணவு அருந்தவோ அச்சமான சூழ்நிலை நிலவுகிறது.
மூக்குக் கண்ணாடி அணியும் மாணவர்கள், கண்ணாடி அணிந்து கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும் தேர்வு எழுதும் போது மூச்சுக் காற்றின் வெப்பத்தினால் கண்ணாடி மறைக்கப்பட்டு சிரமம் எற்படுகிறது. முகக்கவசத்தை எடுத்து விட்டால் நோய்த்தொற்றும் அபாயம் உள்ளது. அதோடு பல்வேறு மாநிலங்களில் இயற்கை சீற்றத்தால் மழை வெள்ளத்தினால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், 10 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால் நடைமுறை சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகி சிலர் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றர். அதோடு மன அழுத்தம் காரணமாக படிப்பதிலும் தேர்வு எழுதுவதிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அச்சத்தின் காரணமாக நன்கு படிக்கும் மாணவர்களால் கூட மனரீதியாக பாதிக்கப்பட்டு தேர்வில் முறையாக கவனம் செலுத்த முடியாமல் அவதியுறுகின்றர். ஆகவே, மாணவர்களின் அச்சம் நீங்கி இயல்பால நிலை வரும்போதுதான் மாணவர்களால் ஆர்வமாக தேர்வு எழுதும் சூழ்நிலை வரும்.
ஆகவே, மத்திய அரசு மாணவர்களின் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் எதிர்கால நலன் கருதியும் ஜேஇஇ/நீட் தேர்வை கரோனா நோய்த்தொற்றுக் கட்டுக்குள் வந்த பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, மத்திய அரசையும் மத்திய கல்வி அமைச்சகத்தையும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.