அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலைபட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர்
பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்லதடை
விதிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு,
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு
அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில்
நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னையில், 41 மையங்களில், 15ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை,
10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை,
9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி
கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, 'பால் பாய்ண்ட்' பேனா, ஹால் டிக்கெட்
மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேர்வு
மையத்திற்குள்வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும்
சோதனையிடுவர்.