Skip to content

Flash News: பள்ளி மாணவர்களுக்கு - வெளியான புதிய அறிவிப்பு.!!

 

தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வு விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இன்று உலக சர்க்கரை நோய் தினம்: இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களும் இயல்பான வாழ்க்கை வாழலாம்:Happy news for pension buyers ... Easy to buy pension now !!


உலக சர்க்கரை நோய் தினத்தை (நவ.14) முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையின் சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் வெங்கோஜெயபிரசாத் கூறியதாவது: இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தியாகும் ஒருவகை ஹார்மோன் ஆகும். நாம் எதைச் சாப்பிட்டாலும், சாப்பாட்டில் இருக்கும் சர்க்கரை ரத்தத்தில் கலந்துவிடும். ரத்தக்குழாய்கள் மூலம் இந்த சர்க்கரை அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. காற்று, தண்ணீர், சர்க்கரை ஆகிய மூன்றும் எரிந்து, அதில் கிடைக்கும் ஆற்றல்மூலம்தான் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் வேலைசெய்கிறது. ரத்தக்குழாயில் இருந்து ஒவ்வொரு செல்லுக்கும் எவ்வளவு சர்க்கரை தேவைப்படுகிறது என்பதை இன்சுலின் முடிவுசெய்கிறது. இன்சுலின் சுரப்பு இல்லையெனில் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்காமல் செயல் இழந்துவிடும்.

பப்பாளியால் இதயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

இதய ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, ஆரோக்கியமான உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அதோடு, இதயத் தமனிகளை நேர்த்தியாக, சுத்தமாகப் பராமரிக்க விரும்பினால், கொழுப்பின் அளவைக் குறைவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே விவரித்துள்ள இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைத் தவிர, பப்பாளியில் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அதாவது எல்.டி.எல். அளவுகளைக் குறைக்கும் அம்சங்களும் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், இது இதயத் தமனிகளில் கொழுப்பு வளரும்ம் (தமனித் தடிப்பு) வாய்ப்பைக் குறைக்கிறது. பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் 'சி'யும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

பலவகை நன்மைகளை தரும் ஏலக்காய்:

ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது. ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்

பட்டாசு தீக்காயம் ஏற்பட்டால் ஐஸ்கட்டி வேண்டாம் நண்பர்களே!Don't ice cream in case of firecracker burns friends!


கொரோனா காலத்தில் வந்திருக்கும் தீபாவளி என்பதால் பல்வேறு விசயங்களை நாம் மிக கவனமாக அணுக வேண்டும். உணவு முதல் பட்டாசு வரையில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் மற்றவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பனதே.

பட்டாசு வெடிக்கும் போது ஒரு வேளை தீக்காயம் ஏற்பட்டால் நம்மில் பலரும் செய்யும் ஒரு காரியம் ஐஸ்கட்டிகளை அங்கு வைப்பதும், டூத்பேஸ்ட்டினை தடவுவதும் தான். இதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. டூத்பேஸ்ட்டினை வைப்பதால் காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அது அந்த காயத்தினை மேலும் தீவிரப்படுத்தும். இதனால் நாம் முற்றிலும் இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டால் உடனே ஓடும் நீரில் காயத்தை வைக்க வேண்டும். பின்பு முதலுதவி தந்து மருத்துவ சேவையை நாட வேண்டும். ஒரு போதும் வீட்டில் கை வைத்தியம் பார்க்க வேண்டாம். குறிப்பாக கொப்பளங்கள் ஏதேனும் ஏற்படும் எனில் இதனை நீங்கள் முற்றிலுமாக கைவிட்டுவிட்டு அவசர உதவி மையத்தை அணுகுங்கள்.

தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். துப்பட்டா மற்றும் புடவை போன்றவை அணிந்து பட்டாசு வெடிக்கும் போதும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போதும் குறிப்பிட்ட அளவு இடைவெளியை கடைபிடித்து பட்டாசுகள் வெடிக்கவும்.

இதை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் தான் அதிகமாம்:

இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலானோர் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அதிகளவு புற்று நோய் தாக்கு கிறது.

பெண்களை மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்தான் அதிகளவில் தாக்குகின்றன.
மரபை விட சுற்றுச்சூழல் தான் புற்றுநோயை அதிகளவில் தீர்மானிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் புற்றுநோயக்கும் தொடர்பு உண்டு.

காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிபொருட்கள் இருந்தால் அதை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. துரித உணவு, சமச்சீரற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மையாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.

பல முன்னணி பிரபலங்களும் கேன்சருடன் போராடி வென்றவர்கள் தான். கேன்சர் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும். கேன்சர் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். உடலில் எந்த இடத்தில் வலி இல்லாத கட்டிகள் வந்தாலும் அதை உடனே மருத்துவரிடம் அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.

நெல்லிக்காய், துளசி, அருகம்புல், வில்வம் புற்றுநோயை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதியும் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது.

தீபாவளி நாளில் தமிழகத்தில் பலத்த மழை.. நவம்பர் 15ல் சென்னையில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்


சென்னை : தீபாவளி நாளான நவம்பர் 14ம் தேதி நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு. அதேபோல் தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். நவம்பர் 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் காரியகோவில் அணை பகுதியில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, பாளையங்கோட்டை, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் டிஜிபி அலுவலகம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.இதனிடையே சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 15,16ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் பறிபோன தமிழக அரசின் மருத்துவப் படிப்புகள் மீட்கப்படவேண்டும்: சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்:The medical courses of the state of Tamil Nadu, which were completely snatched away, must be restored: the Doctors' Association for Social Equality


உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான, நூறு விழுக்காடு இடங்களின் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையையும், மீண்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும். அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒரு பெண் குழந்தை கல்வி உதவித் திட்டம்: சிபிஎஸ்இ அறிவிப்பு:

 

சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ அளிக்கும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 10 கடைசி நாளாகும்.

2020-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பெற்றோருக்கு ஒரே ஒரு மகளாக இருக்கும் மாணவிகள், இரண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, பிளஸ் 2 படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான பரிசுக்கும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித் தொகைக்கு, ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து, பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தகுதிபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7.5% உள் ஒதுக்கீட்டால் 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்!

 

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதற்கு முன்பே தமிழக அரசு அந்த சட்ட மசோதாவுக்கான அரசாணையை வெளியிட்டது. மருத்துவம் படிக்க மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "தமிழகத்தில் இந்த ஆண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 18-ம் தேதி அல்லது நவம்பர் 19-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கப்படலாம். ஒரு நாளைக்கு 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ் சில் 304, பி.டி.எஸ் சில் 91 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 16-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்." என்று கூறியுள்ளார்.

1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள் – ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !

 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள் - ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

  லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள் – ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து நிரப்பப்படாமல் உள்ள பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாண்டிச்சேரி பல்கலையில் Deputy & Assistant Registrar பணியிடங்கள் காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு தகுதியான விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு திறமையான பட்டதாரிகள் எங்கள் வலைத்தள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Deputy & Assistant Registrar
பணியிடங்கள் 14
கடைசி தேதி 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Deputy & Assistant Registrar பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Deputy Registrar – 08
  • Assistant Registrar – 06
பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • தற்போது படிப்பை முடித்த புதிய விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,44,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக விண்ணப்பக்கட்டணம் :
  • UR /OBC/EWS விண்ணப்பதாரர்கள் –ரூ.2,000/-
  • SC/ST/PwBD/Ex-Serviceman All Women விண்ணப்பதாரர்கள் –ரூ.1,000/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 27.11.2020ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்ப நகலினை 01.12.2020 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Apply Online


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு !!

 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு !!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பதவிக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஓர் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பானது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு தேவையான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Teaching Assistant / Junior Research Fellow/Subject Matter Specialist (Agro Meteorology)
பணியிடங்கள் 13
கடைசி தேதி 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் 
காலியிடங்கள் :

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அதன் Teaching Assistant/ Junior Research Fellow/ Subject Matter Specialist (Agro Meteorology) பதவிக்கான 13  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TNAU கல்வித்தகுதி:

PH.D / B.Sc (Agriculture/Horticulture) or B.Tech (Horticulture)/ M.Tech  முடித்த விண்ணப்பதாரர்கள் Teaching Assistant / Junior Research Fellow & Other Post  பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

TNAU ஊதியம் :

Junior Research Fellow  பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,200/- முதல் அதிகபட்சம் ரூ.69,937/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

TNAU தேர்ந்தெடுக்கும் முறை:

Junior Research Fellow  பணிக்கு விண்ணப்பித்த பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 12.11.2020 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

Tamil Nadu Agricultural University,
Lawley Road,
Coimbatore-641003.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும் !! – தமிழக அரசில் வேலை நிச்சயம் !!!I

 வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும் !! – தமிழக அரசில் வேலை நிச்சயம் !!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் (Tamil Nadu Government Hand looms & Textiles) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் Driver பணிகள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே வாகனம் ஓட்ட தெரிந்த நல்ல அனுபவமுள்ள விண்ணப்பதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt Handloom & Textile
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 02
கடைசி தேதி 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Government Hand looms & Textiles காலிப்பணியிடங்கள் :

கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் Driver பணிகளுக்கு மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் ஜவுளி துறை – கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கண்டிப்பான முறையில் இலகுவான மற்றும் கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு காலம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


கைத்தறி மற்றும் ஜவுளி துறை ஊதியம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் பெறுவர்.

Government Hand looms & Textiles தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Director of Handlooms & Textiles, 2nd Floor, Kuralagam, Chennai-600108.

Official Site

சென்னை மட்டுமல்ல இந்த 5 மாவட்ட மக்களும் உஷார்.. வானிலை மையம் கனமழை எச்சரிக்கை !Not only Chennai but also the people of these 5 districts are alert .. Weather Center Heavy rain warning!

தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது

மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மீன்வளத்துறை விடுத்த எச்சரிக்கையின் பேரில் இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

உடல் நலம் : *ஒருவருக்கு "ஹைப்போ தைராய்டு" பிரச்சனை எதனால் ஏற்படுகிறது தெரியுமா.??

ஹைப்போ தைராய்டிசம் ஒரு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் ஆகும். நம்முடைய நோயெதிப்பு அமைப்பு நம்முடைய ஆரோக்கியமான செல்களையே தாக்கும் போது ஆன்டி பாடிகளை உருவாக்குகிறது. இதனால் நம் நோயெதிப்பு மண்டலமே நமக்கு எதிராக செயல்படத் துவங்கி விடுகிறது. அதே மாதிரி தைராய்டு சுரப்பி தேவையான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாத போதும் இந்த பிரச்சினை உண்டாகிறது. இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெளிவாக தெரியாது.

ஆனால் கூடிய விரைவிலேயே ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்துவிடும். இந்த ஹைப்போ தைராய்டிசத்தால் இதய பிரச்சினைகள், நரம்பு காயங்கள், கருவுறாமை, மெதுவான வளர்சிதை மாற்றம், குமட்டல், மலச்சிக்கல், நாட்பட்ட சோர்வு, முடி உதிர்தல், குறைந்த பாலுணர்ச்சி, வறண்ட சருமம் மற்றும் விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் தெரிய வருகின்றன.

ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு குறைந்த அளவு மட்டுமே வைட்டமின் டி இருக்கும். இந்த சத்து தான் உடம்பில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் வைட்டமின் டி இவர்களுக்கு குறைவாக இருப்பதால் குடல் கால்சியத்தை உறிஞ்சுவதில்லை. இதனால் இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கிறது. இதைச் சமன் செய்ய தைராய்டு சுரப்பி எலும்புகளில் சேகரிக்கப்பட்ட கால்சியத்தை உறிஞ்ச தூண்டுகிறது. இதனால் எலும்புகள் காலப்போக்கில் பலவீனம் அடைய ஆரம்பிக்கும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் மாற்றம் உண்டாகிறது. எனவே வைட்டமின் டி பற்றாக்குறையை போக்கினாலே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சரி செய்யலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எலும்புகளில் கால்சியம் குறைய குறைய எலும்புகள் மெல்லியதாகி உடைய ஆரம்பித்து விடும். எலும்புகளில் கால்சியம் இழப்புக்கும் வழிவகுத்துவிடும். எனவே ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து இரண்டையும் சரியாக கவனித்து வர வேண்டும்.

ஆயுர்வேத முறையில் இந்த ஹைப்போ தைராய்டிசத்திற்கு என்று சில மருத்துவ முறைகள் உள்ளன. யோகா போன்றவை இதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி ஆயுர்வேத முறைப்படி ஹைப்போ தைராய்டிச நோயாளிகள் எந்த மாதிரியான முறைகளை பின்பற்றி பலன் அடையலாம் என்பதை வாங்க பார்க்கலாம்.

ஆசனங்கள்..

* உஜ்ஜய் பிராணயாமா (மனதை அமைதிப்படுத்தி உடலை வெப்பமாக்கும் யோக சுவாச நுட்ப நிலை )

* சர்வாங்காசனம் (தோள்பட்டை நிற்கும் பயிற்சி) இதுவும் ஹைப்போ தைராய்டிசத்திற்கான சிறந்த யோகா பயிற்சி என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

* நாடி சோதனா பிராணயாமம் (மாற்று நாசி மூச்சுப் பயிற்சி) இது உங்க மெட்டபாலிசத்தை சமன்செய்ய உதவுகிறது.

மேற்கண்ட யோகா பயிற்சிகள் ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று ஆயுர்வேத முறைகள் கூறுகின்றன.

தைராய்டு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

* தைராய்டு நோயாளிகள் அடிக்கடி அவர்களுடைய தைராய்டு அளவை பரிசோதிக்க வேண்டும்.

* தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் தைராய்டு ஹார்மோன் ஒழுங்காக வேலை செய்யும். மேலும் உங்க கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் தேங்கியுள்ள நச்சுக்களை இதன் மூலம் நீக்கி விடலாம்.

* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கிய உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மை உள்ளவர்கள் வைட்டமின் பி அடங்கிய உணவுகளை எடுத்து வர வேண்டும். தினமும் வைட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுப்பது உங்க ஹைப்போ தைராய்டிச பிரச்சனைகளை குறைக்க உதவும்.

* ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தைராய்டு நோயாளிகள் செய்யக் கூடாதவை:

* தைராய்டு நோயாளிகள் புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்ற பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். சிகரெட் புகைப்பதால் தைராய்டு சுரப்பியில் உள்ள அயோடைடு சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் மல்டினோடூலர் கோயிட்ரே சுருங்குவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

* மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளான கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் உணவுகள் வேண்டாம்.

* காபி மற்றும் சர்க்கரைக்கு நோ சொல்லுங்கள்.

* தைராய்டு பிரச்சினைக்கு நீங்களாகவே மருந்து எடுப்பதை தவிருங்கள். மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை மேற்கொண்ட பிறகே மருந்து எடுக்க வேண்டும்.

மேற்கண்ட டிப்ஸ்கள் தைராய்டு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

குடற்புண்களை ஆற்றும் சோம்பு:

 

சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும். அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

வேதனை தரும் கல்லீரலில் பாதிப்பு.., கல்லீரலை வலுவாக்கும் துளசியின் நன்மைகள்:

 

கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.*

ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.*

கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.*

இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.*

முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.*

இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தீபாவளி நேரலை பட்டிமன்றம்: ஆசிரியர்கள் ஏற்பாடு:

 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முழுக்க முழுக்கப் பள்ளி மாணவர்களைக் கொண்டு இணையதளம் மூலமாக ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் எழுத்தாளர் மற்றும் ஆசிரியரான ஆதலையூர் சூரியகுமார்.

திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்றம் சார்பாக நடைபெறும் இந்தப் பட்டிமன்றத்தை அப்பள்ளியின் ஆசிரியரான ஆதலையூர் சூரியகுமாரே நடுவராக இருந்து நெறிப்படுத்துகிறார்.

இந்தத் தீபாவளியின்போது அழிக்கப்பட வேண்டியது நரகாசுரனா... கரோனாசுரனா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இணைய வழியில் நடக்கிறது.

கரோனாசுரனே என்ற அணியில், மதுரை, எம்.சி. மாநகராட்சிப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மாசாணம், மேலூர் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி ஸ்வேதா, கொண்டபெத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பிருந்தா, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி, சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நரகாசுரனே என்ற அணியில் கும்பகோணம் பானாதுறை அரசு மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் மாருதிமாலன், சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பூரணி, சி.பி.வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி காவியா, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சி குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசிய பட்டிமன்ற நடுவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான ஆதலையூர் சூரியகுமார், "பள்ளி மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பல மாதங்களாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுடைய திறமை அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தபட வேண்டும். அந்த வகையில் அவர்களுடைய பேச்சாற்றலை, கருத்துப் பரிமாற்றத் திறனை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கூட அளவிலும் பட்டிமன்ற அணி உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் இலக்கிய ஆற்றலை வெளிக்கொண்டு வர முடியும். அதற்கான முன்முயற்சிதான் இது. பொதுவெளியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கும்பொழுது மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளைப் பல மடங்கு பெருக்கிக்கொள்ள முடியும்.

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என்று அனைத்து வகைப் பள்ளி மாணவர்களும் பட்டிமன்றத்தில் பங்கேற்கிறார்கள். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பரவலாக மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் தங்களது தனித்திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். கலாச்சாரப் பரிமாற்றம் நிகழும். இதற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது' என்றார்.

மதுரை கிழக்கு கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தென்னவன், சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் முனீஸ்வரன், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஹரிதேவன், திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரி நூலகர் ஜெயபாரதி ஆகியோர் இந்தப் பட்டிமன்ற நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுகின்றனர். பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைப் பேச்சாளரும் கட்டுரையாளருமான டாக்டர் ஞானசேகர் பரிசுகளை வழங்குகிறார்.

ஹெச்.எம்.,கள் மாற்றம் உயர்மட்ட விசாரணை நடத்த கோரிக்கை:


இது குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள், பள்ளிகளுக்கு வந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இடமாறுதல் கவுன்சிலிங்வீட்டில் இருந்தவாறு, மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' வழியே பாடம் நடத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. அதனால், ஆசிரியர்களுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வெற்றி செல்வி பிறப்பித்து உள்ளார். இடமாறுதல் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் விபரம்:ஜீவா -- பள்ளிப்பட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; அனிதா - -ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி; நிர்மலா - -கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி; பூபால முருகன் - -பாடியநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி; பிரேமா- - பொதட்டூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; சாந்திமூர்த்தி-

- கொரட்டூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.வழக்கமாக தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல்கள், பள்ளி கல்வி துறையின் பொது கவுன்சிலிங் வழியாக, விருப்ப மாறுதலாகவே வழங்கப்படும்.குற்றச்சாட்டுஅதேபோல், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் இடமாறுதல் உத்தரவை, பள்ளி கல்வி விதிகளின்படி, மேல்நிலை கல்வி இணை இயக்குனர் மட்டுமே பிறப்பிப்பார்.ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியே, நேரடியாக இடமாறுதல் உத்தரவை பிறப்பித்துள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் காலியிடங்களில், உடனடியாக வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், அவர்களுக்கான இடங்களில், வேறு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாக மாறுதல் என்ற பெயரில் கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளதால், தலைமை ஆசிரியர்களும், முதுநிலை ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதன் பின்னணியில், முறைகேடுகள் ஏதும் நடந்துள்ளதா என, உயர்மட்ட அளவில் விசாரிக்க வேண்டும் என, இணை இயக்குனர் குமார் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோரிடம், தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

SSC – யில் 6000+ காலிப்பணியிடங்கள்! Clerk, Data Entry Operator உட்பட பல பணிகள்!

IMG_20201110_100358
 



Official notice has been issued to fill the vacancies in the Staff Selection Commission (SSC) for the posts of Lower Division Clerk, Junior Secretariat Assistant, Postal Assistant, Data Entry Operator. Applications are welcome to fill the vacancies for this job. Must have completed 12th course for this. Interested and eligible candidates can send their application online from 06.11.2020 to 15.12.2020.

Job Division: Government Job

vacancy:

This includes 6000+ vacancies for jobs such as Lower Division Clerk, Junior Secretariat Assistant, Postal Assistant, Data Entry Operator.

Educational Qualification:

Applicants should have completed 12th course for this job.

Age Limit:

Applicants must be between 18 and 27 years of age for this job.

Salary:

Lower Divisional Clerk / Junior Secretariat Assistant - Monthly Pay Level-2 (Rs. 19,900-63,200) per job. Will be paid.

Postal Assistant / Sorting Assistant - Pay Level-4 (Rs. 25,500-81,100) per month for work. Will be paid.

Data Entry Operators - Pay Level-4 (Rs. 25,500-81,100) per month for work.

Data Entry Operator, Grade ‘A’ - Pay Level-4 (Rs. 25,500-81,100) per month for the job.

How to apply:

Applicants can fill up the application form given to them and send the application online from 06.11.2020 to 15.12.2020. Applicants will be selected through interview.

Application Fee: General Candidates - Individuals pay a fee of Rs 100 / -.

 SC / ST - Nil

Note:

Applicants going for interview are requested to bring along their required certificates.

Workplace: All Over India

Important Dates:

Start Date: 06.11.2020

Last Date: 15.12.2020

Important Links:

Notification Link: Click here

Application form Link: Click here

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து 12-ம் தேதி முதல்வர் அறிவிப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன் :

 senkottaian

 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 12-ம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகு ஆன்லைன் வகுப்பு அல்லது டி.வி மூலம் கல்வி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் பொடி:

 

இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

அடேங்கப்பா கருப்பு திராட்சை பழத்தில் இவ்வளவு சத்து இருக்கா? இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..!

 
திராட்சைப் பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் அதை சுவைக்காக மட்டுமே சாப்பிடுவோம். சுவை என்கிற விசயத்தைத் தாண்டி அதில் ஏராளமான சத்துக்களும் இருக்கின்றன. கருப்பு, சிவப்பு, பச்சை என மூன்றுநிற திராட்சைகளும் உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும்.

அதிலும் கருப்பு திராட்சைக்கு ஏராளமான நல்ல குணங்கள் உண்டு. நம் உடலுக்கு அது பல சத்துக்களையும் உருவாக்கும். ஒரு கையளவு கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பல நன்மைகளும் கிடைக்கும். கருப்பு திராட்சையில் பாலிபீனால்கள் உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது. அதேபோல் கருப்பு திராட்சை புற்றுநோய் வராமலும் எதிர்த்து போரிடும்.

அதேபோல் கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு வயிற்றுப்_பிரச்னைகளும் தீரும். வயிறு உப்பிசம், அஜீரணக்கோளறும் நீங்கும். இதேபோல் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் கருப்பு திராட்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. யூரிக் அமில அளவைக் குறித்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து சிறுநீரகத்தை ஆரோக்கியம் ஆக்கும். கருப்பு திராட்சை சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

கொலஸ்டிராலை சமநிலையோடு வைத்திருக்கும். சீக்கிரம் முதுமை எட்டாமலும், சருமம் வறட்சியை அடையாமலும் பார்த்துக்கொள்ளும். அதேபோல் கருப்பு திராட்சையின் விதைகளை அரைத்து, அதனை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முடி உதிர்வு, பொடுகு பிரச்னை தீரும். கண்கள் ஆரோக்கியத்திலும் கருப்பு திராட்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. தினம் ஒரு கையளவு திராட்சை சாப்பிட்டால் போதும். கருப்பு திராட்சை ஜீஸ் தினமும் காலையில் குடித்துவர ஒற்றைத் தலைவலியும் போய்விடும். மலச்சிக்கலையும் தடுக்கும்.

கரும்பு திங்க கூலியா? எனக் கேட்பதைப்போல் நாமும் தினமும் ஒரு கையளவு இனி கருப்பு திராட்சையை சாப்பிடுவோம்.

மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு 50% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு :

1589018761832

தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள், உயா் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் உள்ள எம்டி, எம்எஸ், டிஎம், எம்சிஹெச், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான இடங்களில் அரசு மருத்துவா்கள் பெரும்பான்மையாக சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், உயா் சிறப்புப் படிப்புகளும் நீட் தோ்வு வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகின்றன. முதுநிலை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை 50 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீதம் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வந்தது. அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் அதுதொடா்பான உத்தரவுகளின்படி 2017-க்குப் பிறகு அந்த நடைமுறையைத் தொடர இயலவில்லை.

டிஎம், எம்சிஹெச் ஆகிய உயா் சிறப்புப் படிப்புகளில் தமிழகத்தில் 190 இடங்கள் உள்ளன. அவை அனைத்தையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம்தான் கலந்தாய்வு மூலம் இதுவரை நிரப்பி வருகிறது. மருத்துவ மேற்படிப்புகளிலும், குறிப்பாக, உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு அரசு மருத்துவா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் வாதங்களும், கோரிக்கைகளும் விசாரணையின்போது முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இருவேறு அரசாணைகளை பிறப்பித்துள்ளது.

அதில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை:

எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி 50 சதவீதம் மாநில ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். அதில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பொது இடங்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்குத் தனியாா் மருத்துவா்களும், அரசு மருத்துவா்களும் போட்டியிடலாம்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு மருத்துவா்கள், அப்படிப்பை முடித்து சிறப்பு படிப்புகளுக்குச் செல்லும் வரை அரசுப் பணியிலேயே தொடர வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான அரசாணை:

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசு சேவையில் உள்ள மருத்துவா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ளவை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு (உயா் சிறப்பு படிப்புகள்) மதிப்பெண் அடிப்படையில் மாநில மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழுவே மாணவா் சோ்க்கையை நடத்தும்.

மாநில ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெறும் அரசு மருத்துவா்கள், தாங்கள் பணி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவப் பணிகளிலேயே நீடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறைச் செயலா் விளக்கம்: இதனிடையே, டிஎம், எம்சிஹெச் உயா் சிறப்பு படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் முழுவதும் அரசு மருத்துவா்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பல்வேறு விமா்சனங்களை எழுப்பியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்து தனியாா் மருத்துவப் பணியாற்றும் மருத்துவா்களால் மாநில ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெற இயலாத நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

மருத்துவ உயா் சிறப்புப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் அரசுப் பணியில் இல்லாத அனைத்து மருத்துவா்களும் போட்டியிட முடியும். நீதிமன்ற ஆணை மற்றும் அரசுத் தலைமை வழக்குரைஞா்களின் ஆலோசனையின் பேரில் அரசு மருத்துவ சேவைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக அரசுப் பணியில் இல்லாத எந்த மருத்துவரின் நலனோ உரிமைகளோ பாதிக்கப்படாது என்றாா் அவா்.

10, 12-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

 

10, 12-வது தேர்ச்சியா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

 இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Electrical Technician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TRB - போட்டித்தேர்வு மூலமாகவே இனி ( SGT / BT ) ஆசிரியர் பணி மற்றும் TET சான்றிதழ் காலம் நீட்டிப்பா ? CM CELL Reply.

 

 images%252896%2529

அய்யா வணக்கம்.நான் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 0.11 வெயிட்டேஜ் வித்தியாசத்தில் பணி வாய்ப்பினை இழந்தவன்.எங்களுக்கு பணி வழங்குவதாக ஒரு நான்கைந்து ஆண்டுகளாக தினந்தோறும் அறிக்கை விட்டு எங்களை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியிலே வைத்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அய்யா திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவ்த்துக்கொள்கிறோம்.அய்யா அவ்வாறு சொல்லாமல் இருந்திருந்தால் நான் கூட தற்கொலை செய்திருப்பேன் . இன்றைய தேதி வரையிலும் நாங்கள் உயிரோடு இருப்பதற்கு அய்யா அவர்களே காரணம்.எங்களுக்கு அடுத்து அமையவிருக்கும் தி.மு.க. ஆட்சியில் 80000 தகுதிதேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பணி வழங்கப்படும் என்ற உறுதியினை மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.ஆனால் எங்களது தகுதித்தேர்வு சான்றிதழ் காலாவதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.காலாவதியான தகுதிதேர்வு சான்றிதழை வைத்து எப்படி பணி வழங்குவார்கள் எனத் தெரியவில்லை.ஆகவே எங்களது தகுதிதேர்வு சான்றிதழின் கடைசி நாள் எது என்பதைத் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

CM CELL Reply :

நிராகரிக்கப்பட்டது . ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையிலுள்ள விதிகளின்படியே தெரிவு பணிகளை மேற்கொள்ளுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் படி SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் தற்போது உள்ள அரசாணையின்படி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். எனினும் சான்றிதழ் தகுதி சார்ந்து வேறு அரசாணை வெளியிடப்படின் உரிய தகவல் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் கனிவுடன் தெரிவிக்கலாகிறது . ஆதேவா.ஓ.மு.எண் 5305.இ 4.2020 , நாள் : 31.10.2020

6,000 மத்திய/மாநில அரசு வேலை ;

 

 வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை

பதவியின் பெயர் : Data Entry Operator

நிறுவனத்தின் பெயர் : மத்திய அரசுத் துறை

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பணியிடத்திற்குக் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் : 6,000

சம்பளம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாத சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் : கடைசி நாள் : 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பத்தாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் சோதனை மற்றும் தட்டச்சு சோதனை மூலம் தகுதியானவர்கள் . அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : https://ssc.nic.in/